உணர்திறமையவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உணர்திறமையவாததை முன்வைத்தவர்களில் முன்னோடியானவர் பிரித்தானிய பயனெறிமுறைக் கோட்பாட்டு அறிஞர் ஜெரமி பெந்தாம் (1748–1832)

உணர்திறமையவாதம் அல்லது உணர்திறவாதம் (Sentiocentrism, sentio-centrism, அல்லது sentientism) என்பது உணர்திறனுள்ள உயிர்களை தார்மீக அக்கறை எனும் வளையத்தின் மையத்தில் வைக்கும் ஒரு நெறிமுறைப் பார்வை ஆகும். மனிதர்களோடு கூட உணர்திறனுள்ள பிற விலங்குகளும் உரிமைகளையும் நலத்தேவைகளையும் கொண்டுள்ளன என்றும் இவையாவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை என்றும் வலியுறுத்தும் மெய்யியல் தத்துவமே உணர்திறவாதமாகும்.[1]

உணர்திறமையவாதமானது வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த உணர்திற உயிரினங்களுக்கிடையே காட்டப்படும் பாகுபாட்டை விலங்கினவாதம் என்னும் தான்தோன்றித்தனமான பாகுபாடு என்று கருதுகிறது. ஒத்திசைவுள்ள உணர்திறமையவாத நம்பிக்கை என்பது அனைத்து உணர்திற உயிரினங்களையும் மதிக்க வல்லது. தங்களை மனிதநேயவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் பலரும் குறிப்பாக மனிதநேயம் என்ற சொல் தெய்வீகத்துடன் முரண்பட்டு நிற்கும் இடங்களிலெல்லாம் தங்களை "உணர்திறவாதிகள்" அல்லது "உணர்திறமையவாதிகள்" என்றே உணர்கின்றனர். உணர்திறமையவாதமானது மனிதமையவாத சிந்தனையின் எதிர்ச் சிந்தனையாகத் திகழ்கிறது.[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hettinger, Ned (1998). "Environmental Ethics". in Bekoff, Marc. Encyclopedia of Animal Rights and Animal Welfare. Westport, Connecticut: Greenwood Press. பக். 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780313352553. http://static1.1.sqspcdn.com/static/f/1329369/17269625/1332457451507/encyc+of+anim+welfare+-+enrichment+and+research.pdf. 
  2. Baber, Walter F.; Bartlett, Robert V. (2015). Consensus and Global Environmental Governance: Deliberative Democracy in Nature's Regime. Cambridge, MA: MIT Press. பக். 178. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-262-52722-4. 

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உணர்திறமையவாதம்&oldid=3793787" இலிருந்து மீள்விக்கப்பட்டது