நிகந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிகந்தர் என்பவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்களால் தமிழ்நாட்டை ஆண்டவர்களாகக் கருதப்படும் ஒரு அரசவம்சத்தினர் ஆவர். நிகந்தர் என்பதற்கு சைன மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொருள். இவர்கள் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் மூன்றாமானவனான முதலாம் மொக்கல்லானன் என்பவனுக்கு மொக்கல்லானனின் மாற்றாந்தாய் மகனும் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் இரண்டாமனவனுமான முதலாம் காசியப்பன் என்றவனை எதிர்ப்பதற்கு உதவினார்கள்.[1]

நிகந்தர்கள் யார்?[தொகு]

  1. இலங்கை மௌரிய மன்னர்கள் வழிவந்தவர்கள் இலங்கையை ஆண்ட போது இவர்கள் தமிழ்நாட்டை ஆண்டதாக சூல வம்சம் என்னும் இலங்கை வரலாற்று நூலில் கூறப்படுவதால் இவர்களின் காலம் பொ.பி. 450 - 550 என்று கூறலாம்.
  2. நிகந்தர் என்பதற்கு சைனர் என்ற பொருள்படுவதால் இவர்கள் சைன சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகிறது.
  3. அதேசமயம் களப்பிரர் என்ற தமிழகத்தை ஆண்ட மன்னர்களும் சைன சமயத்தையே ஆதரித்தனர்.
  4. அக்காலத்தில் தமிழகத்தை ஆண்ட பல்லவர்களும் பௌத்தம் என்ற புத்தமதத்திற்கே அதிகம் ஆதரவளித்தனர்.

நிகந்தர்கள் களப்பிரர்களே[தொகு]

  1. இலங்கை மௌரிய மன்னர்கள் ஆரம்ப காலத்தில் தமிழ்நாட்டில் களப்பிரர் கையே ஓங்கியிருந்தது.
  2. இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் முதலாமானவனான தாதுசேனன் என்பவன் பாண்டியர் வம்சத்துள் இலங்கை இராசராட்டிரம் பகுதியை ஆண்ட ஆறு இராசராட்டிரப் பாண்டியர்களிடமும் போரிட்டவன். அதனால் மொக்கல்லானனுக்கு பாண்டியர்களின் உதவி கிடைத்திருக்க நியாயமில்லை.
  3. மேலும் நிகந்தர்கள் பெரும்படையை உதவிக்கு அனுப்பினர் என்று கூறப்படுவதால் இவர்கள் பாண்டியர்களாக இருக்க முடியாது. அக்காலத்தில் பாண்டியர்கள் களப்பிரர் ஆட்சிக்கு கீழிருந்தனர். அதனால் களப்பிரர்களே பெரும்படையை வைத்திருக்கக் கூடும்.

மேற்கொடுத்த தகவல்களை கொண்டு நிகந்தர்கள் களப்பிரர்களே என்று மயிலை சீனி. வேங்கடசாமி நிறுவுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. சூல வம்சம், 39ஆம் பரிச்சேதம், 1 - 58

மூலநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகந்தர்&oldid=2117746" இலிருந்து மீள்விக்கப்பட்டது