உரோமப் பண்ணைத் தொழில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பின்லாந்தின் ஆஸ்ட்ரோபாத்னியா என்ற பகுதியில் உள்ள ஒரு உரோமப் பண்ணை
ஒரு உரோமக்கீரி பண்ணை (1900-க்குப் பின்னர்)
ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஒரு உரோமக்கீரிப் பண்ணை
போலந்தில் உள்ள ஒரு உரோமக்கீரிப் பண்ணை

உரோமப் பண்ணைத் தொழில் (Fur farming) என்பது சில வகையான விலங்குகளை அவற்றின் உரோமங்களுக்காக இனப்பெருக்கம் செய்து வளர்ப்பது ஆகும்.

உலகில் பண்ணைத் தொழிலாகச் செய்யப்படும் உரோம உற்பத்தியில் பெரும்பாலானவை ஐரோப்பிய பண்ணையார்களால் மேற்கொள்ளப்படுகின்றன. 2018-ம் ஆண்டு நிலவரப்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் 22 நாடுகளில் 5,000 உரோமப் பண்ணைகள் அமைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக உலக பண்ணை உரோம உற்பத்தியில் இந்த உற்பத்திப் பகுதிகளின் பங்கு மட்டும் 50% என்பது குறிப்பிடத்தக்கது.[1][2] ஐரோப்பிய ஒன்றியம் உலகளாவிய உரோமக்கீரி (mink) உரோம உற்பத்தியில் 63 சதவிகிதமும் நரி உரோம உற்பத்தியில் 70 சதவிகிதமும் பங்காற்றுகிறது. உலக உரோமக்கீரி உற்பத்தியில் தோராயமாக 28 சதவிகித பங்களிப்புடன் டென்மார்க் முன்னணி நாடாக உள்ளது. உலகின் முதல் மூன்று உரோமத் தயாரிப்பு நாடுகளாவன டென்மார்க் (முன்பு), போலந்து மற்றும் சீனா.[3] ஐக்கிய அமெரிக்காவிற்கு நரி உரோமத் தோல்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடாக பின்லாந்து விளங்குகிறது. உரோமத் தோல்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக ஐக்கிய அமெரிக்கா இருக்கிறது. இதன் முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் சீனா, ரஷ்யா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அடங்கும். மொத்த ஏற்றுமதியில் 1998-ல் 22% ஆக இருந்த ஆசியாவிற்கான ஏற்றுமதிகள் 2002-ல் 47% ஆக வளர்ந்தது.[4] 2012-ம் ஆண்டு நிலவரப்படி, உரோமங்களுக்கான உலகின் மிகப்பெரிய விற்பனைச் சந்தையாக ரஷ்யா விளங்குகிறது.[5][6] உரோமத் தோல்களை இறக்குமதி செய்யும் உலகின் மிகப்பெரிய நாடாகவும், தயாரிப்பு முடிந்த உரோமத் தயாரிப்புகளின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும் சீனா உள்ளது.[7]

ஆஸ்திரியா,[8][9] குரோஷியா,[9][10] ஐக்கிய இராச்சியம்,[11][12] செக் குடியரசு,[13] நெதர்லாந்து (மார்ச் 2021 முதல்),[14] நார்வே (பிப்ரவரி 2025 முதல்),[15] இத்தாலி (ஜூன் 2022 முதல்)[16] ஆகிய நாடுகளில் உரோமப் பண்ணைத் தொழில் தடைசெய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உரோமப் பண்ணைத் தொழிலுக்குக் கடும் விதிமுறைகள் விதிக்கப்பட்டு அங்கு உரோமப் பண்ணைகள் முற்றிலுமாக இல்லாமல் போயின.[9] சில நாடுகளில் குறிப்பிட்ட வகையான விலங்குகளின் உரோமம் வளர்ப்பதற்கு மட்டும் தடை உள்ளது.

