வேட்டை முறியடிப்பு
வேட்டை முறியடிப்பு (Hunt sabotage) என்பது வேட்டையாடும் செயல்களைத் தடுக்கும் நோக்கில் விலங்குரிமை ஆர்வலர்களும் விலங்கு விடுதலை ஆர்வலர்களும் மேற்கொள்ளும் நேரடி நடவடிக்கையாகும்.[1]
விவரிப்பு
[தொகு]வேட்டை நாசக்காரர்கள் அல்லது "வேட்டை முறியடிப்பாளர்கள்" என்று அழைக்கப்படும் வேட்டை எதிப்புப் பிரச்சாரகர்களால் நடத்தப்படும் வேட்டை முறியடிப்புச் செயலானது விலங்குகள் கொல்லப்படுவதைத் தடுக்கப் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது. விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்து நடத்தப்படும் செயற்பாடுகள் பொதுவாக தார்மீக அடிப்படையில் இருக்கும் காரணத்தால், வேட்டை முறியடிப்பானது சட்டபூர்வமான, சட்டவிரோத என இருவகை வேட்டை நடவடிக்கைகளுக்கும் எதிராக நடைபெறுகிறது. எதிர்க்கப்படும் வேட்டையின் வகையைப் பொறுத்து வேட்டை முறியடிப்புத் தந்திரோபாயங்கள் மாறுபடக் கூடியவை.[2]
- நரி வேட்டை, மான் வேட்டை அல்லது முயல் வேட்டை போன்றவை மோப்ப நாய்க்கூட்டங்களைக் கொண்டு நடத்தப்படுபவை. இதைத் தடுக்க வேட்டைத் தடுப்பாளர்கள் சிட்ரோனெல்லா எண்ணை, சோம்பு எண்ணை போன்ற ஆற்றல்மிகு மணம் கொண்ட பொருட்களைப் பயன்படுத்தி வேட்டையாடப்பட இருக்கும் விலங்குகளின் வாடைகளை மட்டுப்படவம் நீக்கவும் செய்கின்றனர். மோப்ப நாய்களின் சொந்தக்காரரது குரலை ஒத்த ஒலிகளை எழுப்பி அந்நாய்களை வேட்டை விலங்குகளிடமிருந்து திசைதிருப்புவதும் மற்றொரு வகை தந்திரோபாயமாகும்.[2]
- விலங்குக் கொலை தடுப்பு முயற்சி, எடுத்துக்காட்டாக வளைக்கரடி வேட்டை (badger culling) அல்லது ஓநாய் வேட்டை,[3] என்பது பொறிகளை உடைத்தெறிந்தும் தகர்த்தும் வேட்டையாடுபவர்களை எதிர்கொண்டும் வேட்டையைத் தடுப்பதாகும்.[4]
- விலங்குகளைச் சுட்டுக் கொல்வதைத் தடுத்தல் என்பது சூட்டு கோபுரங்களையும் சூட்டு வளைகளையும் தகர்த்தல்[5] மற்றும் சுட்டுக் கொல்லும் முகாம்களை எதிர்த்த அணிதிரள் போராட்டங்கள் உள்ளிட்டவை ஆகும்.[6]
- தொல்லை விலங்குக்கொல்லல் (pest control) கொண்டு நடத்தப்படும் கொல்லுதல்களை தடுக்க பொறிகளை அழிப்பது வழக்கம்.[7][8]
- வேட்டை முறியடிப்பின் ஒரு பகுதியாக வேட்டையாடும் குழுக்களுக்குள் வேட்டை முறியடிப்பாளர்களின் ஊடுருவலையும் உள்ளடக்கியது. எடுத்துக்காட்டாக, வேட்டை முறியடிப்பாளரான மைக் ஹஸ்கிசனின் பல்வேறு பிரித்தானிய வேட்டைகளை ஆவணப்படுத்தும் பணியானது[9][10][11] அதுவரை பொது மக்கள் அறிந்திராத பல நடைமுறைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து பொதுமக்களின் கருத்தை வேட்டையாடலுக்கு எதிராக மாற்ற உதவியது. மேலும், மாஸ்டர்ஸ் ஆஃப் ஃபாக்ஸ்ஹவுண்ட்ஸ் அசோசியேஷன் என்ற வேட்டையாடல் அமைப்பின் கூட்டங்களில் வேட்டை முறியடிப்பாளர்கள் ஊடுருவியதன் விளைவாக இங்கிலாந்தின் வேட்டை எதிர்ப்புச் சட்டங்களை மீறிச் செயற்படுவதற்கு சங்க உறுப்பினர்கள் தீட்டிய திட்டங்களையும் பயன்படுத்திய தந்திரங்களையும் வெளிக்கொண்டு வந்தது.[12] இது நேச்சுரல் ரிசோர்சஸ் வேல்ஸ் மற்றும் நேஷனல் டிரஸ்டு போன்ற பெரிய நில உரிமையாளர்களின் பல்வேறு வேட்டைகளைத் தடை செய்ய வழிவகுத்தது.
