ஜேம்ஸ் ஆஸ்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்ஸ் ஆஸ்பே
பிறப்பு10 நவம்பர் 1986 (1986-11-10) (அகவை 37)
சிட்னி, ஆஸ்திரேலியா
தேசியம்ஆஸ்திரேலியா
பணி
  • உடற்பயிற்சியாளர்
  • சமூக ஊடக ஆர்வலர்
  • விலங்குரிமை செயற்பாட்டாளர்
அறியப்படுவதுஉலகெங்கிலும் விலங்குரிமை குறித்த நூற்றுக்கணக்கான உரைகளை ஆற்றியது; ஒரு வருடம் முழுவதும் விலங்குகளுக்காக மெளனமாக இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது; "இது உங்களை விழித்துக்கொள்ள வைக்கும் உரை" என்ற தலைப்பில் பிரபல உரையாற்றியது; 24 மணி நேரம் தொடர்ந்து பச்சை குத்திக்கொண்டு நன்கொடை நிதி திரட்டியது; காணொளிகளும் பேட்டிகளும் அளிப்பது.

ஜேம்ஸ் ஆஸ்பே (பிறப்பு 10 நவம்பர் 1986) ஒரு ஆஸ்திரேலிய விலங்குரிமை ஆர்வலர் மற்றும் விரிவுரையாளர் ஆவார். விலங்கு வன்கொடுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு வருடம் முழுவதும் பேசாது மெளனமாக இருந்ததற்காக அவர் பிரபலமாக அறியப்படுகிறார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஜேம்ஸ் ஆஸ்பே ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பிறந்தார். ஆஸ்பேக்கு 17 வயதாக இருந்தபோது இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் அவர் ஆறு வாரங்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என்று சொன்னார்கள். இருப்பினும் அவர் குணமடைந்து மூன்று ஆண்டுகள் வேதிச்சிகிச்சை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அந்த நேரத்தில் அவர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகத் தொடங்கினார். குணமடைந்த பிறகு, அவர் ஒரு தனிப்பட்ட உடற்பயிற்சியாளராக மாறி ஒரு பயணக் கப்பலில் பணியாற்றத் தொடங்கினார். இதன் வாயிலாக உலகம் முழுவதும் பயணம் செய்து விரிவுரைகளை வழங்கும் வாய்ப்பு கிட்டியது. கூடவே கப்பலில் உடற்பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வந்தார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் கப்பலில் ஒரு இந்தியப் பயணி "விலங்குகளை உண்பது தீய கர்மா" என்று கூறியதைக் கேட்டு ஒரு வாரத்திற்கு பரிசோதனை அடிப்படையில் சைவ உணவு உண்பவராக மாற முயன்றார். சைவ உணவு பற்றிய கூடுதலாக அறியத் துவங்க அது இறுதியில் அவரை நனிசைவ வாழ்க்கை முறைக்கு இட்டுச் சென்றது.[2] தாவர அடிப்படையிலான உணவு முறை முற்றிலும் ஆரோக்கியமானது என்றும் நம் உணவுக்காக விலங்குகளைத் துன்பத்துக்கு ஆளாக்கி அவற்றைக் கொல்வதை இனியும் நியாயப்படுத்தி ஏற்க முடியாது என்றும் அறிந்த மறுகணமே அவர் நனிசைவ வாழ்க்கை முறைக்கு மாறினார். ஒரு வருடம் யாரிடமும் பேசாமல் மௌன விரதம் இருந்த பின்னர், ஆஸ்பே உலகம் முழுவதும் பயணித்து உரை நிகழ்த்தத் தொடங்கினார். அடிதொட்டி நிகழ்வுகளை ஆவணப்படுத்தியும், தெருக்களில் விவாதங்களைப் படம்பிடித்தும், பேட்டிகள் தந்தும் தனது விலங்குரிமை செயற்பாட்டை ஆஸ்பே தொடர்ந்தார். ஆஸ்பே தற்போது பாலியில் தனது மனைவி நிக்கோல் ஆஸ்பேயுடன் வசித்து வருகிறார்.