விலங்குரிமை செயற்பாட்டாளர்களின் முயற்சி, அதன் விளைவாக உரோம ஆடை வடிவமைப்பாளர்களின் செயற்பாட்டுத் தொய்வு என பல்வேறு காரணங்களினாலும் 1980-களின் பிற்பகுதியிலும் 1990-களிலும் உரோமத்தின் தேவை குறையத் துவங்கியது. 2000-ம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து இந்நிலை திடீரென மாறத் துவங்கி உலகெங்கிலும் உரோம விற்பனையானது வரலாறு காணாத வண்ணம் உயர்ந்தது. இது உரோம வேலைப்பாடுகளில் புகுந்த புதிய தொழிற்நுட்பங்களாலும், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் செலவழிப்பு வருமானத்தில் ஏற்பட்ட திடீர் உயர்வினாலும் இந்நிலை மேலும் வலுப்பெற்றது. இந்த வளர்ந்து வரும் தேவையானது சீனா, போலந்து ஆகிய நாடுகளில் மேலும் விரிவான உரோமப் பண்ணைத் தொழில் நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

கோவிட்-19 பொருந்தொற்றின் போது, உரோமக்கீரி–மனித தொடர்பின் மூலம் நோய்த்தொற்று மிகவும் எளிதில் பரவக்கூடியதாக இருந்ததால் பல நாடுகளின் உரோமக்கீரிப் பண்ணைகளின் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்ததும் அது கோவிட்-19 தடுப்பூசிக்கு எதிராகச் செயல்பட வல்லது என்பதும் பரவலான அச்சத்தை ஏற்படுத்தியது.[17] நெதர்லாந்தில் உள்ள பல உரோமக்கீரிப் பண்ணைகளில் ஜூன் 2020 முதல் விலங்குகள் அழிக்கப்பட்டு பண்ணைகள் முழுவதுமாக அகற்றப்பட்டன. ஆகஸ்ட் 2020-ல், அதுவரை 1 ஜனவரி 2024 முதல் மூடப்படவிருந்த உரோமப் பண்ணைகள் 1 மார்ச் 2021 முதலாகவே மூடப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.[14][18] ஜூலை 2020-ல், ஸ்பெயின் 100,000 உரோமக்கீரிகளை கொன்று அழித்தது.[17] நவம்பர் 6, 2020 அன்று கோவிட்-19 கிருமியின் பிறழ்ந்த திரிபு வடிவம் ஒன்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் டென்மார்க் தன்னிடமிருந்த 17 மில்லியன் உரோமக்கீரிகள் அனைத்தையும் அவசரநிலை காரணமாக மொத்தமாக அழிக்கப் போவதாக அறிவித்தது. இந்த புதிய வடிவக் கிருமியினால் குறைந்தது ஐந்து பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதே இதற்குக் காரணம்.[19] நோய் பரவும் அபாயத்தைக் கட்டுப்படுத்த எண்ணி 11 நவம்பர் 2020 அன்று நெதர்லாந்து மீண்டும் தனது உரோமக்கீரிப் பண்ணைகளை மூடுவதற்கான கெடுவை 1 ஜனவரி 2021-க்கு மேலும் முன்னோக்கி நகர்த்தியது.[20] உலகளவில் 40% உரோமக்கீரி உற்பத்தியைச் செய்து வந்த நிறுவனமான கோபன்ஹேகன் ஃபர் 2020 நவம்பர் நடுப்பகுதியில் நிகழும் சூழ்நிலைகளில் உலகளாவிய உரோம வர்த்தகத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளில் படிப்படியாகத் தனது செயல்பாடுகளை நிறுத்தப்போவதாக அறிவித்தது.[21]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள் தரவுகள்[தொகு]