- நேரடி நடவடிக்கை வேட்டை முறியடிபாபளர்கள், கொடூர விளையாட்டுகளுக்கு எதிரான லீக் போன்ற நேரடித் தலையீடு செய்யாத அமைப்புகள் என இருவகையினரும் காணொளிகள், புகைப்படங்கள், மற்றும் சாட்சி அறிக்கைகள் ஆகியவற்றை குற்றங்களைச் செய்யும் வேட்டைக்காரர்கள் மீது வழக்குத் தொடுக்கவும் வேட்டையாடுவதன் கொடூரத் தன்மை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பயன்படுத்துகின்றனர்.
வேட்டை முறியடிப்பாளர்களுக்கும் வேட்டை ஆதரவாளர்களுக்குமிடையிலான மோதல்கள்
[தொகு]வேட்டை முறியடிப்பாளர்களின் செயற்பாடுகள் பல சமயங்களில் வேட்டையாடுபவர்களுடனும் வேட்டை ஆதரவாளர்களுடனும் மோதலில் சென்று முடிவடைந்துள்ளன.
- இங்கிலாந்தின் ஹெர்ஸ்மன்சூ (Herstmonceux) என்ற கிராமத்தில் தெற்குக் கடற்கரை வேட்டை முறியடிப்பாளர்கள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்ட நிகழ்வு.[13]
- வேட்டை முறியடிப்பாளர் ஒருவரைத் தாக்கிய வழக்கில் பிட்லே ஹன்ட்டு (Pytchley Hunt) அமைப்பின் உருப்பினர் சிறைக்குச் சென்றது.[14]
- டேவோன் மற்றும் சோமர்செட் ஸ்டாக்ஹவுண்டுஸ் (Devon & Somerset Staghounds) உருப்பினர்கள் வேட்டை முறியடிப்பாளர்களைத் தாக்கி வாகனங்களைச் சேதப்படுத்தியது.[15]
- வேட்டை முறியடிப்பாளர்கள் மீது வெஸ்டன் அண்டு பான்வெல் வேட்டைக்காரர் ஆயுதத் தாக்குதல் நடத்தியது.[16]
- வேட்டை முறியடிப்பாளர்கள் மீது காட்டஸ்மோர் வேட்டை அமைப்பாளர்கள் தாக்குதல் நடத்தியது.[17]
- பிளாக்மோர் மற்றும் ஸ்பார்க்போர்டு வேட்டை ஆதரவாளர்கள் வேட்டை முறியடிப்பாளர்களைத் தாக்கி மிரட்டியது.[18]
- மேற்கு மிட்லாண்ட்ஸ் வேட்டை முறியடிப்பாளர்கள் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டது.[19]
- வேட்டை முறியடிப்பாளர்கள் வளைக்கரடி வேட்டைக்காரர்களால் ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டது.[20]
மேற்கோள் தரவுகள்
[தொகு]- ↑ "What is hunt sabotage?". huntsabsireland.com.
