விலங்கினவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரண்டுமே உணர்வுள்ள விலங்குகள்தான் என்றாலும், நாய் (வலம்) செல்லப்பிராணியாக சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகையில் மாடு (இடம்) பெரும்பாலும் கால்நடையாகக் கருதப்பட்டு உண்பதற்காகக் கொல்லப்படுகிறது. இரண்டுமே இன்பதுன்பங்கள் இரண்டையும் அனுபவிக்கும் தன்மை கொண்டவை. இவ்வாறு ஒத்த நலத்தேவைகள் இருந்தும் ஒரு இன உறுப்பினரை மற்றொரு இன உறுப்பினரைக் காட்டிலும் தார்மீக ரீதியில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி அந்த மற்றொரு இன உறுப்பினரின் நியாயமான தேவைகளை மறுப்பதே விலங்கினவாதம் ஆகும்.

விலங்கினவாதம் (ஆங்கிலம்: Speciesism) என்பது இன உறுப்பின் அடிப்படையில் காட்டப்படும் பாகுபாடு ஆகும்.[1][2][3] அஃதாவது இருவேறு இன விலங்குகளின் நலத்தேவைகள் ஒன்றாக இருப்பினும் ஒரு இனத்தை மேன்மையாகவும் மற்றொன்றை தாழ்மையாகவும் நடத்தும் பாகுபாட்டை இச்சொல் குறிக்கிறது.[4][5] குறிப்பாகக் கூறின், ஒத்த நலத்தேவைகள் உள்ள இருவேறு இன விலங்குகளை அவற்றின் இன அடிப்படையில் வேறுபடுத்தி அத்தேவைகளை சமமாகக் கருதத் தவறும் செயலே விலங்கினவாதம் எனப்படும். இச்சொல் முதன்முதலில் 1970-ல் ரிச்சர்ட் ரைடர் என்ற அறிஞரால் பயன்படுத்தப்பட்டது. விலங்கினவாதத்தை "தனது சொந்த இனத்தின் நலன்களுக்கு ஆதரவாகவும் மற்ற இனங்களின் நலன்களுக்கு எதிராகவும் எடுக்கும் ஓரவஞ்சனையுடன் கூடிய ஒரு சார்பு நிலை" என்று ரைடர் விவரிக்கிறார்.[6] விலங்குகள் தங்களுக்காகத்தான் படைக்கப்பட்டவை என்றும் விலங்குகளைத் தங்கள் தேவைக்கேற்பப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை தங்களுக்கு உண்டு என்றும் மனிதர்கள் கருதுவதற்கு விலங்கினவாதமே காரணம் என்றும் சமூகத்தில் விலங்கினவாதச் சிந்தனை வெகுவாகவே விரவிக்கிடக்கிறது என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்.[7][8][9] விலங்குகளை மனிதர்கள் பயன்படுத்திக் கொள்வதையும் விலங்குச் சுரண்டலையும் ஆதரிக்கும் நபர்கள் நிறவாதம், பால்வாதம் போன்ற மற்ற பாகுபாடுகளையும் ஆதரிப்பவர்களாக இருப்பர் என்று மென்மேலும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கூடுதலாக, இஃது ஒடுக்குமுறைகளையும் பாரபட்சங்களையும் நியாயப்படுத்தும் மனித ஆதிக்க எண்ணத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது என்றும் இவ்வாராய்ச்சிகள் நிறுவுகின்றன.[8][9][10][11][12]

