குழியுடலிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குழியுடலிகள்
Comb jellies (Beroe spp.)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
துணைத்திணை: Eumetazoa
தொகுதி: Coelenterata
Phyla

குழியுடலிகள் (Coelenterata) என்பவை உடலின் மத்தியில் நீண்ட குழல் போன்ற பகுதியையும், ஆரச் சமச்சீருடைய உடலையும் கொண்ட பல்லுயிரணு உயிரிகள் ஆகும். ஹைட்ரா, ஒபீலியா, ஜெல்லி மீன்கள், அனிமோன்கள் ஆகியவை குழியுடலிகள் ஆகும். இவற்றைத்தவிர கடலில் பவளப் பாறைகளை உருவாக்கும் பவளங்களும் குழியுடலிகள் வகுப்பைச் சேர்ந்தவையே. இவற்றின் உடல்கள் உயிரணுக்களின் இரண்டு அடுக்குகளாலான சுவர்களைக் கொண்ட பையை ஒத்தவை. ஒரே ஒரு வெளித்திறப்பை மட்டுமே கொண்ட செரிப்புக்குழி ஒன்றை இவை பெற்றுள்ளன. குழியுடலிகள் பெரும்பாலும் இருக்கை நிலையிலேயே வாழ்கின்றன.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குழியுடலிகள்&oldid=3356250" இலிருந்து மீள்விக்கப்பட்டது