கோதாபயன் (இலம்பகர்ண அரசன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோதாபயன் அல்லது மேகவண்ணாபயன் (பொ.பி. 254 - 267) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர்களுள் பதினாறாமானவன். முதலாம் லம்பகர்ண அரசர்களுள் பதிமூன்றாமானவனான விசயகுமாரன் (பொ.பி. 247 - 248) ஆட்சியின் போது இருந்த தலைமை அமைச்சர்களுள் மூன்றாமானவன். இவனது ஆட்சிக்கு முன்னிருந்த பதினைந்தாம் லம்பகர்ணனும் விசயகுமாரன் அமைச்சர்களில் இரண்டாமானவனுமான சிறிகங்கபோதி (பொ.பி. 252 - 254) என்றவனை தோற்கடித்து இலங்கையை கைப்பற்றினான்.[1]

சங்கமித்ரர்[தொகு]

சங்கமித்ரர் என்பவர் மகாயான பௌத்தம் என்ற பௌத்த மதப்பிரிவின் சோழநாட்டுத் தலைவராவார். இலங்கையைச் சேர்ந்த மகாயான பௌத்த பிக்குக்கள் இலங்கையிலிருந்து தேரவாத பௌத்தம் பிரிவைச் சேர்ந்த பிக்குக்களால் கோதாபயன் காலத்தில் நாடுகடத்தப்பட்டனர். இதை கண்டிப்பதற்காகவும் இலங்கையில் மகாயான பௌத்தத்தை பரப்புவதற்காகவும் சங்கமித்ரர் கோதாபயன் அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த தேரவாத பௌத்த பிக்குகளிடம் சமயவாதம் செய்து வென்றார். அந்த பிக்குகளையும், கோதாபயன் மற்றும் அவன் இரு மகன்களையும் மகாயான பௌத்தத்தைத் தழுவச் செய்தார். அதன் பிறகு கோதாபயனின் முதல் மகனான சேட்டதிச்சன் இலங்கைக்கு அரசனானான்.

மூலநூல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Siriweera, W. I. (2004). History of Sri Lanka. Dayawansa Jayakodi & Company. பக். 246, 247. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-551-257-4.