உள்ளடக்கத்துக்குச் செல்

விரக்திக் குழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விரக்திக் குழி அல்லது துன்பக் குழி (Pit of despair) என்பது அமெரிக்க ஒப்பீட்டு உளவியலாளர் ஹாரி ஹார்லோ என்பவர் வடிவமைத்த ஒரு சாதனத்தின் பெயராகும். தொழில்நுட்ப ரீதியாக "செங்குத்து அறை கருவி" என்று அழைக்கப்பட்ட இக்கருவி, ஹார்லோவால் 1970-களில் விஸ்கான்சின்–மாடிசன் பல்கலைக்கழகத்தில் ரீசஸ் மக்காக் வகை குரங்குகள் மீதான சோதனைகளில் பயன்படுத்தப்பட்டது.[1] இவ்வாராய்ச்சியின் நோக்கம் மனச்சோர்வின் ஒரு விலங்கு மாதிரியை உருவாக்குவதாகும். ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் சுவோமி இச்சாதனத்தை பற்றி விவரிக்கையில், "ஒரு துருப்பிடிக்காத எஃகு தொட்டியை விடவும் கூடுதலாக பக்கவாட்டாகக் கீழே சாய்ந்து உருண்டையான அடிபாகத்தைக் கொண்ட ஒரு தொட்டி" என்று கூறினார்:

அக்கருவிக்குள் இருக்கும் அறையின் அடிப்பகுதியிலிருந்து 1 அங்குலம் மேலே 3⁄8 அங்குல கம்பி வலை தளம் ஒன்று கழிவுப் பொருட்களுக்கான வடிகாலாகச் செயற்பட்டு அக்கழிவுகள் துருப்பிடிக்காத எஃகில் துளையிடப்பட்ட துளைகளில் இருந்து வெளியேற வகை செய்யப்பட்டிருந்தது. அறையில் உணவுப் பெட்டி ஒன்றும் தண்ணீர் புட்டி வைப்பதற்கான இடமும் பொருத்தப்பட்டிருந்தது. இவற்றின் மேல் உள்ளே அடைக்கப்பட்டிருக்கும் விலங்கு பிடித்துக்கொண்டு தொங்காத படியான பிரமிட் வடிவ மேற்புறக் கூரையும் [இங்கு காட்டப்பட்டுள்ள புகைப்படத்தில் இது அகற்றப்பட்டுள்ளது] வடிவமைக்கப்பட்டுள்ளது.[2]

ஹார்லோ ஏற்கனவே புதிதாகப் பிறந்த குரங்குகளை ஒரு வருடம் வரை தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் வைத்திருந்தார். இந்த "விரக்திக் குழி" மூலம், அவர் மூன்று மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான, ஏற்கனவே தன் தாயுடன் தங்கியிருந்து பந்தம் ஏற்பட்டிருந்த குரங்குகளை பத்து வாரங்கள் வரை இக்கருவிக்குள் தனிமைப்படுத்தினார்.[3] இக்கருவியில் சிறையிடப்பட்ட சில நாட்களுக்குள், அக்குரங்குகள் நகர்வதை நிறுத்திவிட்டு ஒரு மூலையில் முடங்கியிருக்கத் துவங்கின.

இவற்றையும் காண்க

[தொகு]

தரவுகள்

[தொகு]
  1. Blum 1994, p. 95, Blum 2002, pp. 218-219. Blum 1994, p. 95: "... the most controversial experiment to come out of the Wisconsin laboratory, a device that Harlow insisted on calling the "Pit of despair."
  2. Suomi 1971, p. 33.
  3. McKinney, Suomi, and Harlow 1972.

மேற்கோள் தரவுகள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரக்திக்_குழி&oldid=4085382" இலிருந்து மீள்விக்கப்பட்டது