கூனல் முதுகுத் திமிங்கிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Humpback whale[1]
புதைப்படிவ காலம்:Late Miocene–Recent[2]
Illustration of a whale next to a human diver. The whale is many times larger than the human.
Size compared to an average human
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: இரட்டைப்படைக் குளம்பி
உள்வரிசை: கடற்பாலூட்டி
குடும்பம்: Balaenopteridae
பேரினம்: Megaptera
இனம்: novaeangliae
இருசொற் பெயரீடு
Balaenoptera musculus
Humpback whale range
வேறு பெயர்கள்
  • Balaena gibbosa Erxleben, 1777
  • B. boops Fabricius, 1780
  • B. nodosa Bonnaterre, 1789
  • B. longimana Rudolphi, 1832
  • Megaptera longimana Gray, 1846
  • Kyphobalaena longimana Van Beneden, 1861
  • Megaptera versabilis Cope, 1869

கூனல் முதுகுத் திமிங்கிலம் (உயிரியல்: Megaptera novaeangliae, ஆங்கிலம்:humpback whale) என்பது கடலில் வாழும் பலீன் திமிங்கிலங்களில் அடங்கும், ஒரு இனமாகும், முதுகுத் துடுப்படைய திமிங்கில வகைகளில் இது பெரியது ஆகும். நமது பூமியில் இவற்றின் எண்ணிக்கை 80,000 என கணக்கிடப் பட்டுள்ளது. அவற்றில் 18,000–20,000 கூனல் முதுகுத் திமிங்கிலங்கள், வட பசிபிக் பெருங்கடல் முழுமையிலும், ஏறத்தாழ 12,000 திமிங்கலங்கள் வட வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளிலும், 50,000 திமிங்கலங்கள் தெற்கு அரைக்கோளம் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இதற்கு முன் இதன் எண்ணிக்கை 125,000 இருந்தது, தற்போது குறைந்துள்ளது. இந்த உயிரினத்தினை பாதுகாக்கும் வழிமுறைகளை, மேற்கத்திய நாடுகள் பின்பற்றத் தொடங்கிய உள்ளன.

வளரியல்பு[தொகு]

இவ்வகைத் திமிங்கிலங்களின் வாழ்நாள் ஏறத்தாழ நூறு ஆண்டுகள் ஆகும். நூறு ஆண்டுகளையும் கடந்து வாழும் இம்மீனினங்கள் இருப்பதாக, இது குறித்த ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகின்றனர். பொதுவாகத் திமிங்கிலங்களின் பற்களின் அமைவைக் கொண்டு இரு வகையாகப் பிரிக்கலாம். பற்கள் உள்ளவை. பற்கள் இல்லாதவை. பற்கள் இல்லாதவை பலீன் வகைத் திமிங்கிலங்கள் எனலாம். 'பலீன்' என்பதை தமிழில் 'சிம்பு' எனலாம். அதாவது குட்டியாக இருக்கும் போது, அவற்றின் பற்கள் விழுந்து விடும். இன்னும் சொல்லப் போனால், அது கருவறையிலேயே தன் பற்களை இழந்து விடுகின்றன. அதன்பிறகு தோன்றும் பற்களானது எலும்புகளற்று, உறுதியான தசைகளால், தலை வாரும் சீப்பின் சிம்புகள் போல, தொங்கும். இந்த வாய் சிம்புகள், இரை பிடித்தலில் பயனாகிறது. எப்படி என்றால், பெருமளவு நீரை வாயில் இழுக்கும் போது, அதனுள் இருக்கும் இதன் இரைகளை, வடிகட்ட இது பயனாகிறது.

நன்கு வளர்ந்த இத்திமிங்கிலமானது 12–16 m (39–52 அடி) நீளம் உடையதாக இருக்கும். இதன் அதிக அளவு எடையானது 36,000 kg (79,000 lb) இருக்கும். இதன் உடலானது தனித்துவ வேறுபாட்டுடன் இருக்கிறது. இவ்வுயிரியன் முதுகுப்புற துடுப்பானது நீளமாக இருக்கும். தலையின் வடிவமானது, பெரிய குமிழி போன்று இருக்கும். இது நீந்தும் முறையும், அப்பொழுது அது மூச்சு விடும் முறையும் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் அமைந்து, அதனால் இது பலராலும் கவரப் படுகிறது. இதன் தலைப்பகுதியும், வால் பகுதியும் உடலின் நடுப்பகுதியை விட குறுகியே காணப்படும். இதனால் இது நீரை கிழித்துக் கொண்டு தடையில்லாமல் நீந்தும் திறனைப் பெறுகின்றன. பாலூட்டிகளின் உடலில் தோல்முடிகள் இருக்கும். ஆனால், திமிங்கலங்கள் தோல்முடிகளை குட்டியிலேயே இழுந்து விடுகின்றன. அவற்றிற்கு பதில், கெட்டியான கொழுப்புப் படலம் உருவாகிறது. இதன் மூளை நன்கு வளர்ந்து இருந்தாலும், நீருக்கு மேலே இது அதிக தொலைவைக் காண இயலாது.

