கடற்சிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடற்சிங்கம்
புதைப்படிவ காலம்:
Late Oligocene-Holocene
கலிஃபோர்னிய கடற்சிங்கம்
Zalophus californianus
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
துணைவரிசை: துடுப்புக்காலிகள்
குடும்பம்: Otariidae
துணைக்குடும்பம்: Otariinae
இனங்கள்

Eumetopias
Neophoca
Otaria
Phocarctos
Zalophus

கடற்சிங்கம் (Sea lion) என்பது கடற்பாலூட்டி வகையைச் சேர்ந்த குடும்பம் ஆகும். இவை இரண்டு சிறிய வெளிக் காதுகள், துடுப்பு போன்ற நீண்ட நான்கு கால்கள், தடித்த மேல் தோல், அடர்த்தியான சிறிய முடிகள் மற்றும் கொழுப்பு நிறைந்த அடர்ந்த உடலும் கொண்ட ஊனுண்ணிகளாகும். துடுப்பு போன்ற கால்களால் கடற்சிங்கங்கள் கடல் நீரில் நன்கு நீந்த இயலும். கடல் மீன்கள், மெல்லுடலிகள் மற்றும் நண்டுகள் ஆகியன கடற்சிங்கத்தின் முக்கிய இரைகளாகும்.

கடற்சிங்கங்கள் வட துருவம் மற்றும் தென் துருவக் கடற்கரைகளிலும், வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலிலும் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா, தெற்கு நியூசிலாந்து கடற்கரைகளிலும் காணப்படுகிறது. [1] இவற்றின் வாழ்நாள் 20-30 ஆண்டுகளாகும்.

ஆண் கடற்சிங்கத்தின் அதிகபட்ச எடை 300 கிலோ கிராமும் நீளம் 8 அடியும் ஆகும். பெண் கடற்சிங்கத்தின் அதிக பட்ச எடை 100 கிலோ கிராமும், நீளம் 6 அடியும் ஆகும். ஸ்டெல்லர் வகை கடல் சிங்கத்தின் எடை 1000 கி கி., மற்றும் நீளம் 10 அடியாக உள்ளது. கடற்சிங்கங்கள் ஒரே நேரத்தில் தன் உடல் எடையில் 5-8% (15–35 lb (6.8–15.9 kg)) வரையிலான உணவை உண்ணக்கூடியது.

ஸ்டெல்லார் கடற்சிங்கங்கள், அலாஸ்கா

வெளிப்புற காதுகள் கொண்ட கடற்சிங்கங்களின் குடும்பத்தில் கடல்நாய்கள் மற்றும் நீண்ட தந்தம் போன்ற இரண்டு பற்களைக் கொண்ட பனிக்கடல் யானை ஆகிய இனங்கள் அடங்கியுள்ளது.[2] கடற்சிங்கங்கள் சனவரி முதல் மார்ச் முடிய உள்ள காலத்தில் கடற்கரைகளில் குட்டியிடுகிறது. உலகில் தற்போது 1,65,000 கடற்சிங்கங்கள் இருப்பதாக கணக்கிட்டுள்ளனர்.

மனிதனுடான உறவுகள்[தொகு]

வித்தை காண்பிக்கும் கடற்சிங்கங்கள், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா

20ஆம் நூற்றாண்டின் நடுவில் வேட்டைக்காரர்களால் பெருமளவு கடற்சிங்கங்கள் கொல்லப்பட்டது.[3] தற்போது அனைத்து நாடுகளும் கடற்சிங்கங்களை வேட்டையாடுவதை தடை செய்துள்ள போதும், சுற்றுச் சூழல் காரணமாக கடற்சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. உலகில் பல நாடுகளில் கடற்சிங்கங்களுக்கு விளையாட்டு பயிற்சிகள் வழங்கி, காட்சிக் கூடங்களில் மக்கள் முன்னிலையில் வித்தை காட்டுகிறார்கள். கடலில் நீந்தும் மனிதர்களை கடற்சிங்கங்கள் தாக்குவதில்லை.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளின் சுற்றுலாத்துறை கடற்சிங்கங்களால் வளர்ந்து வருகிறது.

படக்காட்சியகம்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "California Sea Lion – SeaWorld Info Book". SeaWorld. Archived from the original on 14 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 26 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. Wynen, L.P.; Goldsworthy, SD; Insley, SJ; Adams, M; Bickham, JW; Francis, J; Gallo, JP; Hoelzel, AR et al. (2001). "Phylogenetic relationships within the eared seals (Otariidae: Carnivora): implications for the historical biogeography of the family". Mol. Phylog. Evol. 21 (2): 270–284. doi:10.1006/mpev.2001.1012. பப்மெட்:11697921. 
  3. Zenteno, Lisette; Borella, Florencia; Otero, Julieta Gómez; Piana, Ernesto; Belardi, Juan Bautista; Borrero, Luis Alberto; Saporiti, Fabiana; Cardona, Luis et al. (1 June 2015). "Shifting niches of marine predators due to human exploitation: the diet of the South American sea lion (Otaria flavescens) since the late Holocene as a case study". Paleobiology 41 (3): 387–401. doi:10.1017/pab.2015.9. பன்னாட்டுத் தர தொடர் எண்:1938-5331. 

மேல் வாசிப்பிற்கு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடற்சிங்கம்&oldid=3547512" இலிருந்து மீள்விக்கப்பட்டது