நிறவாதம், பால்வாதம், தற்பாலினர் வெறுப்பு போன்ற பாரபட்சங்களுக்கும் விலங்கினவாதத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளதென்று அறிஞர்கள் நிறுவுகின்றனர்.[1][11][13][14][15][16] பாகுபாட்டைக் குறிக்கும் ஒரு சொல்லாக விலங்கினவாதம் முதன்முதலில் 1970-ம் ஆண்டு விலங்குப் பரிசோதனைக்கு எதிரான போராட்டம் ஒன்றில் பயன்படுத்தப்பட்டது. விலங்குப்பண்ணைத் தொழில், விலங்கு அறுப்பு, வன்விளையாட்டுகள் (காளைச் சண்டை, ஜல்லிக்கட்டு, ரோடியோ), விலங்குத் தோல் மற்றும் உரோமத் தயாரிப்பு, விலங்குகளின் மீதான பரிசோதனை[17][18][19][20] ஆகியவற்றை உள்ளடக்கிய விலங்குத் தொழிற் கூட்டின் இயக்கத்தில் விலங்கினவாதம் தலையாய பங்கு வகிக்கிறது என்று அறிஞர்களும் விலங்குரிமை ஆர்வலர்களும் சுட்டுகின்றனர்.[21] மேலும் காட்டில் வாழும் விலங்குகளின் இயற்கை இன்னல்களை களையாதிருத்தல்,[22][23] ஒரு சில விலங்குகளை தொல்லை தரும் இனங்களாகப் பகுத்து பின்னர் அப்பகுப்பின் அடிப்படையில் அவ்விலங்கினங்களை அழித்தல் போன்ற செயல்களனைத்தையும் விலங்கினவாதத்தின் வெளிப்பாடாகவே அறிஞர்கள் கருதுகின்றனர்.[24] ஒரு குறிப்பிட்ட இனத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக ஒரு விலங்கின் இயற்கையான நலத்தேவைகளை தடை செய்து அவ்விலங்கினை ஒடுக்குவதற்குக் காரணமாக விலங்கினவாதம் அமைவதால் அதனை அறிஞர்கள் பொன் விதியினை மீறும் பாகுபாடு என்றழைக்கின்றனர்.[14]

விலங்கினவாதத்தை ஆராய்ந்து வரையறுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பீட்டர் சிங்கர், ஆஸ்கார் ஹோர்டா, ஸ்டீவன் எம். வைஸ், கேரி எல். ஃபிரான்சியோனி, மெலனி ஜாய், டேவிட் நிபர்ட், ஸ்டீவன் பெஸ்ட், இங்க்ரிட் நியூகர்க் ஆகியோர் ஆவர். கல்வியாளர்களிடையே, அறவொழுக்கம், நெறிமுறைகள், ஆகியவற்றோடு விலங்கினவாதக் கருத்தும் கணிசமான தத்துவ விவாதத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது.[30]

விலங்குத் தொழிற் கூட்டுடனான தொடர்பு[தொகு]

தொழிற்சாலைப் பண்ணைகள், விலங்கு உடற்கூறாய்வு, வேட்டையாடுதல் மற்றும் மீன் பிடித்தல், உயிரியல் பூங்காக்கள், வனவிலங்கு வர்த்தகம் போன்ற விலங்குத் தொழிற்கூட்டின் உள்ளடக்க செயற்பாடுகளின் கருத்தியல் அச்சாணியாக விலங்கினவாதம் விளங்குவதாக பியர்ஸ் பெய்ர்ன் கருதுகிறார்.[21] விலங்குத் தொழிற்கூட்டானது ஒருபுறம் விலங்கினவாதத்தின் விளைவாகவும் மறுபுறம் விலங்கினவாதத்தின் காரணமாகவும் விளங்குகிறது என்று ஏமி ஜே. ஃபிட்ஸ்ஜெரால்ட், நிக் டெய்லர் ஆகியோர் தெளிவுபடுத்துகின்றனர்.[7] மேலும் விலங்கினவாதமானது நிறவாதம், பால்வாதம் போன்ற பாகுபாடுகளின் வரிசையில் விளங்கும் ஓர் அடிப்படை பாகுபாடாக இருப்பதையும் அவர்கள் நிறுவுகின்றனர்.[7] இறைச்சி என்பது விலங்குகளிடமிருந்து வருவது என்ற உண்மையினை வெளிப்படுத்தாத வகையில் இயங்குவதே முதலாளித்துவ மற்றும் நவதாராளவாத சிந்தனைகளின் பிடியில் செயற்படும் விலங்குத் தொழிற்கூட்டின் மிக முக்கியப் பகுதி என்பதையும் அவர்கள் சுட்டத் தவறுவதில்லை.[7] மனிதனல்லாத விலங்குகளைப் தங்கள் தேவைக்குப் பயன்படுத்த மனிதர்களுக்கு உரிமை உண்டு என்பதுபோன்ற எண்ணமே விலங்கினவாதத்தின் விளைவால் வருவதாகும் என்பதும் நவீன சமுதாயத்தில் இவ்வெண்ணம் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.[7]

