உள்ளடக்கத்துக்குச் செல்

விலங்கு அறுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோஸ்ட் அம்மான் என்பவரால் வரையப்பட்ட கசாப்புக்காரரும் அவரது உதவியாளரும் என்ற ஓவியம் (1568).

விலங்கு அறுப்பு அல்லது விலங்குப் படுகொலை (animal slaughter) என்பது விலங்குகளைக் கொல்வது ஆகும். இது பொதுவாக கால்நடைகள் உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகளை கொல்வதைக் குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 80 பில்லியன் நிலவாழ் விலங்குகள் உணவுக்காகக் கொல்லப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1] பெரும்பாலான விலங்குகள் உணவுக்காக வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டாலும், உடற் தோலை அறுவடை செய்வதற்காகவும், நோய்வாய்ப்பட்டு மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றதாக இருத்தல் அல்லது இனப்பெருக்க இருப்பை பராமரிக்கும் பண்ணைகளில் உபரியாக இருத்தல் உள்ளிட்ட பிற காரணங்களுக்காகவும் விலங்குகள் கொல்லப்படுகின்றன. விலங்கு அறுப்பு என்பது பொதுவாக உடலில் சில ஆரம்ப வெட்டுக்களைச் செய்து, உடலின் பெரும் துவாரங்களைத் திறந்துக் குடல் உள்ளிட்ட மனித நுகர்வுக்குப் பயன்படாத பாகங்களை அகற்றுவதைக் குறித்தாலும், அறுப்பின் போது பொதுவாக அவ்விலங்கின் சடலம் பெரும்பாலும் ஒரே துண்டாக வைக்கப்படுகிறது. இத்தகைய செயல்முறைகள் பெரும்பாலும் காட்டில் வேட்டையாடுபவர்களாலும் அடிதொட்டித் தொழிலாளர்களாலும் செய்யப்படுகிறது. இதன் பின்னர், அந்தச் சடலமானது சிறிய துண்டுகளாக வெட்டப்படுகிறது.

2019-ல் இறைச்சிக்காகக் கொல்லப்பட்ட நிலவாழ் விலங்குகளின் எண்ணிக்கை[1]
விலங்குகள் கொல்லப்பட்ட எண்ணிக்கை
கோழி
72,11,87,79,000
வாத்து
3,31,18,99,000
பன்றி
1,34,85,41,419
அன்னம்
72,36,48,000
வான்கோழி
63,59,55,000
முயல்
63,30,13,000
செம்மறியாடு
60,23,19,130
ஆடு
50,28,08,495
மாடு
32,45,18,029
எலி
7,09,77,000
புறா உள்ளிட்ட பறவைகள்
4,62,16,000
எருமை
2,76,92,388
குதிரை
49,40,693
ஒட்டகம்
29,91,884
கழுதை
19,58,602
இதர ஒட்டக வகைகள்
9,67,656
மான்
6,28,542
கோவேறு கழுதை
1,30,804

உணவுக்காக பொதுவாகக் கொல்லப்படும் விலங்குகளாவன மாடு, எருமை, கன்று, செம்மறி ஆடு, ஆடு, ஆட்டுக்குட்டி, பன்றி, மான், குதிரை, கோழி வகைகள் (முக்கியமாக கோழி, வான்கோழி, வாத்து), பூச்சிகள் (வணிக இனமான வெட்டுக்கிளி உள்ளிட்டவை), மற்றும் அதிக அளவில் மீன்கள் (மீன் வளர்ப்புத் தொழிலில்). 2020-ம் ஆண்டில் பெளனாலைடிக்ஸ் (Faunalytics) என்ற அமைப்பு சீனா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகியவை அதிக எண்ணிக்கையிலான பசுக்கள் மற்றும் கோழிகளைக் வெட்டும் நாடுகள் என்று கண்டறிந்துள்ளது. பன்றிகளைக் கொல்வதில் சீனா முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், வியட்நாம் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் பன்றிகளை அதிகமாகக் கொல்கின்றன. செம்மறி ஆடுகளின் சதவீத வரைபடத்தைப் பொருத்தமட்டில், ஆடுகளை அதிக அளவில் வெட்டுவதில் மீண்டும் சீனா முதலிடம் வகிப்பதைக் காணமுடிகிறது. அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து விளங்குகின்றன. சீனா, இந்தோனேசியா, பெரு, இந்தியா, ரஷ்யா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் மீன்களை அதிக அளவில் (டன்களில்) உற்பத்தி செய்துக் கொல்கின்றன.[2]

மேலும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 "FAOSTAT". www.fao.org. Archived from the original on 8 December 2021. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.
  2. "Global Animal Slaughter Statistics & Charts: 2020 Update". 29 July 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்கு_அறுப்பு&oldid=3691886" இலிருந்து மீள்விக்கப்பட்டது