பேய்க்கணவாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30: வரிசை 30:
உககத்திலுள்ள எல்லா எண்காலிகளும் நச்சுத் தன்மை உடையன என்றாலும் நீல வளையங்களைக் கொண்ட எண்காலி மட்டுமே மனிதரைக் கொல்லக் கூடிய அளவு நச்சுத் தன்மையானது. இந்த அழகான எண்காலி உலகிலுள்ள மிகவும் நச்சுத் தன்மையான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் நஞ்சுக்கு மாற்று மருந்து கிடையாது என்பதும் கவனிக்கத் தக்கது.<ref>http://pointpedro.blogspot.com/2010/07/blog-post.html</ref>
உககத்திலுள்ள எல்லா எண்காலிகளும் நச்சுத் தன்மை உடையன என்றாலும் நீல வளையங்களைக் கொண்ட எண்காலி மட்டுமே மனிதரைக் கொல்லக் கூடிய அளவு நச்சுத் தன்மையானது. இந்த அழகான எண்காலி உலகிலுள்ள மிகவும் நச்சுத் தன்மையான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் நஞ்சுக்கு மாற்று மருந்து கிடையாது என்பதும் கவனிக்கத் தக்கது.<ref>http://pointpedro.blogspot.com/2010/07/blog-post.html</ref>


==உருமாற்றம் மற்றும் நிறமாற்றம்==
==நிகழ்படம்==
[[File:Octopus.ogv| thumb|''Octopus cyanea'' என்ற எண்காலி இனம் தன் நிறம், உருவம் மற்றும் தன்மையை மாற்றும் காணொளி|alt=எண்காலி தன் தோற்றத்தை மாற்றும் காணொளி]]
{{video|filename=Moving Octopus Vulgaris 2005-01-14.ogv|title=எண்காலி நகரும் காட்சி|description=14-01-2005 அன்று, பிரான்க்பர்ட் விலங்கியல் பூங்காவில் பதிவு செய்யப்பட்டது|format=[[Ogg]]}}

இரையை வேட்டையாடவும் எதிரிகளிடம் இருந்து தப்பிக்கவும் எண்காலிகள் உருமாறுகின்றன. இதற்காக எண்காலிகள் உடலில் தனித்துவமான தோல் உயிரணுக்கள் அமைந்துள்ளன. மேலும் இவற்றின் உடலில் உள்ள பல்வேறு நிறங்களைக் கொண்ட நிறமிகளின் மூலம் நிறம் மாறுகின்றன.
<ref>{{cite web | url=http://www.dnr.sc.gov/marine/sertc/species_month.htm | title=Tales from the Cryptic: The Common Atlantic Octopus | accessdate=27 July 2006 | last=Meyers|first=Nadia | publisher=Southeastern Regional Taxonomic Centre}}</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

06:49, 26 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

எண்காலி
பொதுவான எண்காலி Octopus vulgaris.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
எண்காலிகள் (Octopoda)

Suborders

Pohlsepia (incertae sedis)
Proteroctopus (incertae sedis)
Palaeoctopus (incertae sedis)
Cirrina
Incirrina

வேறு பெயர்கள்
  • Octopoida
    Leach, 1817

எண்காலி (ஆங்கிலம்: Octopus) என்பது மெல்லுடலி தொகுதியைச் சேர்ந்த கடல்வாழ் குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் உள்ள இனங்கள் அனைத்தும் எட்டு கிளை உறுப்புகளைக் கொண்டுள்ளதால் எண்காலிகள் என்று அழைக்கப்படுகின்றன. தலைக்காலிகள் (cephalopod) வகுப்பில், 300 வகையான எண்காலிகள் உள்ளன என்று கண்டறிந்துள்ளனர். இவை மொத்த தலைக்காலிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

