இருகலப்பாசி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இருகலப்பாசிகள் | |
---|---|
![]() | |
இருகலப்பாசிகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | மெய்க்கருவுயிரி |
திணை: | Chromalveolata |
தொகுதி: | Heterokontophyta |
வகுப்பு: | பாசிலரோபய்டா |
வரிசை | |
இருகலப்பாசிகள் (இலங்கை வழக்கு: தயற்றம், ஆங்கிலம்: Diatoms) என்னும் சொல் இரண்டு எனப்பொருள் தரும் கிரேக்க மொழிச்சொற்களில் இருந்து உருவானது:: διά (dia, ட'யா) = "through" ("ஊடே")+ τέμνειν (temnein, டெம்னைன்) = "to cut" ("வெட்டு"), அதாவது "பாதியாய் பகுப்பது" ("cut in half" ) பாசிகளிலேயே மிகவும் தனித்தன்மை கொண்டவை. இவற்றின் அமைப்பு சலவைக் கட்டிகளை இட்டுவைக்கும் டப்பிக்களைப் போல, மேலே ஒரு கலமும் கீழே ஒரு கலமுமாக இருக்கும். இதன் கலங்கள் சிலிக்கா செல்களால் அமைந்தவை. ஒவ்வொறு சிற்றினமும் தங்களுக்கே உரிய பல்வேறு வேலைப்பாடுகள் மிகுந்த கல மேற்கூரையைக் கொண்டிருக்கும். இந்த வேலைப்பாடுகளே ஒரு சிற்றினத்திலிருந்து மற்றொன்றைக் கண்டுபிடிக்க வகைப்பாட்டியலில் உதவுகிறது.இருகலப் பாசிகளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன.
இருகலப்பாசிகளின் இருப்பு அதனை சுற்றியுள்ள சுற்றுப்புறச்சூழலை பொருத்ததாகும். ஒவ்வொரு சிற்றினமும் தங்களுக்குரிய சூழ்நிலைக்கூறுகளுக்குள் (Ecological Niche) மட்டும் வாழும். இருகலப்பாசிகளின் இத்தகைய பண்புகள் இவற்றை மிகவும் சிறந்த உயிர் சுட்டிக்காட்டியாக (Bioindicator) உபயோகிக்க உதவுகின்றது. இருகல பாசிகளின் கல அமைப்பு சிலிகாவாலனது, அவை நைட்ரிக் அமிலத்தையும் எதிர்த்து நிற்க கூடியது. ஒவ்வொரு நீர் நிலையில் உள்ள இருகல பாசியின் வடிவமும் தனி தன்மை உடையது. அது மட்டுமின்றி ஒரே நீர் நிலையில் வெவ்வேறு கால நிலைகளில் வெவ்வேறு வடிவ இருகலப்பாசிகள் காணப்படும்.
இந்தியாவில் இருகலப்பாசிகள் ஆராய்ச்சி[தொகு]
இந்தியாவில் பாசிகளை பற்றிய ஆராய்ச்சியை தொடங்கியவர் சென்னையை சேர்ந்த எம்.ஓ.பி. ஐயங்கார். இவர் இந்திய பாசியியல் துறையின் தந்தை எனப் போற்றப்படுபவர். இவர் அனைத்து வகையான பாசிகளைப் பற்றிய ஆராய்ச்சியை தொடங்கினாலும். "இருகலப் பாசிகள்" பற்றிய ஆராய்ச்சியை இவரது மாணவர்கள் தொடங்கி வைத்தனர். இவரை தொடர்ந்து டி.வி. தேசிகாச்சாரி, குசராத்தை சேர்ந்த எச்.பி. காந்தி, மகாராட்டிராவை சேர்ந்த பி.டி. சரோட் மற்றும் என். டி. காமத் என்பவர்கள் இந்தியாவில் காணப்படும் இருகலப் பாசிகளை பற்றிய ஆராய்ச்சியை தொடர்ந்தார்கள்.
தடயவியலில் இருகலப்பாசிகள்[தொகு]
ஒருவர் நீரில் மூழ்கி இறக்கும் போது இருகலப் பாசிகள் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகள் வெடிப்பதன் மூலம் குருதி ஓட்டத்திற் கலந்து உடலின் பல்வேறு திசுக்களை அடைகின்றன. குறிப்பாக, என்பு மச்சையில் இவற்றின் இருப்பை தடயவியல் வல்லுநர்கள் பரிசோதிப்பர். ஒருவரை வேறு ஏதேனும் வழியிற் கொன்று விட்டு நீரிற் தூக்கிப் போட்டிருப்பின், அவரது எலும்பு மச்சையில் இருகலப்பாசி இருக்காது. ஏனென்றால் இருகலப்பாசி என்பு மச்சையை அடைய உயிருள்ள குருதி ஓட்டம் தேவை.