வாலரி ஜிரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாலரி ஜிரோ
2018-ல் ஜிரோ
பிறப்பு24 மார்ச்சு 1974 (1974-03-24) (அகவை 50)
கியூபெக், கனடா[1]
கல்விமாண்ட்ரியல் பல்கலைக்கழகம் (எல்.எல்.பி., 1997; எல்.எல்.எம்., 2003, பி.எச்.டி., 2012)[2]
பணிமெய்யியல் அறிஞர், வழக்கறிஞர், விலங்குரிமைச் செயற்பாட்டாளர்
வலைத்தளம்
www.valerygiroux.com

வாலரி ஜிரோ (Valéry Giroux) (பிறப்பு 24 மார்ச் 1974) ஒரு கனடிய மெய்யியல் அறிஞரும், வழக்கறிஞரும், விலங்குரிமை ஆர்வலரும் ஆவார். கியூபெக்கைச் சேர்ந்த இவர் மாண்ட்ரியல் பல்கலைக்கழகம் சட்டத் துறையில் துணைப் பேராசிரியராகவும், சென்டர் டி ரீசெர்ச் என் எதிக் மையத்தின் ("நெறிமுறைகள் ஆராய்ச்சி மையம்") இணை இயக்குநராகவும், ஆக்ஸ்போர்டு விலங்கு நெறியியல் மையத்தின் உறுப்பினராகவும், விலங்கு நெறிமுறைகள் மற்றும் நனிசைவம் சார்ந்த ஆசிரியராகவும் பேச்சாளராகவும் உள்ளார். விலங்கினவாத எதிர்ப்பு ஆய்விதழான "எல்'அமோர்ஸ்" (L'Amorce) இதழின் இணை ஆசிரியராக விலங்கினவாத எதிர்க்கருத்துக்களில் கவனம் செலுத்தி வருகிறார். தனது மெய்யியல் கருத்துக்களில் அனைத்து உணர்திற உயிரினங்களுக்கும் சமமான தார்மீகக் உரிமைகளை முன்னிறுத்தியும், மனிதரல்லா விலங்குகள் மனிதர்களால் பயன்படுத்தப்படும் செயல்களை நியாயப்படுத்துவதை எதிர்த்தும், அனைத்து உணர்திற உயிரினங்களுக்கும் இனபேதமின்றி அவற்றின் தனிப்பட்ட சுதந்திரத்திற்காகவும் உரிமைக்காகவும் வாதாடுபவர்.

படைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Valery Giroux (auteur de L'antispécisme)". Babelio (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 2021-08-28.
  2. "Valéry Giroux Curriculum Vitae". umontreal.academia.edu. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலரி_ஜிரோ&oldid=3846967" இலிருந்து மீள்விக்கப்பட்டது