உள்ளடக்கத்துக்குச் செல்

முதலாம் காசியப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் காசியப்பன்
அநுராதபுர மன்னன்
ஆட்சி473–495
முன்னிருந்தவர்தாதுசேனன்
முதலாம் முகலன்
மரபுஅநுராதபுர இராச்சியம்
தந்தைதாதுசேனன்

முதலாம் காசியப்பன் (Kashyapa I, பொ.பி. 479 - 497) என்பவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்தில் இரண்டாம் மன்னனாவான். இவன் மௌரிய மன்னர்கள் வம்சத்தில் முதலாமனவனும் தன் தந்தையுமானவனான தாதுசேனன் என்பவனைச் சிறையில் அடைத்து கொன்றும் விட்டு அரசக்கட்டிலில் ஏறியவன்.

முதலாம் காசியப்பன் ஆட்சி செய்த சிகிரியா கோட்டை

காசியப்பனின் தந்தையின் இன்னொரு மனைவியின் மகனும் ஆட்சிக்கு ஏற வேண்டிய பட்டத்து இளவரசனான முதலாம் முகலன் (பொ.பி. 497 - 515) என்பவன் தன் தந்தையைக் காசியப்பன் கொன்றுவிட்டதை அறிந்தவுடன் தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்றான். அவன் திரும்பி வந்து தன்னைத் தாக்கக் கூடும் என்றெண்ணிய காசியப்பன் சீககிரி (தற்போதுள்ள அநுராதபுரத்திலிருந்து தென்கிழக்கே இருக்கும் சிகிரியா) என்னும் மலைக்கோட்டை அரண்மனையைக் கட்டி அங்கிருந்து அரசாண்டான். இவனுடைய பதினெட்டாம் ஆட்சியாண்டில் இவன் எதிர்பார்த்தபடியே முதலாம் முகலன் தன் நண்பர்களான தமிழ்நாட்டு நிகந்தர்களை இணைத்துக் கொண்டு படையெடுத்து வந்தான். தான் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தவுடன் காசியப்பன் தன் வாளால் தன் தலையை வெட்டி தற்கொலை செய்து கொண்டான். அதன் பிறகு முகலனே இலங்கையை அரசாண்டான்.[1] காசியப்பன் இறப்பதற்கு முன் அவன் அனுப்பிய திருமுகம் ஒன்று ஆறாம் நூற்றாண்டின் போது சீன அரசன் ஒருவனுக்கு சென்றிருக்கிறது என்பதைக் கொண்டு இவன் அரசாட்சிக் காலத்தை ஐந்தாம் நூற்றாண்டென நிச்சயிக்க முடிகிறது.[2]

இவற்றையும் பார்க்க

[தொகு]

ஆட்சியாளர் பட்டியல், இலங்கை

மேற்கோள்கள்

[தொகு]
  1. சூல வம்சம், 39ஆம் பரிச்சேதம், 1 - 28
  2. J.R.A.S. Ceylon Branch, XXIV, 85

மூலநூல்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_காசியப்பன்&oldid=2240444" இலிருந்து மீள்விக்கப்பட்டது