சிற்றாமை
சிற்றாமை | |
---|---|
![]() | |
கெம்ப்பின் சிற்றாமை | |
![]() | |
ஒலிவ நிறச் சிற்றாமை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | ஊர்வன |
வரிசை: | ஆமை |
துணைவரிசை: | மறைகழுத்துள்ளவை |
பேரினம்: | சிற்றாமை Fitzinger, 1843 |
இனங்கள் | |
கெம்ப்பின் சிற்றாமை |
சிற்றாமை (Lepidochelys) என்பது ஒரு கடலாமைப் பேரினம் ஆகும். இதில் கெம்ப்பின் சிற்றாமை மற்றும் ஒலிவ நிறச் சிற்றாமை ஆகிய இரு இனங்கள் அடங்கியுள்ளன. தற்போது கெம்ப்பின் சிற்றாமை மிக அருகிய இனங்கள் பட்டியலில் உள்ளது.[1]
பண்புகள்[தொகு]
சிற்றாமைகள் 51-71 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. இவை 36-50 கிலோ எடையைக் கொண்டிருக்கும். இவை நண்டுகள், மீன்கள், தலைக்காலிகள், சிப்பிகள் மற்றும் கடல்வாழ் தாவரங்கள் ஆகியவற்றை உண்டு வாழ்கின்றன.