வலைக்கடியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வலைக்கடியன் (Beaked seasnake)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. schistosa
இருசொற் பெயரீடு
Enhydrina schistosa
(Daudin, 1803)

வலைக்கடியன்/வலைகடியன்(Hook nosed sea snake) (Enhydrina schistosa[1]) என்பது இந்தியாவின் கடற்கரைகளின் அருகில் காணப்படுகின்ற ஒரு வகை கடற்பாம்பாகும். நச்சுத் தன்மையுடைய இந்த பாம்பு கடித்தால் மனிதன் இறந்துவிட நேரிடும். இவை தரைப் பாம்புகள் போலின்றி நீரில் வாழும் தன்மையுடையன. இதன் குட்டைவால் பக்கங்களில் தட்டையாகத் துடுப்பு வடிவானது. மூக்குத்துளைகள் மேற்புறம் திறப்புள்ளவை. மூடுசவ்வுகள் அமைந்தவை. இவை அதிகமாக மீன்களையே உணவாக உட்கொள்கின்றன. இவை நீரில் குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Lanka Reptile - A guide to reptile of Sri Lanka". பார்க்கப்பட்ட நாள் 2010-12-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைக்கடியன்&oldid=2664347" இலிருந்து மீள்விக்கப்பட்டது