- ↑ 2.0 2.1 Goldman, E. (2022-08-22). The Traditional Art of Hunt Sabotage: A Tactics Manual. Independently published. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-8472050968.
- ↑ "Sweden: Help Hunt Sabs Fight Against Wolf Cull". earthfirstjournal.news. 2022-10-07.
- ↑ "A Night with the Secretive Animal Rights Group Sabotaging England's Badger Cull". vice.com. 2022-10-22.
- ↑ "Hunting towers burned". North American Animal Liberation. 29 January 2018. பார்க்கப்பட்ட நாள் 20 April 2018.
- ↑ "hunt-saboteurs-target-yorkshire-dales-grouse-shoots-on-glorious-12th". richmondshiretoday.co.uk. 2023-08-13.
- ↑ "HSA Tactics Book - Legal". Hunt Saboteurs Association. Archived from the original on 24 November 2007. பார்க்கப்பட்ட நாள் 20 April 2018.
- ↑ "Traps & Snares: Secret Sabotage". Hunt Saboteurs Association. Archived from the original on 1 May 2013. பார்க்கப்பட்ட நாள் 20 April 2018.
- ↑ Huskisson, Mike (1983-12-01). Outfoxed. Michael Huskisson Associates. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0950928401.
- ↑ Huskisson, Mike (2017-02-28). Outfoxed Again: Winning for Animals. Animal Welfare Information Service. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0993382215.
- ↑ "What an Animal Investigator Learned From 50 Years of Undercover Work". sentientmedia.org. 2022-09-06.
- ↑ "MASS CRIMINALITY IN HUNTING COMMUNITY REVEALED THROUGH LEAKED WEBINARS". huntsabs.org. 2020-11-27.
- ↑ "Herstmonceux: Hunt saboteur complains of assault and car damage". BBC. 2024-01-04.
- ↑ "Man jailed for Sibbertoft assault on hunt saboteur". BBC. 2024-11-10.
- ↑ "Two hunt saboteurs have been subjected to a terrifying ambush orchestrated by thugs from the Devon & Somerset Staghounds". huntsabs.org.uk. 2023-07-23.
- ↑ "Hunter arrested after attacking saboteur with a shovel". protectthewild.org.uk. 2023-11-23.
- ↑ "INVESTIGATION AFTER FEMALE HUNT SABS ASSAULTED". harboroughfm.co.uk. 2024-01-12.
- ↑ "Hunt saboteurs face 'violent rampage as homes targeted and car windows smashed'". independent.co.uk. 2023-10-07.
- ↑ "West Midlands Hunt Saboteurs persistently targeted, harassed and assaulted by police". https://netpol.org/. 2023-02-03.
{{cite web}}
: External link in
(help)|website=
- ↑ "Hunt saboteur 'left to die' after being brutally beaten while confronting badger baiters". mirror.co.uk. 2021-04-30.
மேலும் படிக்க
[தொகு]நூல்கள்
- Mark Mathew Braunstein (November–December 1995). "Confessions of a Hunt Saboteur: A Real Sab Story". Country Connections. பன்னாட்டுத் தர தொடர் எண்:1082-0558. https://www.all-creatures.org/cash/cc95au-con.html. பார்த்த நாள்: 2017-10-12. "The hunters took aim (upon deer, not upon us) and were just about to release the bowstrings. BOOM! The blasts from our foghorns twice sent deer fleeing to safety.".
- Pedler, Ian (2008). Save our stags : the long struggle against Britain's most controversial blood sport. Bristol: Black Daps. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780955478604.
- Huskisson, Mike (1983-12-01). Outfoxed. Michael Huskisson Associates. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0950928401.
- Huskisson, Mike (2017-02-28). Outfoxed Again: Winning for Animals. Animal Welfare Information Service. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0993382215.