கடல்வாழ் புழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எடுத்துக்காட்டாக 4000 மீட்டர் ஆழத்தில் வாழக்கூடிய பர்போர்லாசியா கோருகேட்டஷ் என்ற கடல் வாழ் உயிரினம்.

பெருங்கடல் புழு (marine worm) என்பது பெருங்கடலின் சுற்றுச்சூழலில் வாழும் புழுக்களைக் குறிக்கும். பெருங்கடல் புழு தட்டைப் புழு, உருளைப்புழு, வளையப் புழு உட்படப் பல்வேறுபட்ட தொகுதியில் காணப்படுகிறது. கடல் உயிரிகளில் சிலவற்றை கடல் புழுக்கள் என அழைக்கின்றோம்.

பெரும்பாலான புழுக்கள் சிறப்பு வாய்ந்த உணர்நீட்சிகளைக் கொண்டுள்ளன. இவை ஆக்சிசன் மற்றும் கார்பனீராக்சைடு வளிமப் பரிமாற்றத்திலும், இனப்பெருக்கத்திலும் ஈடுபடுகின்றன.

சிலவகையான பெருங்கடல் புழுக்கள் குழல் புழுக்களாகும். சில இராட்சத குழாய் புழுக்கள் நீரின அடிப்பகுதியில் உள்ள எரிமலைப் பகுதியின் அருகே வாழ்கிறது. தனது உடல்வெப்பநிலையை 90'செ (அல்லது 194'பாரன்கீட்) என்ற அளவில் நிலையாக வைத்துள்ளது.

சில வகையான புழுக்கள் அகழியில் வாழ்கின்றன. இந்த புழுக்கள்[1] முதலில் பசிபிக் பெருங்கடலின் கேலபேகசி தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Giant Tubeworms Probed for Clues to Survival". news.nationalgeographic.com. பார்க்கப்பட்ட நாள் 2018-05-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்வாழ்_புழு&oldid=3073354" இலிருந்து மீள்விக்கப்பட்டது