உள்ளடக்கத்துக்குச் செல்

மிகப்பெரிய உயிரினங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஷ் லேக் நாட்டு வனத்தில் உள்ள எசுப்பன் தோப்பு

மிகப்பெரிய உயிரினங்கள் கனவளவு, திணிவு, உயரம், நீளம் போன்ற பல்வேறு அளவீடுகள் கொண்டு வரையறுக்கப் படுகின்றன. சில உயிரினங்கள் இணைந்து பேருயிரினமாக காணப்படும் நிலையில் அவை பெரிய உயிரினமாக வகைப்படுத்தப்பட மாட்டது. எடுத்துக்காட்டாக உலகின் மிகப்பெரிய பவளத்திட்டான பெரும் தடுப்புப் பவளத்திட்டு பல உயிரினங்களின் கூட்டாகும், எனவே அது மிகப்பெரிய உயிரினமாக வகைப்படுத்தப்படவில்லை.

எசுப்பன் மரங்கள் ஒரு தாய்த்தாரவத்திலிருந்து வரும் வேரிலிருந்தே தோன்றுகின்றன. ஒருகுழு எசுப்பன் மரங்கள் தரைக்கடியில் ஒரே இணைக்கப்பட்ட வேர்த்தொகுதியையே கொண்டிருக்கும். இவ்வாறு தரைக்கடியில் இணைக்கப்பட்ட மிகப்பெரிய எசுப்பன் தோப்பு ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் காணப்படும் பண்டோ மரமாகும்.[1] சில அறிஞ்சர்களின் கருத்துப்படி இது திணிவு அல்லது கனவளவின் படி உலகின் மிகபெரிய உயிரினமாகும்.[2] இது மொத்தமாக 0.43 சதுர கிலோமீட்டர் (km²) (106 ஏக்கர்) பரப்பளவை அடைக்கிறது. இதன் மதிப்பிடப்பட்ட நிறை 6000 தொன்னாகும்.[3]

ஐக்கிய அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தில் அமிந்துள்ள மெல்லர் தேசியக் காட்டில் காணப்படும் இராட்சத பூஞ்சான் இனமான தேன் காளான் (Armillaria ostoyae) 8.9 சதுர கிலோமீட்டர் (km²) (2,200 ஏக்கர்)[4] பரப்பளவைக் கொண்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவே பரப்பளவின் படி உலகின் மிகப்பெரிய உயிரினமாகும். இதை ஒரு தனி உயிரினமா அல்லது பேருயிரினாம என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. சில சோதனைகளின் அடிப்படையில் இது ஒரே மரபணுவைக் கொண்டுள்ளது எனினும் [5], தேன்காளானின் பூஞ்சை (mycelium) இணைக்கப்பட்ட ஒன்றாக இல்லாவிடில் இது தனிப்பட்ட பல பூஞ்சைகளின் குத்துச்செட்டு குடியிருப்பாகவே (clonal colony) கருதலாம்.தேன்காளானை குத்துச்செட்டு குடியிருப்பாக கருதுமிடத்து, நடுநிலக் கடலில் பெலரிக் தீவுகளுக்கு அண்மையில் கண்டறியப்பட்டுள்ள 8 கிலோமீட்டர் (km) (4.3 மைல்) நீளமான கடல் நிலைதிணையொன்றின் (Posidonia oceanica) குத்துச்செட்டு குடியிருப்பொன்று தேன்காளானை குத்துச்செட்டு குடியிருப்பை விட பெரியதாகும்.[6]

மிகப்பெரிய தாவரம்[தொகு]

