உள்ளடக்கத்துக்குச் செல்

முழு விடுதலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசின்மைவாதிகளும் எதிர்பாசிச ஆர்வலர்களும் விலங்கின விடுதலைக்காகப் போராடும் காட்சி

முழு விடுதலை (Total liberation) என்பது அரசின்மைவாதத்தை விலங்கின மற்றும் புவி விடுதலைக்கான அர்ப்பணிப்புடன் இணைக்கும் ஒரு அரசியல் தத்துவமும் இயக்கமும் ஆகும். இது முழு விடுதலைச் சூழலியல் (total liberation ecology) என்றும் நனிசைவரசின்மைவாதம் (veganarchism) என்றும் குறிப்பிடப்படுகிறது.[1] அரசின்மைவாதத்திற்கான பாரம்பரிய அணுகுமுறைகள் பெரும்பாலும் அரசு மற்றும் முதலாளித்துவத்தை எதிர்ப்பதில் கவனம் செலுத்துகையில் முழு விடுதலையானது இவற்றோடு கூடுதலாக மனித ஒடுக்குமுறையின் அனைத்து கூடுதல் வடிவங்களையும் மேலும் மற்ற விலங்குகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகியவற்றின் மீதான மனித ஒடுக்குமுறையையும் எதிர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.[2] முழு விடுதலையின் ஆதரவாளர்கள் பொதுவாக அனைத்து வகையான ஆதிக்கங்களையும் படிநிலைகளையும் அகற்றும் நோக்கில் நேரடி நடவடிக்கையைப் பயன்படுத்தும் ஒரு முழுமையான பல்துறை அணுகுமுறையை மேற்கொள்கின்றனர். அரசு, முதலாளித்துவம், ஆணாதிக்கம், நிறவாதம், பொதுப்பாலினவாதம் (heterosexism), பிறப்புப் பாலினவாதம் (cissexism), இயலாமைவாதம் (disablism), வயோதிகவாதம் (ageism), விலங்கினவாதம், சூழலியல் ஆதிக்கம் உள்ளிட்டவை இதன் பொதுவான எடுத்துக்காட்டுகள் ஆகும்.[3]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள் தரவுகள்[தொகு]

  1. Springer, Simon (2020-01-01). "Total Liberation Ecology: Integral Anarchism, Anthroparchy, and the Violence of Indifference". Undoing Human Supremacy: Anarchist Political Ecology and the End of Anthroparchy. https://www.academia.edu/38194539. 
  2. David N. Pellow (2014) Total Liberation: The Power and Promise of Animal Rights and the Radical Earth Movement; Minneapolis, USA: University of Minnesota Press, pp.5-6
  3. Best, Steven (2014). "Conclusion: Reflections on Activism and Hope in a Dying World and Suicidal Culture". The Politics of Total Liberation: Revolution for the 21st Century. Palgrave Macmillan. pp. 163–164. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1057/9781137440723_7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1137471116.

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முழு_விடுதலை&oldid=3741547" இலிருந்து மீள்விக்கப்பட்டது