சீலா (மீன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீலா மீன்
புதைப்படிவ காலம்:56–0 Ma
Early இயோசீன் to Present[1]
நெதர்லாந்து அருகில் சேபா என்ற இடத்தில் எடுக்கப்பட்ட படம்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெழும்புள்ளவை
வகுப்பு: உணவாகும் வகை
வரிசை: பெரிய முதுகெலும்பி
குடும்பம்: Sphyraenidae
Rafinesque, 1815
பேரினம்: Sphyraena
J. T. Klein, 1778

சீலா மீன் ( ஆங்கிலம் : Barracuda) உணவிற்குப் பயன்படும் முதுகெலும்புள்ள திருக்கை மீன் போன்ற ஒருவகை மீன் இனம் ஆகும். இவற்றின் தோல் பகுதி மின்மையான செதில்களைக்கொண்டு காணப்படுகிறது. இவை பொதுவாக 2.1 மீட்டர் (6.9 அடி) நீலமும், 30 செமீ (12 அன்குலம்) அகலமும் கொண்டு காணப்படுகிறது.[2][3] இவை அட்லாண்டி பெருங்கடல், கரிபியக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்[4] போன்றவற்றில் காணப்படுகிறது. இவை உப்பு நீரிலும், நன்னீரிலும் வளரும் தன்மைகொண்டது. இவை தண்ணீரின் மேல் மட்டத்திலும் பவளப்பறைக்கு அருகிலும் வாழுகிறது.[5]உலகிலேயே அதிக விஷத்தன்மை உடைய மீன் வகை இது என கருதப்படுகிறது.

வகைகள்[தொகு]

இவற்றில் ஓலைபோன்று நீளமாகக்காணப்படுவது ஓலைச் சீலா, கட்ட்கையாக உடல் முழுவதும் சாம்பல் நிறம் கொண்டு காணப்படுவது கட்டையஞ்சீலா, உருண்டைவடிவில் இருப்பது குழிச் சீலா, உடல்முழுவதும் சாம்பர் நிறம், வாயில் மட்டும் மஞ்சல் நிறத்தில் காணப்படுவது கரைச் சீலா (இவை கரை ஓரங்களில் காணப்படும்), கொழுப்பு அதிகமகவும் சாப்பிட அதிக சுவையுடன் உள்ள சீலா நெய் சீலா, வெள்ளுராச் சீலா, லோப்புச் சீலா, மற்றும் நாய்க்குட்டிச் சீலா என பலவகையில் இவை காணப்படுகின்றன.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீலா_(மீன்)&oldid=3583665" இருந்து மீள்விக்கப்பட்டது