குமார தாதுசேனன்
Appearance
குமார தாதுசேனன் (பொ.பி. 515 - 524) இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் நான்காம் மன்னனாவான். இவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் மூன்றாமானவனும் தன் தந்தையுமான முதலாம் மொக்கல்லானன் இறந்த பிறகு ஆட்சிக்கட்டிலில் ஏறினான். இவனின் அமைச்சனின் மகனான காளிதாசன் என்பவனுடன் இவனுக்கு உயிருக்கு மேலான நட்பு இருந்தது. அவன் இறந்தவுடன் அந்த துயரம் தாங்காமலே இவனும் உயிர்நீத்தான். இவனுக்குப் பிறகு இவனுடைய மகனான கீர்த்தி சேனன் இலங்கையை அரசாண்டான்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சூல வம்சம், 41ஆம் பரிச்சேதம், 1 - 3
மூலநூல்
[தொகு]- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
- சூல வம்சம்