  1. "Fur Farming Europe: Regulations, Welfur and Sustainability • We Are Fur". Archived from the original on 25 November 2018. பார்க்கப்பட்ட நாள் 24 November 2018.
  2. International Fur Trade Federation. "The Socio-Economic Impact of International Fur Farming" (PDF). Archived from the original (PDF) on 13 July 2011. பார்க்கப்பட்ட நாள் 7 May 2009.
  3. "The Polish fur industry is in crisis". animainternational.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-30.
  4. "Industry & Trade Summary – Jan 2004" (PDF). Archived (PDF) from the original on 27 May 2010. பார்க்கப்பட்ட நாள் 8 January 2010.
  5. "Fur flies as Moscow faces a challenge to its cosy addiction". The Independent (in ஆங்கிலம்). 2012-12-13. Archived from the original on 2013-07-19.
  6. "Fur is alive and kicking, despite campaigns" (in en). Reuters. 2008-03-04. https://www.reuters.com/article/us-fur-idUSHKG33984220080304. 
  7. "What are the rules on wearing fur?". BBC News. 12 January 2006 இம் மூலத்தில் இருந்து 23 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171223040942/http://news.bbc.co.uk/2/hi/uk_news/magazine/4603032.stm. 
  8. Charles Clover Europe kicks up a stink over British move to ban mink, Telegraph.co.uk, 13 May 1999
  9. 9.0 9.1 9.2 Fur Farming Legislation Around The World, Infurmation.com
  10. Fur Farmers Backed into a Corner, fashionFINLAND.com, 2 January 2007
  11. MPs vote to ban fur farms பரணிடப்பட்டது 7 ஆகத்து 2016 at the வந்தவழி இயந்திரம். BBC News, 22 November 2000. Retrieved on 10 May 2012.
  12. Fur Farming (Prohibition) (Scotland) Act 2002 பரணிடப்பட்டது 14 அக்டோபர் 2012 at the வந்தவழி இயந்திரம். legislation.gov.uk. Retrieved on 28 May 2012.
  13. "Czech Fur Farming Ban Signed by President Zeman". Fur Free Alliance. Fur Free Alliance. 5 August 2017. Archived from the original on 10 August 2017. பார்க்கப்பட்ட நாள் 10 August 2017.
  14. 14.0 14.1 Sacha Kester (27 August 2020). "Op 1 maart volgend jaar is het afgelopen met de nertsenhouderij in Nederland" (in nl). de Volkskrant. https://www.volkskrant.nl/nieuws-achtergrond/op-1-maart-volgend-jaar-is-het-afgelopen-met-de-nertsenhouderij-in-nederland~b2b8743e/. 
  15. "Norway to ban fur farms as fox, mink go out of fashion". The Straits Times. 15 January 2018. Archived from the original on 16 January 2018. பார்க்கப்பட்ட நாள் 15 January 2018.
  16. "In an historic vote, Italy to ban fur farming and shut down all mink farms within six months". 21 December 2021.
  17. 17.0 17.1 Helen Briggs (9 November 2020). "What's the science behind mink and coronavirus?". BBC News. https://www.bbc.com/news/science-environment-54842643. 
  18. Ties Cleven, Ad de Koning (6 June 2020). "Nertsenbedrijf in Deurne als eerste geruimd: 'Dit is voor ons ook nieuw'" (in nl). Brabants Dagblad இம் மூலத்தில் இருந்து 6 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200606101828/https://www.bd.nl/brabant/nertsenbedrijf-in-deurne-als-eerste-geruimd-dit-is-voor-ons-ook-nieuw~ae5ae212/. 
  19. "Denmark to cull up to 17 million mink amid coronavirus fears". BBC News. 6 November 2020. https://www.bbc.com/news/world-europe-54818615. 
  20. "OMT adviseert alle nertsenfokkerijen eind december al te sluiten" (in nl). Nu.nl. 11 November 2020. https://www.nu.nl/politiek/6089846/omt-adviseert-alle-nertsenfokkerijen-eind-december-al-te-sluiten.html. 
  21. Sophie Lewis (14 November 2020). "Major fur auctioneer to shut down following link between mink and COVID-19 in Demark". CBS News. https://www.cbsnews.com/news/kopenhagen-fur-shut-down-mink-covid-19-demark/. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோமப்_பண்ணைத்_தொழில்&oldid=3519663" இலிருந்து மீள்விக்கப்பட்டது