ஆக்ஸ்போர்டு விலங்கு நெறியியல் மையம்
ஃபெரேட்டர் மோரா ஆக்ஸ்போர்டு சென்டர் ஃபார் அனிமல் எத்திக்ஸ் | |
Named after | ஜோஸ் ஃபெர்ரேட்டர் மோரா |
---|---|
உருவாக்கம் | 2006 |
நிறுவனர் | ஆண்ட்ரூ லின்சி |
நோக்கம் | விலங்கு நெறியியல் துறைப் பரப்பு |
தலைமையகம் | |
இயக்குனர் | ஆண்ட்ரூ லின்சி |
இணை இயக்குனர் | க்ளேர் லின்ஸி |
வலைத்தளம் | www.oxfordanimalethics.com |
ஆக்ஸ்போர்டு விலங்கு நெறியியல் மையம், அதிகாரப்பூர்வமாக ஃபெரேட்டர் மோரா ஆக்ஸ்போர்டு சென்டர் ஃபார் அனிமல் எத்திக்ஸ், என்பது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரைத் தாயகமாகக் கொண்டு இயங்கும் ஒரு விலங்கு நெறியியல் பரப்பு அமைப்பாகும்.
வரலாறு
[தொகு]ஆக்ஸ்போர்டு விலங்கு நெறியியல் மையம் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரில் 2006-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இறையியல் துறை உறுப்பினரான ஆண்ட்ரூ லின்சி என்பவரால் நிறுவப்பட்டது. இருப்பினும் இந்த மையம் அப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படவில்லை.[1] அரா பால் பர்ஸாம், மார்க் எச். பெர்ன்ஸ்டீன் ஆகியோர் இம்மையத்தின் இணைநிறுவனர்கள் ஆவர்.[2] இந்த மையத்திற்கு கட்டலான் மெய்யியலாளரான ஜோஸ் ஃபெர்ரேட்டர் மோரா என்பவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[1]
இந்த மையம் 2007-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் உள்ள கெபில் கல்லூரியில் விலங்கு வன்கொடுமைக்கும் மனித வன்முறைக்கும் இடையேயான தொடர்பு பற்றிய சர்வதேச மாநாட்டை நடத்தியது.[3]
செயற்பாடுகள்
[தொகு]ஆக்ஸ்போர்டு விலங்கு நெறியியல் மையம் கல்வியியல் ஆய்வு மற்றும் பொது விவாதத்தின் மூலம் விலங்குகள் தொடர்பான நெறியியல் முறைகளை வளர்த்து மேம்படுத்துகிறது. மேலும் விலங்கு நெறியியல் துறையின் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் கல்வியாளர்களை ஒருங்கிணைத்து உலகளாவிய சங்கத்தை உருவாக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.[4] அந்த நோக்கத்திற்காக இந்த மையம் ஐக்கிய அமெரிக்காவின் இல்லனாய் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தி ஜர்னல் ஆவ் அனிமல் எத்திக்ஸ் என்ற கல்வியியல் சார்ந்த ஒரு விலங்கு நெறியியல் இதழை வெளியிடுகிறது.[5] மேலும் சர்வதேச பதிப்பகத்தாரான பால்கிரேவ் மேக்மில்லன் அமைப்பினருடன் இணைந்து ஒரு விலங்கு நெறியியல் தொடரையும் நிறுவியுள்ளது.[6]
குறிப்பிடத்தக்க ஆளுமைகள்
[தொகு]ஆக்ஸ்போர்டு விலங்கு நெறியியல் மையத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ராபர்ட் கார்னர், ஸ்டீவன் எம். வைஸ், மார்ட்டின் ஹெனிக் ஆகியோர் அடங்குவர்.[2] கெளரவ ஆளுமைகளாக ஜே. எம். கோட்ஸி, ஜாய் கார்ட்டர், பாப் பார்கர், பிலிப் வோலன் உள்ளிட்டோர் உள்ளனர்.[7]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Smith, Alexandra (2006-11-27). "Thinktank launched to debate animal ethics" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/education/2006/nov/27/highereducation.uk1.
- ↑ 2.0 2.1 "Fellows". Oxford Centre for Animal Ethics (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-10.
- ↑ Linzey, Andrew, ed. (2009). The Link Between Animal Abuse and Human Violence (in ஆங்கிலம்). Eastbourne: Sussex Academic Press. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84519-324-9.
- ↑ "Welcome". Oxford Centre for Animal Ethics (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-10.
- ↑ Bingham, John (2011-04-28). "Calling animals 'pets' is insulting, academics claim" (in en-GB). Daily Telegraph. https://www.telegraph.co.uk/news/newstopics/howaboutthat/8479391/Calling-animals-pets-is-insulting-academics-claim.html.
- ↑ "The Palgrave Macmillan Animal Ethics Series". Springer. பார்க்கப்பட்ட நாள் 2020-07-10.
- ↑ "Honorary Fellows". Oxford Centre for Animal Ethics (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-10.
மேலும் படிக்க
[தொகு]- Linzey, Andrew and Clair Linzey (2014). "Oxford Centre for Animal Ethics". In Paul B. Thompson and David M. Kaplan (ed.). Encyclopedia of Food and Agricultural Ethics. Dordrecht, Netherlands: Springer. pp. 1467–1470. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-94-007-0929-4_366. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-0928-7.