விலங்குரிமை செயற்பாடுகள்[தொகு]

ஆஸ்பே ஆஸ்திரேலியாவைச் சுற்றிப் பயணம் செய்து ஒரு வலைப்பதிவை எழுதினார். இன்று மனிதர்கள் மற்ற விலங்குகளை உணவு, உடை, பொழுதுபோக்கு மற்றும் பரிசோதனைக்காகச் சுரண்டும் கொடூரமான வழக்கங்களைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணி டார்வினிலிருந்து சிட்னிக்கு 5000 கிமீ மிதிவண்டியைக் கொண்டு கடந்தார்.[2][3]

விலங்குகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்க்கும் நோக்கில் ஜனவரி 1, 2014 அன்று முதல் ஆஸ்பே தொடர்ந்து 365 நாட்களுக்கு பேசாமல் மெளனமாக இருப்பதாக உறுதி எடுத்துக்கொண்டார்.

13 ஜனவரி 2015 அன்று, 10 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்ட ஒரு நேர்காணலில், ஆஸ்திரேலிய காலை நிகழ்ச்சியான சன்ரைஸில் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தி ஆஸ்பே தனது ஒரு வருட கால மௌனத்தைக் கலைத்தார்.[1] அவர் ஒரு விபாசனா தியான மையத்தில் கலந்துகொண்டு பத்து நாட்கள் பேசுவதைத் தவிர்த்து, ஒவ்வொரு நாளும் 10 மணிநேரம் தியானம் செய்ததன் விளைவாகவே அவரது இந்த மௌனப் போராட்ட எண்ணம் உதித்ததாக அவர் உரைத்தார்.[2] 2017 ஆண்டு வாக்கு வரை, அவர் 150 கட்டணமில்லா உரைகளை வழங்கியுள்ளார்.[3]

2016-ம் ஆண்டு, மூன்று தொண்டு நிறுவனங்களுக்காக நிதி திரட்டுவதற்காக ஆஸ்பே தொடர்ந்து 24 மணிநேரம் பச்சை குத்திக்கொண்டார். வைரலாகப் பரவிய அவரது விலங்குரிமைப் பேச்சு 6 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.[4]

2019-ம் ஆண்டு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தலில் அனிமல் ஜஸ்டிஸ் கட்சியின் வேட்பாளராக ஹீத்கோட் தொகுதியில் ஆஸ்பே போட்டியிட்டார். மேலும் அவரது இந்த அறிவிப்புக்கு முன், தேர்தல் முடியும் வரை வெளிநாட்டில் இருந்தார்.[5]

மேற்கோள் தரவுகள்[தொகு]

  1. 1.0 1.1 Messenger, Stephen (14 January 2015). "Man Refuses To Speak For One Year, Then Hoarsely Utters Powerful Words". The Dodo. பார்க்கப்பட்ட நாள் 31 December 2017.
  2. 2.0 2.1 2.2 Wilson, Gemma (13 January 2015). "James Aspey speaks for first time after a year of silence". News.com.au (News Corp Australia Network). http://www.news.com.au/entertainment/tv/james-aspey-speaks-for-first-time-after-a-year-of-silence/news-story/c8904ce0616b084fd1c6601c4b6dcef8. 
  3. 3.0 3.1 Pasley, James (19 April 2017). "Animal activist James Aspey brings his vegan story to Auckland". Auckland Now (Auckland: Stuff.co.nz). https://www.stuff.co.nz/auckland/91645065/animal-activist-james-aspey-brings-his-vegan-story-to-auckland. 
  4. "James Aspey Biography". Dublin VegFest. n.d. Archived from the original on 1 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 31 December 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Animal Rights Activist James Aspey Running for Office in Australia: Vegan News article". Archived from the original on 2019-03-31. பார்க்கப்பட்ட நாள் 2022-06-10.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_ஆஸ்பே&oldid=3704788" இலிருந்து மீள்விக்கப்பட்டது