பணி விலங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பணி விலங்கு என்பது மனிதனால் தனக்கோ தனது வேலைக்கு உதவுவதற்காக பழக்கப்படுத்தப் பட்ட விலங்கினைக் குறிக்கும். வீட்டுவிலங்குகளாக மாற்றப்பட்ட நாய்கள், காட்டில் மரங்களை எடுத்துச் செல்ல உதவும் யானைகள் முதலானவை இவற்றுள் அடங்கும்.

பொதுவாக விலங்குகள் அவற்றின் உடல் ஆற்றலுக்காகவோ மோப்பம் போன்ற உள்ளுணர்வுகளுக்காகவோ பழக்கப்படுத்தப் படுகின்றன. யானை அதன் வலிமை காரணமாக காடுகளில் வெட்டப்படும் மரங்களைத் தூக்கிச் செல்லப் பயன்படுகிறது. சில நாய்கள் அவற்றின் மோப்ப உணர்வுக்காக வளர்க்கப் படுகின்றன.

கழுதைகள், லாமாக்கள் முதலானவை பொதிசுமக்க வளர்க்கப்படுகின்றன. நாய்கள் வீட்டுக்காவலுக்கும் மோப்பத்தைக் கொண்டு மனிதர்களைக் கண்டுபிடிக்கவும் ஆட்டு மந்தை முதலானவற்றைக் கட்டுப்படுத்தவும் இழுநாய்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

மாடுகள், குதிரைகள் முதலானவை வண்டி இழுக்கவும் ஏர் உழவும் பயன்படுகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பணி_விலங்கு&oldid=2303286" இருந்து மீள்விக்கப்பட்டது