சமூகவியலாளர் டேவிட் நிபர்ட் இவ்வாறு கூறுகிறார்:[31]:208

விலங்குகளை வெறும் பொருளாதார வளங்களாக மட்டுமே குறைத்துப் பார்க்கும் அளவிற்கு அனைத்து வகையான விலங்குப் பொருட்களின் உற்பத்தியும் விலங்கினவாதத்தில் வேரூன்றியுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.[3]:422 இயற்கைக்கு மாறாக விலங்குகளை உருவாக்கி அவற்றைப் பெருக்குவதையும் கொல்லுவதையுமே முதலீடாகக் கொண்ட விலங்குத் தொழிற்கூட்டானது விலங்கினவாதத்தின் செயலாக்கக் கருவியாகக் கருதப்படுகிறது. இங்கு விலங்கினவாதம் ஒரு உற்பத்திச் சாதனமாக மாறுவதைக் காணமுடிகிறது.[3]:422 தனது 2011-ஆண்டின் நூலான கிரிட்டிகல் தியரி அண்டு அனிமல் லிபரேஷன் என்ற நூலில் அறிஞர் ஜே. சன்பொன்மட்சு என்பவர் "விலங்கினவாதம் என்பது அறியாமையினாலோ அறமின்மையின் காரணமாகவோ விளையும் ஒன்றாக இல்லாது முதலாளித்துவத்தின் உந்துதலால் எழும் ஒரு உற்பத்தி முறை" என்று வாதிடுகிறார்.[3]:420

