வழும்பலைவிலங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வழும்பலைவிலங்கு (Gelatinous zooplankton) என்பது நீரில் வாழக்கூடிய வழவழப்பு நிறைந்த உடற்பகுதியைக் கொண்ட உயிரின வகையாகும். இதில் பல குழுக்களைச் சேர்ந்த உயிரிகள் காணப்படுகின்றன. இந்த வகை உயிரினங்களின் பெரும் பிரிவே இதன் உடலில் அமையப் பெற்ற நீரால்தான். பிற உயிரினங்களை ஒப்பிடுகையில் இதன் உடல் மிகுதியான நீரினால் ஆனது. இவ்வகையினுள் உயிரினத் தொகுதியில் காணப்படும் பெருந் தொகுதியில் இடம்பெற்ற உயிர்களும் அதே நேரத்தில் பல வகையான சிறுந் தொகுதியில் இடம்பெற்ற உயிரினங்களும் இடம் பெற்றுள்ளன. இதன் உயிரினப் பட்டியல் காலத்தால் முந்தைய ப்ரோடிசுடுகள் முதல் கார்டேட்டுகள் (தண்டுவடமுள்ள உயிரினங்கள்) வரை இடம் பெற்றுள்ளன.

இப்பிரிவு மென்மையான சதைகளாலான உடலமைப்பைக் கொண்ட நீர்வாழ் விலங்குகளைக் குறிக்கும். இதன் உடலில் இழுவைத் தன்மையும் குழகுழப்புத் தன்மையும் மிகுந்துக் காணப்படும். உடலின் உறுதியற்ற நிலையினால் இவைகளின் உடல்கள் எளிதில் சிதையக்கூடியதாகவும் சேதமடையக்கூடியதாகவும் இருக்கிறது[1]. இதில் அறியப்படும் மெய்யாதெனில் இவ்வொன்றோடுன்று வேறுபட்டிருக்கும் உயிரிகளில் தனித்தனிலையில் அதன் ஒத்த உடற்தோற்றம் அமையப்பெற்றிருப்பது ஒரு வியத்தகு நிகழ்வாகும். இவை நமக்கு வழும்பலை விலங்குகள் திறந்த கடற்பரப்பில் வாழும் உயிரிகளான இவை இயற்கையாக எவ்வாறு உடலமைப்பை பெற்றிருத்தல் வேண்டும் என்கிறது.

பொதுப்பண்பு[தொகு]

அதன வழவழப்பான உடல் தோற்றம் அதன் அடிப்படை வாழியலை ஒட்டி நிலையாகக் காணப்பட்டாலும், அதன் உணவுக்கூறு என்பது ஒரு நிலை இல்லாமலும் உறுதிப்பட கூறவியலாதவையாகவும் உள. இவ்வழும்பலைவிலங்குகள், தன வாழியலுக்கு ஒத்த பல அடிப்படைப் பண்புகளுடன் காணப்படுகின்றன.

 • அதன் ஒளியூடுத் தசைப்பின்னல்கள் கடற்மேற்பரப்பில் மறைந்து/பதுங்கி வாழ ஏதுவாக இருக்கிறது. அதாவது அவ்வுடலமைப்பானது இவ்விலங்குகளுக்கு நீரின் ஒத்த தன்மையைத் தந்து எளிதில் காணாவன்னம் வாழுகின்றன. கடலின் ஒளியூடுருவும் பகுதிகளிலிருந்து தாழ்ந்து வாழும் விலங்குகளுக்கு அதன் உடலமைப்பின் தன்மை அல்லது அதன் ஒளியூடுருவும் தன்மை குன்றிக்காணப்படுகிறது.
 • அதன் உடலின் காணப்படும் திரட்சியான நீர்த்தன்மை இவ்வுயிர்களுக்கு கடலி நீரின் ஒத்த அடர்த்தியை தருகிறது. இதனால் இவை தனக்கு ஒத்த மட்டம் அல்லது ஆழத்தில் நிலையிருத்திக் கொள்ள அடிப்படை மிதவைத்தன்மைக் தன்மைக்குத் தேவையான ஆற்றலைக் குறைக்கிறது. ஆனால், இது ஒரு அலைவிலங்கு என்பதால், ஒட்டுமொத்தமாக காணும்போது மிகைஆற்றல் அவசியமாகிறது ஏனெனில் அதன் இழுவைப் பண்புகளால்.
 • இதன் சுற்றுச்சூழலை ஒத்த உடலமைப்பானது, இயற்கையின் கட்டுப்பாடான் இயற்தடைகள், கடுமையான கொந்தளிப்பு, நீரோட்டத்தின் தாக்கத்திற்கு வலிமையில்லாமற் செய்கின்றன. ஆகையால், இவற்றிற்கு மிகவலிமையான உடலமைப்பு தேவையற்றதாகிறாது. ஆயினும், இதன் எளிதில் சிதையும் தன்மையானது இதனைக் கையாளவதில் பெருஞ் சிரமத்தையும் கூடுதல் ஆற்றல் உள்ள கடற்பகுதிகளில் வாழத்தகுதியற்ற நிலையையும் ஏற்படுத்துகிறது.
 • இதன் திரட்சியான நீர்த்தன்மை மற்றும் கலங்களற்ற குழகுழப்புத்தன்மை (jelly) இதனை வேகமாக வளரவும் அதன் பெரிய உடலமைப்பையும் பெற உதவுகிறது. இத்தன்மை அதற்கு உணவைப் பெறுவதற்கு ஏதுவாய் இருக்கிறது.
 • இதன் மிகை உடல்தோற்றம் இதையுண்ணும் ஊனுண்ணிகளுக்கு வாய்ப்பை அருக்கிறது. இதன் திரண்ட நீர்த்தன்மை இதன் உணவு மதிப்பீட்டைக் குறைக்கிறது மற்றும் அதனை உண்ணுவதற்கு ஏதுவான உயிரினங்களையும் குறைக்கிறது. இதன் பரந்த உடற்தன்மை ஒருக் குறிப்பிட்ட மெல்லுடலிகளை இணைந்து வாழ உதவுகிறது.