இதன் மூச்சுத் துளைகள், தலையின் மேற்புறம் இருப்பதால், உணவு உண்ணும் போது, அது தடையாக இருப்பதில்லை. ஏனெனில், இதன் மூச்சுக் குழாய்கள் அத்துளைகளுக்கும் பின்னால் அமைந்துள்ளன. ஏறத்தாழ 20 நிமிடங்களுக்கு ஒரு முறை நீரின் மேற்பரப்புக்கு இது வரும் இயல்பானது. அப்பொழுது அதன் நெஞ்சுக்கூட்டின் நீர் அழுத்தம் குறைவாக ஆவதால், அது மூச்சு விட தடுமாறுகிறது. அதனால் அது தன் மார்பு மீது நீர் அழுத்தத்தை உருவாக்கிக் கொள்ள துள்ளி நீரில் விழும், உடற்செயலியல் நுட்பத்தைக் கையாள்கிறது. அச்சப் பட்டால், இவை கடலின் ஆழத்திற்கு சென்று, இரண்டு மணி நேரம் கூட மேலே வராமல் தங்கி விடும் திறனை உடையதாக விளங்குகிறது. இந்தத் திமிங்கலத்தின் குடலில் இருந்து எடுக்கப்படும் ஆம்பர் என்ற நறுமணப் பொருள் விலை மிக்கது ஆகும். மேலும், இதன் உடலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயானது, சோப்பு, மெழுகுவர்த்தி செய்யப் பயனாகிறது.

இனப்பெருக்க இடப்பெயர்ச்சி[தொகு]

ஒவ்வொரு வருடமும், இனப்பெருக்கத்திற்காக, பெருங்கடல்கள் வழியாகவும், பிற கடல்கள் வழியாகவும் இவை இடம் பெயரும் வழக்கத்தினை மேற்கொள்கின்றன. அப்பொழுது இதன் கூட்டமானது, வருடந்தோறும் 25,000 km (16,000 mi) தொலைவினை நீந்தி கடக்கின்றன. துருவப் பகுதியில் உள்ள நீரின் சிறுமீன்களையும், கிரில் போன்றவைகளையும் உண்டு பருக்கின்றன. இனப்பெருக்கத்திற்காக வெப்ப வலயம், மித வெப்ப வலயம் இருக்கும் பகுதிகளில் அவை குட்டிகள் போட்டு, இனப்பெருக்கத்தினை வரை, அவை உண்ணாமல் நோன்பு இருக்கின்றன. ஆனால் தனது உடலில் சேமித்து வைத்துள்ள கொழுப்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாக செமித்து, தனது உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுகின்றன. இக்கொழுப்பை உணவாக மாற்றிக் கொள்ளும் திறன் வியப்புக்குரிய உடற்றொலியல் சிறப்புச் செயலாகும்

இனப்பெருக்கக் கூவல்[தொகு]

ஆணின கூனல் முதுகு திமிங்கிலம், மிகவும் சிக்கல்கள் மிகுந்த ஒலியலைகளை உருவாக்குகின்றன. அந்த ஒலி எழுப்பும் காலமானது, 10 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை இருக்கும். இப்படியாக சிறிது இடைவெளி விட்டு விட்டு மணி கணக்கில் பாட்டொலி எழுப்பிக் கொண்டு இருக்கும். இ்ந்த ஒலிகளின் முக்கிய நோக்கம், இலக்கு யாதெனில் அதற்குரிய பெண் இனத்தோடு கலவி செய்து, இனப்பெருக்கத்தை செய்வதற்கே ஆகும். கூனல் முதுகுத் திமிங்கலம் என்று ஒருவகைத் திமிங்கலம் (Hump-back Whale) இருக்கிறது. அது பலவிதமாகக் கூவும். பலநூறு மைல்களுக்கு அப்பால் ஆழ்கடலை ஊடுருவி, இந்தக் கூவல் செல்லும் தூரத்தில் உள்ள சம்பந்தப்பட்ட மற்றொரு திமிங்கிலம், பதில் ஒலியலைகளை எழுப்பி விடுக்கும். இதனை சோனாரா (sonarWhale Song) என்னும் கருவியின் மூலம் கேட்கமுடிகிறது. திமிங்கிலக் கூவலை திமிங்கில இசை என்று அழைப்பார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mead, J.G.; Brownell, R. L. Jr. (2005). "Order Cetacea". in Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Johns Hopkins University Press. பக். 723–743. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மையம்:62265494. http://www.departments.bucknell.edu/biology/resources/msw3/browse.asp?id=14300027. 
  2. "Fossilworks: Megaptera". Fossilworks. Archived from the original on 2018-04-09. பார்க்கப்பட்ட நாள் 2018-04-08.
  3. https://www.iucnredlist.org/search?query=humpbacked%20whale&searchType=species

வெளி இணைப்புகள்[தொகு]