பெருங்கணவாய்
பெருங்கணவாய் | |
---|---|
Giant squid, Architeuthis sp., modified from an illustration by A.E. Verrill, 1880 | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | Architeuthidae Pfeffer, 1900
|
பேரினம்: | Architeuthis Steenstrup in Harting, 1860
|
இனம் | |
probable synonyms:
| |
உலகில் இராட்சத கணவாய்கள் பரவலை குறிப்பிடும் வரைபடம் | |
வேறு பெயர்கள் | |
|
பெருங்கணவாய் அல்லது இராட்சதக் கணவாய் (giant squid (பேரினம் ஆர்க்கிட்டூத்திஸ்) என்பது ஆழ்கடலில் வாழும் கணவாய் ஆகும். இது Architeuthidae குடும்பமாக வகைபடுத்தப்பட்டுள்ளது. இந்த இராட்சதக் கணவாயால் ஆழ்கடலில் பேருருவில் வளர இயலும். அண்மைய கணக்கீட்டின்படி, இதன் பின்பக்க துடுப்பிலிருந்து இரண்டு நீண்ட கரங்கள்வரை அதிகபட்ச அளவாக இராட்சத பெண் கணவாய்கள் 13 m (43 அடி) நீளமும், ஆண் கணவாய் 10 m (33 அடி) நீளம் உடையதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது (மிகப்பெரிய உயிரினங்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 14 m (46 அடி) நீளம் கொண்டபெருங்கணவாய்க்கு (14 m (46 அடி) நீளம்) அடுத்த நிலையில்[2] உள்ளது).
இராட்சத கணவாய் இனங்களின் எண்ணிக்கை குறித்த விவாதங்கள் நடத்தப்பட்டன. அண்மைய மரபணு ஆராய்ச்சிகள் இதில் ஒரே ஒரு இனம் மட்டுமே உள்ளது என்று கூறுகிறது.[3]
2004 ஆண்டு சப்பானிய ஆராய்ச்சியாளர்கள் இந்த உயிரினத்தை உயிருடன் முதன்முதலில் அது வாழும் இடத்தில் படம் பிடித்தனர்,[4] மற்றும் 2012 சூலை இல் வயதுவந்த இராட்சத கணவாய் ஒன்று, நேரடியாக அதன் இயற்கை வாழிடத்தில் சிசிங்-ஜீமா என்பவரால் படமாக்கப்பட்டது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வார்ப்புரு:IUCN2014.1
- ↑ Anderton, H.J. 2007.
- ↑ Michael Marshall (March 20, 2013).
- ↑ Kubodera, T.; Mori, K. (2005). "First-ever observations of a live giant squid in the wild". Proceedings of the Royal Society B: Biological Sciences 272 (1581): 2583–6. doi:10.1098/rspb.2005.3158. பப்மெட்:16321779.
- ↑ "The Giant Squid, Captured on Camera in its Natural Habitat for the First Time Ever! Revealed on NHK and Discovery Channel". NHK. 9 January 2013 இம் மூலத்தில் இருந்து 4 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004233759/http://www.nhk.or.jp/pr/english/press/pdf/20130109.pdf.