பிரிவுகள்[தொகு]

இதன் பிரிவுகளில் காணப்படும் உயிரின வகைகள்

 • சொறிமுட்டை - மெடுசே
 • ரேடியோலேரியா
 • சைபனோபோரா (Siphonophores)
 • சீப்பு இழுவைகள் - டீனோபோர்கள் (Comb jellies - Ctenophores]
 • அப்பெண்டிகுலேரியன்கள் (Appendicularians)
 • சால்புகள் (Salps)
 • கீட்டோனாத்துகள் (Chaetognaths) ஆகியன சில[2] .

சூழலியல்[தொகு]

வழும்பலை விலங்குகள் உலகின் பெரும்பாலான கடற்பகுதிகளில் காணப்படுகின்றன. வெப்பமண்டலம் முதல் துருவப்பகுதிகள் வரைக்காணக்கிடக்கின்றன. அவை குறிப்பிட்டு இவ்விடங்களில் வாழ்வை என வரையரைச் செய்ய இயலாது அனைத்து மட்டங்களிலும் காணக்கிடக்கின்றன. அவைகளில் பெரும்பான்மையா அளவில் பெரியதாகவும் மிருதுவான உடற்தோற்றத்துடனும் காணப்படுகின்றன. கடற்கொந்தளிப்பு இல்லாதா பகுதிகளான கடல் அடியில் இவ்வுயிர்கள் மிகுதியான அளவில் வளருகின்றன. மேலும் இவை திடமான உயிரியாகும் அதாவது எந்த பரப்பிலும் கடல் நிலையிலும் வாழ்த்தகுதியுடையதாய் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக போர்த்துகல் போர்மனிதன் என அழைக்கப்படும் பைசாலியா பைசாலிசு (Physalia physalis), வளி-நீர் இடைமட்டத்தில் வசிப்பவை. இவை சூறைக்காற்றால் இழுத்துச்செல்லப்படுகின்றன. டீனோபோரான நெமியாப்சிசு லெயிடியி (Mnemiopsis leidyi) கொந்தளிப்பு நீரோட்டம் மிகுதியாக உள்ள கழிமுகத்திலும் வாழக்கூடியவை.

பொதுவாக, வழும்பலைவிலங்குகள் அலைவிலங்குகளுக்குள் பொருந்தாது என்று அலைவிலங்கு வல்லுநரகள் மறுப்பதற்கு அவை மாதிரிகள் கொள்ளத்தக்க வடிவில் மிருதுவாகவும் இலகுவாகவும் இருப்பதனால் தான். மிகுதியானவை மிதவைவாழியின் வலைகளில் பட்டு கிழிந்துவிடும், மற்றும் பல ஆழத்தில் வசிப்பவனவாகவும் அவைகளில் சைபனோபோர்கள், டீனோபோர்கள் மிக நுண்மையாக எடுக்கவே முடியாத வடிவில் இலகுவாகவும் கூட்டாக சிதையாமல் எடுப்பதே சிரமமாகும். இவ்வழும்பலை யுயிர்கள் அனைத்து உணவு முறையிலும் ஆக்கிரமித்துள்ளன. அவை அடிப்படை உணவாவதிலிருந்து, மேய்வனவாகவும், ஊனுண்ணிகளாகவும் இருக்கின்றன. இதனுடைய ஆற்றல்மிகு உணவு உட்கொள்ளும் முறை, வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் பெரும்பான்யான அலைவிலங்குகளை புறந்தள்ளுகின்றன. அவைகளில் சில படர்ச்சி நிலையை உண்டுச்செய்து சூழ்நிலையை மாற்றும் வல்லமையும் பெற்றிருக்கிறது. இவ்வழும்பலைவிலங்குகள் அனைத்து மிதவைவாழிகளின் வாழ் உட்பிரிவிலும் காணப்படும் உயிரினங்களாகும்.

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்[தொகு]

 1. Graham WM, Pages F and WM Hamner, 2001, A physical context for gelatinous zooplankton aggregations: a review, Hydrobiologia, 451: 199 - 212
 2. Madinand LP, Harbison GR, Gelatinous Zooplankton, Encyclopedia of ocean sciences: Marine Biology, 2009, 2nd Edition, John H Steele (Ed.,), Academic Press, Elsevier, p.51-61
"https://ta.wikipedia.org/w/index.php?title=வழும்பலைவிலங்கு&oldid=3408991" இலிருந்து மீள்விக்கப்பட்டது