ஜாக் நாரிஸ்
ஜாக் நாரிஸ் (Jack Norris) | |
---|---|
பிறப்பு | 1967 (அகவை 56–57) ஒகையோ, ஐக்கிய அமெரிக்கா |
கல்வி | கார்னல் கல்லூரி (பி.ஏ., 1988) லைஃப் பல்கலைக்கழகம் (பி.எஸ்.சி, 2000) |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1993–நடப்பு |
வாழ்க்கைத் துணை | அரெக்ஸாண்ட்ரா பரி (தி. 2008–2023) |
வலைத்தளம் | |
jacknorrisrd |
ஜாக் நாரிஸ் (Jack Norris) (பிறப்பு 1967) ஒரு அமெரிக்க உணவியல் நிபுணரும் விலங்குரிமை ஆர்வலரும் ஆவார். தாவர உணவியல் நிபுணரான இவர், தான் 1993-இல் இணைந்து நிறுவிய வீகன் அவுட்ரீச் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.[1] அந்நிறுவனத்தின் 2003 முதல் 2020 மார்ச் வரை இயங்கிய "அடாப்ட் எ காலேஜ்" திட்டத்தை வடிவமைத்தவரும் ஆவார். இவர் தற்போது வீகன் அவுட்ரீச்சின் "10 வாரங்களின் நனிசைவம்," "நனிசைவ சமையற்கலை நிபுணர் சவால்" ஆகிய திட்டங்களை மேற்பார்வையிட்டு வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]நாரிஸ் 1985-ல் ஓகையோ மாகாணம் சின்சினாட்டி நகரில் உள்ள ஆர்ச்பிஷப் மோல்லர் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். அவர் அயோவாவின் மவுண்ட் வெர்னானில் உள்ள கார்னெல் கல்லூரியில் பயின்று 1989-ல் மெய்யியல் மற்றும் சமூகவியலில் பி.ஏ. பட்டம் பெற்றார்.
அவர் 2000-ம் ஆண்டில் ஜார்ஜியா மாகாணத்தின் மரீட்டாவிலுள்ள லைஃப் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைகளில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். 2000–2001 கல்வியாண்டின் காலகட்டத்தில் ஜார்ஜியா மாநில பல்கலைக்கழகத்தில் தனது உணவியல் பயிற்சியை மேற்கொண்டார்.[1]
செயற்பாடுகள்
[தொகு]நனிசைவ வாழ்வுமுறையைக் கடைபிடிப்பவரான நாரிஸ் ஒரு பதிவுபெற்ற உணவியல் நிபுணர் ஆவார். அவர் 1994 முதல் 1996 வரை அமெரிக்க உடற்பயிற்சி சபையின் சான்று பெற்ற தனிப்பட்ட பயிற்சியாளராக இருந்துள்ளார்.[1][2]
நாரிஸ் வைட்டமின் பி12: ஆர் யூ கெட்டிங் இட்?,[3] டிப்ஸ் ஃபார் நியூ வீகன்ஸ்,[4] மற்றும் டெய்லி நீட்ஸ்[5] [நனிசைவ வாழ்வுமுறைக்காக] ஆகிய நூல்களை இயற்றியவர் ஆவார்.