எண்காலியின் உடலில் எலும்பு இல்லாததால், மிகச் சிறிய இடுக்குகளிலும் அவற்றால் நுழைந்து வெளிவர இயலும். இவை பொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு. எண்காலிக்கு மூன்று இதயங்கள் உண்டு. இதன் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். இதன் இரத்தத்தில் செப்பு உள்ள ஈமோசயனின் (hemocyanin) என்னும் புரதப் பொருள் உள்ளதால், உயிர்வளி (ஆக்சிசன்) ஏற்றவுடன் அது நீல நிறமாக மாறுகின்றது (ஆக்சிசன் ஏற்காத நிலையில் நிறமற்றதாக இருக்கும்). எண்காலியின் இந்த மூன்று இதயங்களில் இரண்டு இதயங்கள் கணவாயின் செதிள் அல்லது பூ (அல்லது இணாட்டு ) எனப்படும் மூச்சுவிடும் பகுதிக்கு நீல இரத்தத்தை இறைக்கப் பயன்படுகின்றது. மூன்றாவது இதயம் உடலுக்குத் தேவையான இரத்தத்தை செலுத்தப் பயன்படுகின்றது. முதுகெலும்பிகளில் உள்ள இரத்தத்தில் சிவப்பணுவில் உள்ள ஈமோகுளோபின் என்னும் இரும்புச்சத்து உள்ள இரத்தம் உயிர்வளியை எடுத்துச் செல்ல சிறந்தது என்றாலும், குளிரான கடல் பகுதிகளில், ஆக்சிசன் குறைவாக உள்ள பகுதிகளில் ஆக்சிசனை எடுத்துச்செல்ல இந்த செப்பு உள்ள ஈமோசயனின் சிறந்ததாக உள்ளது.

எண்காலிகள் அதிக காலம் வாழ்வதில்லை. பெரும்பாலும் சில மாதங்களே வாழ்கின்றன. வட பசிபிக் பெருங்கடல்களில் வாழும் சில மிகப்பெரிய எண்காலிகள் 4-5 ஆண்டுகள் வாழலாம். இனப்பெருக்கத்திற்காகப் புணர்ந்தபின் ஆண் எண்காலிகள் சில மாதங்களில் இறந்து விடுகின்றன. பெண் எண்காலிகள் முட்டையிட்டவுடன் இறந்து விடுகின்றன.

உககத்திலுள்ள எல்லா எண்காலிகளும் நச்சுத் தன்மை உடையன என்றாலும் நீல வளையங்களைக் கொண்ட எண்காலி மட்டுமே மனிதரைக் கொல்லக் கூடிய அளவு நச்சுத் தன்மையானது. இந்த அழகான எண்காலி உலகிலுள்ள மிகவும் நச்சுத் தன்மையான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் நஞ்சுக்கு மாற்று மருந்து கிடையாது என்பதும் கவனிக்கத் தக்கது.[2]

உருமாற்றம் மற்றும் நிறமாற்றம்

Octopus cyanea என்ற எண்காலி இனம் தன் நிறம், உருவம் மற்றும் தன்மையை மாற்றும் காணொளி

இரையை வேட்டையாடவும் எதிரிகளிடம் இருந்து தப்பிக்கவும் எண்காலிகள் உருமாறுகின்றன. இதற்காக எண்காலிகள் உடலில் தனித்துவமான தோல் உயிரணுக்கள் அமைந்துள்ளன. மேலும் இவற்றின் உடலில் உள்ள பல்வேறு நிறங்களைக் கொண்ட நிறமிகளின் மூலம் நிறம் மாறுகின்றன. [3]

மேற்கோள்கள்

  1. "ITIS Report: Octopoda Leach, 1818". Itis.gov. 10 April 2013. பார்க்கப்பட்ட நாள் 4 February 2014.
  2. http://pointpedro.blogspot.com/2010/07/blog-post.html
  3. Meyers, Nadia. "Tales from the Cryptic: The Common Atlantic Octopus". Southeastern Regional Taxonomic Centre. பார்க்கப்பட்ட நாள் 27 July 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேய்க்கணவாய்&oldid=2664533" இலிருந்து மீள்விக்கப்பட்டது