உடற்கூறாய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிகள் விலங்குப் பரிசோதனைகளுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படும் பாலூட்டி வகையாகும். இதுபோன்ற ஆராய்ச்சிகள் உடற்கூறாய்வு என்றழைக்கப்படுகின்றன.

உடற்கூறாய்வு (Vivisection; இலத்தீன் vivus 'உயிருடன்' மற்றும் sectio 'வெட்டுதல்') என்பது ஒரு உயிருள்ள உயிரினத்தின் மீது, பொதுவாக மத்திய நரம்பு மண்டலத்தைக் கொண்ட விலங்குகள் மீது, அதன் உயிருள்ள உட்புற அமைப்பைப் பார்ப்பதற்காக நடத்தப்படும் அறுவைச் சிகிச்சை ஆகும். விலங்குப் பரிசோதனையை எதிர்ப்போரால்[1] இந்தச் சொல்லாக்கமானது உயிருள்ள விலங்குகள் மீதான அறிவியல் பரிசோதனைகளைப் பரவலாகக் குறிக்கும்[2][3][4] ஒரு இழிவுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.[5] இதன் காரணமாகவே இந்தச் சொல் விலங்குப் பரிசோதனையை நிகழ்த்தும் அறிவியலாளர்களால் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.[3][6] உயிருள்ள உருப்புகளை எடுக்கும் வகையிலான மனித உடற்கூறாய்வு சில இடங்களில் கொடூரமாக தண்டிக்கும் நோக்குடன் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Yarri, Donna. The Ethics of Animal Experimentation: A Critical Analysis and Constructive Christian Proposal பரணிடப்பட்டது 2022-06-20 at the வந்தவழி இயந்திரம், Oxford University Press, 2005, p. 163.
  2. "Operation on a living animal for experimental rather than healing purposes; more broadly, all experimentation on live animals". 2006-03-25. Archived from the original on 2006-03-25. பார்க்கப்பட்ட நாள் 2022-08-13.
  3. 3.0 3.1 Tansey, E.M. Review of Vivisection in Historical Perspective by Nicholaas A. Rupke பரணிடப்பட்டது 2015-10-18 at the வந்தவழி இயந்திரம், book reviews, National Center for Biotechnology Information, p. 226.
  4. Croce, Pietro. Vivisection or Science? An Investigation into Testing Drugs and Safeguarding Health. Zed Books, 1999, and "About Us" பரணிடப்பட்டது 2013-09-21 at the வந்தவழி இயந்திரம், British Union for the Abolition of Vivisection.
  5. Donna Yarri (2005-08-18). The Ethics of Animal Experimentation. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780190292829. https://books.google.com/books?id=PXV2CAAAQBAJ&q=vivisection+pejorative&pg=PT188. பார்த்த நாள்: June 18, 2016. 
  6. Paixao, RL; Schramm, FR. Ethics and animal experimentation: what is debated? Ethics and animal experimentation: what is debated? பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம் Cad. Saúde Pública, Rio de Janeiro, 2007

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடற்கூறாய்வு&oldid=3799750" இலிருந்து மீள்விக்கப்பட்டது