2003 முதல் 2020 வரை வீகன் அவுட்ரீச் அமைப்பின் "அடாப்ட் எ காலேஜ்" திட்டத்தை நாரிஸ் முன்னோடியாக இருந்து எடுத்து நடத்தினார். இத்திட்டத்தின் வாயிலாக நனிசைவ ஆர்வலர்கள் சைவ மற்றும் நனிசைவ வாழ்க்கை முறையைக் கடைபிடிப்பதற்கான காரணத்தை இதுவரை 4,677 பள்ளிகளில் 21 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு எடுத்துக்கூறி கையேடுகளை வழங்கியுள்ளனர்.[6] கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020 மார்ச் மாதம் "அடாப்ட் எ காலேஜ்" திட்டம் முடிவடைந்தபோது, அதற்கு பதிலாக நாரிஸ் இணையம் வாயிலாக தனது அமைப்பின் "10 வாரங்களில் நனிசைவம்" என்ற திட்டத்தை விரிவுபடுத்தினார். இதில் இதுவரை 1.35 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பதிவு செய்துள்ளனர்.[7] இத்திட்டம் 55 நாடுகளில் வெவ்வேறு வகையிலும் சென்றடைந்துள்ளது.[7]
விருதுகள்
[தொகு]நாரிஸ் 2003 மற்றும் 2004 ஆண்டுக்கான வெஜ்நியூஸ் (VegNews) இதழின் "ஆண்டின் சிறந்த கட்டுரையாளர்" என்ற விருதினைப் பெற்றார்.[8]
2005-ல், நாரிஸ் விலங்குரிமை புகழரங்கத்திற்குத் (Animal Rights Hall of Fame) தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9]
மார்க் ஹாதோர்ன் எழுதிய ஸ்டிரைக்கிங் அட் தி ரூட்ஸ்: எ பிராக்டிகல் கைடு டு அனிமல் ஆக்டிவிசம் (2008) என்ற புத்தகத்தில் பயன்படுத்தப்பட்ட தகவல்களை வழங்கிய பலரில் நாரிஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]நாரிஸ் செப்டம்பர் 11, 2008 அன்று கனடாவின் டொராண்டோவில் உள்ள கே.எஃப்.சி (KFC) உணவகத்தின் முன் நனிசைவ சமையல் நிபுணரான அலெக்ஸ் பரியை மணந்தார்.[10] திருமணத்திற்குப் பிறகு வந்திருந்த விருந்தினர்களுக்கு கே.எஃப்.சி. சமீபத்தில் அறிமுகப்படுத்திய நனிசைவ சாண்ட்விச்சுகள் வழங்கப்பட்டன.[11] நாரிஸ் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசிக்கிறார்.
பதிப்பித்த நூல்கள்
[தொகு]- Norris, Jack. Vitamin B12: Are You Getting It? (web-based book). VeganHealth.org.
- Norris, Jack; Messina, Virginia (2020-05-12). Vegan for Life: Everything You Need to Know to Be Healthy and Fit on a Plant-Based Diet. Second Edition. Hachette Go. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0738285863.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "About". VeganHealth.org.
- ↑ Norris, Jack (2013-05-09). "White Blood Cells in Vegans". JackNorrisRD.com. Davis, California. Archived from the original on 2014-03-11. பார்க்கப்பட்ட நாள் 2014-03-18.
I went vegan in 1988
- ↑ Vitamin B12: Are You Getting It?
- ↑ Tips for New Vegans
- ↑ Daily Needs
- ↑ "Stats".
- ↑ 7.0 7.1 "About".
- ↑ Hartglass, Caryn (2011-08-24). "Interview with Jack Norris and Virginia Messina". It’s All About Food. Forest Hills (New York City): Responsible Eating and Living. Archived from the original on 2014-03-11. பார்க்கப்பட்ட நாள் 2014-03-17.
Jack won VegNews magazine's Columnist of the Year award for 2003 and 2004.
- ↑ "U.S. Animal Rights Hall of Fame". Animal Rights National Conference. Farm Animal Rights Movement. Archived from the original on 2014-03-11. பார்க்கப்பட்ட நாள் 2014-03-17.
- ↑ Goddard, John (2008-09-12). "Vegans walk aisle with the Colonel". Toronto Star இம் மூலத்தில் இருந்து 2014-11-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141101021600/http://www.thestar.com/news/gta/2008/09/12/vegans_walk_aisle_with_the_colonel.html.
- ↑ Cellania, Miss (2010-03-11). "7 Retail Weddings". Mental Floss. Archived from the original on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-10-31.