மார்த்தா நஸ்பாம்
மார்த்தா நஸ்பாம் | |
---|---|
![]() 2008-ல் நஸ்பாம் | |
பிறப்பு | மார்த்தா க்ரேவென் மே 6, 1947 நியூயார்க்கு நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா |
மற்ற பெயர்கள் | மார்த்தா க்ரேவென் நஸ்பாம் |
கல்வி | Wellesley College (dropped out) New York University (BA) ஆர்வர்டு பல்கலைக்கழகம் (MA, PhD) |
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
வாழ்க்கைத் துணை | ஆலன் நஸ்பாம் (தி. 1969; ம.மு. 1987) |
விருதுகள் |
|
பள்ளி |
|
கல்விக்கழகங்கள் | |
முனைவர் பட்ட ஆலோசகர் | ஜி. இ. எல். அவென் |
முக்கிய ஆர்வங்கள் | |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | செயல்வல்லமை அணுகுமுறை |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
மார்த்தா க்ரேவென் நஸ்பாம் (Martha Craven Nussbaum, பிறப்பு: மே 6, 1947) ஒரு அமெரிக்க மெய்யியல் அறிஞர் ஆவார். தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் நெறிமுறைகள் துறைகளில் எர்ன்ஸ்ட் ஃப்ரண்டு பெருந்தொண்டு பேராசிரியராக இருக்கும் அவர், அங்கு சட்டப் பள்ளி மற்றும் தத்துவவியல் துறையில் கூட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய தத்துவம், அரசியல் தத்துவம், இருத்தலியல், பெண்ணியம் மற்றும் விலங்குரிமை உள்ளிட்ட நெறிமுறைகள் ஆகிய துறைகளில் தனித்த ஈடுபாடு கொண்டவர். பண்டைய கிரேக்க-உரோமானிய இலக்கியங்கள், தெய்வீகவியல், அரசறிவியல் ஆகியவற்றில் இணை நியமனங்களையும் கொண்டுள்ள நஸ்பாம், தெற்காசிய ஆய்வுகள் குழுவின் உறுப்பினராகவும், மனித உரிமைகள் திட்டத்தின் குழு உறுப்பினராகவும் உள்ளார். அவர் இதற்கு முன்பு ஹார்வர்ட் மற்றும் பிரௌன் பல்கலைக்கழகங்களில் கற்பித்திருக்கிறார்.[3][4]
தி ஃபிராஜைலிட்டி ஆஃப் குட்னஸ் (1986), கல்டிவேட்டிங் ஹ்யூமானிடி (1997), செக்ஸ் அண்ட் சோஷியல் ஜஸ்டிஸ் (1998), ஹைடிங் ஃப்ரம் ஹியூமானிடி (2004), ஃப்ரான்டியர்ஸ் ஆஃப் ஜஸ்டிஸ் (2006), ஃப்ரம் டிஸ்கஸ்ட் டு ஹ்யூமானிடி (2010) உள்ளிட்ட பல நூல்களை நஸ்பாம் இயற்றியுள்ளார். அவர் கலை மற்றும் மெய்யியலில் 2016 கியோட்டோ பரிசு, 2018 பெர்க்ரூன் பரிசு, 2021 ஹோல்பெர்க் பரிசு ஆகியவற்றைப் பெற்றவராவார்.[5][6][7]
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள் தரவுகள்[தொகு]
- ↑ Wendland, Aaron James (December 7, 2018). "Martha Nussbaum: "There's no tension in supporting #MeToo and defending legal sex work"". New Statesman. December 7, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 7, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Heller, Nathan (December 31, 2018). "The Philosopher Redefining Equality". New Yorker. May 2, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 14, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Martha Nussbaum" பரணிடப்பட்டது அக்டோபர் 25, 2019 at the வந்தவழி இயந்திரம், University of Chicago, accessed June 5, 2012.
- ↑ Aviv, Rachel (July 18, 2016). "The Philosopher of Feelings" (in en). The New Yorker. https://www.newyorker.com/magazine/2016/07/25/martha-nussbaums-moral-philosophies.
- ↑ "Prof. Martha Nussbaum wins Kyoto Prize". June 17, 2016. November 19, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. October 31, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Martha Nussbaum Wins $1 Million Berggruen Prize" (in en). https://www.nytimes.com/2018/10/30/arts/martha-nussbaum-berggruen-prize.html.
- ↑ "Martha C. Nussbaum | Holbergprisen". holbergprisen.no. March 5, 2021 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- University of Chicago biography
- Nussbaum on Anger and Forgiveness (Audio) University of Chicago
- Nussbaum's University of Chicago faculty website
- Nussbaum bibliographies
- மார்த்தா நஸ்பாம் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் மார்த்தா நஸ்பாம்
- Q&A with Martha Nussbaum from தி கார்டியன்
- 'Creating capabilities' Nussbaum interviewed by Laurie Taylor on BBC Radio 4, July 2011
- Appearances on C-SPAN
- Martha Nussbaum, Land of my Dreams: Islamic liberalism under fire in India, Boston Review, March/April 2009. பரணிடப்பட்டது சூலை 27, 2009 at the வந்தவழி இயந்திரம்
- Profile at the International Institute of Social Studies
- Honored as one of 50 Most Influential Living Philosophers
- "Dismantling the 'Citadels of Pride': Claudia Dreifus, an interview with Martha C. Nussbaum", The New York Review of Books (June 30, 2021)