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Horta, O., 2010. What is speciesism?. Journal of agricultural and environmental ethics, 23(3), pp.243-266, p.247 "[S]peciesism is the unjustified disadvantageous consideration or treatment of those who are not classified as belonging to one or more particular species"
 2. Merriam-Webster's Collegiate Dictionary (11 ). Springfield, MA: Merriam-Webster, Incorporated. 2004. பக். 1198. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87779-825-7. https://www.merriam-webster.com/dictionary/speciesism. 
 3. 3.0 3.1 3.2 3.3 Dinker, Karin Gunnarsson; Pedersen, Helena (2016). "Critical Animal Pedagogies: Re-learning Our Relations with Animal Others". The Palgrave International Handbook of Alternative Education (1 ). London: Palgrave Macmillan. பக். 415–430. doi:10.1057/978-1-137-41291-1_27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-137-41290-4. https://link.springer.com/chapter/10.1057/978-1-137-41291-1_27. "Speciesism is the name given to the presumption of human superiority over other animals and their subjection to oppression based on this belief." 
 4. Duignan, Brian. "Speciesism". Encyclopaedia Britannica. 3 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
 5. Hopster, Jeroen (2019-12-01). "The Speciesism Debate: Intuition, Method, and Empirical Advances". Animals 9 (12): 1054. doi:10.3390/ani9121054. பன்னாட்டுத் தர தொடர் எண்:2076-2615. பப்மெட்:31805715. "There are various definitions of speciesism in circulation in the academic literature and beyond.". 
 6. Singer, 1990, பக். 6,9.
 7. 7.0 7.1 7.2 7.3 7.4 Fitzgerald, Amy J.; Taylor, Nik (2014). "The cultural hegemony of meat and the animal industrial complex". The Rise of Critical Animal Studies (1 ). Routledge. doi:10.4324/9780203797631. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-20379-763-1. https://www.taylorfrancis.com/chapters/edit/10.4324/9780203797631-19/cultural-hegemony-meat-animal-industrial-complex-amy-fitzgerald-nik-taylor. 
 8. 8.0 8.1 Dhont, Kristof; Hodson, Gordon; Leite, Ana C.; Salmen, Alina (2019). "The Psychology of Speciesism". Why We Love and Exploit Animals: Bridging Insights from Academia and Advocacy (1 ). London: Routledge. doi:10.4324/9781351181440. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781351181440. https://www.taylorfrancis.com/books/edit/10.4324/9781351181440/love-exploit-animals-kristof-dhont-gordon-hodson?refId=cd2f3200-2542-457f-a92c-e8ff114d906a. 
 9. 9.0 9.1 Weitzenfeld, Adam; Joy, Melanie (2015). "An Overview of Anthropocentrism, Humanism, and Speciesism in Critical Animal Theory". Defining Critical Animal Studies: An Intersectional Social Justice Approach for Liberation. Bern: Peter Lang. பக். 3–27. doi:10.3726/978-1-4539-1230-0. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4331-2136-4. https://www.peterlang.com/view/9781454189763/15_CH_01.html. 
 10. Caviola, Lucius; Everett, Jim A. C.; Faber, Nadira S. (2019). "The moral standing of animals: Towards a psychology of speciesism". Journal of Personality and Social Psychology (Washington, DC: American Psychological Association) 116 (6): 1011–1029. doi:10.1037/pspp0000182. பப்மெட்:29517258. https://doi.apa.org/doiLanding?doi=10.1037%2Fpspp0000182. பார்த்த நாள்: 27 September 2021. 
 11. 11.0 11.1 Everett, Jim A. C.; Caviola, Lucius; Savulescu, Julian; Faber, Nadira S. (2019). "Speciesism, generalized prejudice, and perceptions of prejudiced others". Group Processes & Intergroup Relations (Thousand Oaks: SAGE Journals) 22 (6): 785–803. doi:10.1177/1368430218816962. பன்னாட்டுத் தர தொடர் எண்:1368-4302. பப்மெட்:31588179. 
 12. Jackson, Lynne M. (2019). "Speciesism Predicts Prejudice Against Low-Status and Hierarchy-Attenuating Human Groups". Anthrozoös: A multidisciplinary journal of the interactions between people and other animals (London: Taylor & Francis) 32 (4): 445–458. doi:10.1080/08927936.2019.1621514. https://www.tandfonline.com/doi/abs/10.1080/08927936.2019.1621514. பார்த்த நாள்: 27 September 2021. 
 13. Peter Singer (2009). Animal Liberation: A New Ethics for our Treatment of Animals (4 ). New York: HarperCollins. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-06-171130-5. 
 14. 14.0 14.1 Ryder, Richard D. (2017). Speciesism, Painism and Happiness: A Morality for the Twenty-first Century. Andrews UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84540-506-9. இணையக் கணினி நூலக மையம்:1004002547. 
 15. Peter Singer (July 2009). "Speciesism and moral status". Metaphilosophy (Wiley) 40 (3–4): 567–581. doi:10.1111/j.1467-9973.2009.01608.x. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1467-9973.2009.01608.x. பார்த்த நாள்: 27 September 2021. 
 16. Singer, Peter; Mason, J. (2007). The Ethics of What We Eat: Why Our Food Choices Matter. Emmaus, PA: Rodale. 
 17. Boscardin, Livia (12 July 2016). Greenwashing the Animal-Industrial Complex: Sustainable Intensification and Happy Meat. ISAConf.confex.com. https://isaconf.confex.com/isaconf/forum2016/webprogram/Paper78184.html. பார்த்த நாள்: 10 August 2021. 
 18. Núria Almiron and Natalie Khazaal (2016). "Lobbying against compassion: Speciesist Discourse in the Vivisection Industrial Complex". American Behavioral Scientist (SAGE Journals) 60 (3): 256–275. doi:10.1177/0002764215613402. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7642. https://journals.sagepub.com/doi/abs/10.1177/0002764215613402. பார்த்த நாள்: 10 August 2021. 
 19. Cameron, Janet (11 April 2014). "Peter Singer on Suffering and the Consequences of "Speciesism"". Decoded Past. 28 March 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
 20. "Speciesism". Animal Ethics. 7 January 2014. 3 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
 21. 21.0 21.1 Beirne, Piers (May 2021). "Wildlife Trade and COVID-19: Towards a Criminology of Anthropogenic Pathogen Spillover". The British Journal of Criminology (Oxford University Press) 61 (3): 607–626. doi:10.1093/bjc/azaa084. பன்னாட்டுத் தர தொடர் எண்:1464-3529. பப்மெட் சென்ட்ரல்:7953978. https://academic.oup.com/bjc/article/61/3/607/6031472?login=true. பார்த்த நாள்: 19 September 2021. 
 22. Horta, Oscar (2016-07-05). "Changing attitudes towards animals in the wild and speciesism". Animal Sentience 1 (7). doi:10.51291/2377-7478.1109. பன்னாட்டுத் தர தொடர் எண்:2377-7478. https://www.wellbeingintlstudiesrepository.org/animsent/vol1/iss7/15. 
 23. Faria, Catia; Paez, Eze (2015). "Animals in Need: The Problem of Wild Animal Suffering and Intervention in Nature". Relations: Beyond Anthropocentrism 3: 7. https://www.ledonline.it/index.php/Relations/article/view/816/660. 
 24. Abbate, C. E.; Fischer, Bob (November 2019). "Don't Demean "Invasives": Conservation and Wrongful Species Discrimination" (in en). Animals 9 (11): 871. doi:10.3390/ani9110871. பப்மெட்:31717868. 
 25. Hopster, Jeroen (2019-12-01). "The Speciesism Debate: Intuition, Method, and Empirical Advances". Animals 9 (12): 1054. doi:10.3390/ani9121054. பன்னாட்டுத் தர தொடர் எண்:2076-2615. பப்மெட்:31805715. "There are various definitions of speciesism in circulation in the academic literature and beyond. Some authors treat speciesism as an unjustified position by definition. This is problematic, however, since the defensibility of speciesism is subject to substantive debate. A more fruitful approach is to distinguish the descriptive concept of speciesism from its normative evaluation. Here, and in what follows, I will adopt Singer's definition, according to which speciesism involves the preferential consideration of the interests of members of one's own species.". 
 26. Gruen, Lori (2017), "The Moral Status of Animals", in Zalta, Edward N. (ed.), The Stanford Encyclopedia of Philosophy (Fall 2017 ed.), Metaphysics Research Lab, Stanford University, 2021-03-06 அன்று பார்க்கப்பட்டது
 27. Jaworska, Agnieszka; Tannenbaum, Julie (2021), "The Grounds of Moral Status", in Zalta, Edward N. (ed.), The Stanford Encyclopedia of Philosophy (Spring 2021 ed.), Metaphysics Research Lab, Stanford University, 2021-03-06 அன்று பார்க்கப்பட்டது
 28. Pointing, Charlotte (19 February 2020). "What Is Speciesism? The Animal Rights Issue Explained". LiveKindly. 9 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
 29. Best, Steven (2014). The Politics of Total Liberation: Revolution for the 21st Century. Palgrave Macmillan. பக். 6-11, 30-4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1137471116. 
 30. [25][26][27][28][29]
 31. David Nibert (2011). "Origins and Consequences of the Animal Industrial Complex". The Global Industrial Complex: Systems of Domination. Rowman & Littlefield. பக். 197–209. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0739136980. https://rowman.com/ISBN/9780739136973/The-Global-Industrial-Complex-Systems-of-Domination. 

மேற்கோள் தரவுகள்[தொகு]

 • Singer, Peter (1990 (First edition published 1975)). Animal Liberation. New York: Random House. 

மேலும் பார்க்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்கினவாதம்&oldid=3433571" இருந்து மீள்விக்கப்பட்டது