ஜெனரல் சேர்மன் மரத்தின் அடிப்பாகம், 1962

பல்-தண்டு மரங்களை தவிர்த்துப் பார்க்குமிடத்து ஜெனரல் சேர்மன் (General Sherman) என அழைக்கப்படும் 1,487 m3 (52,500 cu ft) கனவளவைக் கொண்ட இராட்சத செகொயா மரம் கனவளவின் படி பெரிய உயிரினமாக கருதப்படலாம்.[7] 83.8 மீட்டர் (m) (275 அடி) உயரமான இந்த மரத்தின் தண்டு மாத்திரம் 1,800 தொன் எடையைக் கொண்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆகக் குறைந்தது 2,500 கன மீட்டர் (m3) (88,000 கன அடி) கனவளவையும் 3,300 தொன் எடையையுடைய தண்டைக் கொண்ட லின்சீ கிரீக் என்றழைக்கப்பட்ட இராட்சத செகொயா மரமே இது வரை அளவிடப்பட்ட மிப்பெரிய தனித் தண்டு மரமாகும். இது 1905 ஆம் ஆண்டு புயலின்போது தரையில் வீழ்ந்தது.[8]

மிகப்பெரிய விலங்கு[தொகு]

இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பாரமான விலங்கு நீலத்திமிங்கிலமாகும்.

கனவளவு, எடையின் படியான மிகப்பெரிய விலங்கு தற்போது அருகிய இனமான நீலத்திமிங்கிலமாகும். நீலத்திமிங்கிலம் ஒன்றின் அளவிடப்பட்ட கூடிய நீளம் 33.58 மீட்டர் (110.2 அடி)யும் கூடிய நிறை 210 அமெரிக்க தொன்களுமாகும் (கர்ப்பமான திமிங்கிலம்). ஆப்பிரிக்க யானைகளின் களிறுகளே தரையில் வாழும் விலங்குகளின் மிகப்பெரியவாகும்.பின்வரும் அட்டவணை முதல் பத்து மிகப்பாரமான விலங்குகளைப் பற்றியது:

நிலை விலங்கு சராசரி திணிவு [தொன்களில்] மிகக்கூடிய திணிவு [தொன்களில்] சராசரி நீளம் [m (ft)]
1 நீலத்திமிங்கிலம் 110 190 25.5 (84)
2 வட பசுபிக் திமிங்கிலம் 60 120 15.5 (51)
3 தென்வலத் திமிங்கிலம் 58 110 15.25 (50)
4 துடுப்புத் திமிங்கிலம் 57 120 19.5 (64.3)
5 வட அத்திலாந்திக் திமிங்கிலம் 55 100 15 (49)
6 விற்தலை திமிங்கிலம் 54.5 120 15 (49)
7 விந்துத் திமிங்கிலம் 31.25 57 13.25 (43.5)
8 ஹம்பாக் திமிங்கிலம் 29 48 13.5 (44)
9 சேய் திமிங்கிலம் 22.5 45 14.8 (49)
10 சாம்பல் திமிங்கிலம் 19.5 45 13.5 (44)

மிகப்பெரிய நிலவாழ் விலங்கு[தொகு]

ஒரு குறித்த களிறு ஒன்று 12,272 கிலோகிராம் எடையை கொண்டிருந்தது. பல தொன்மாக்கள் உட்பட, தற்போது இன அழிவுக்குட்பட்டுள்ள பல விலங்குகள் களிறுகளை விட பெரியனவாக காணப்பட்டன.

மிகப்பெரிய பக்றீரியா[தொகு]

உலகின் மிகப்பெரிய பக்றீரியாவின் நுணுக்குக்காட்டிப் படம்

இதுவரை அறியப்பட்ட மிகப்பெரிய பக்றீரியா Thiomargarita namibiensis ஆகும். இது 0.75 mm வரை வளரக்கூடியது. இது வெற்றுக்கண்களுக்குத் தெரியக்கூடியது.

ஆதாரங்கள்[தொகு]

  1. Consensus Document on the Biology of Populus, OECD (.doc file)
  2. Quaking Aspen by the Bryce Canyon National Park Service
  3. largest living thing
  4. The Humongous Fungus--Ten Years Later at the University of Wisconsin, Department of Botany. Accessed 20 August 2005.
  5. Beale, Bob. 10 April 2003. Humungous fungus: world's largest organism? at Environment & Nature News, ABC Online. Accessed 20 August 2005.
  6. Ibiza's Monster Marine Plant பரணிடப்பட்டது 2007-12-26 at the வந்தவழி இயந்திரம். Ibiza Spotlight, 28 May 2006.
  7. The General Sherman Tree, Sequoia National Park பரணிடப்பட்டது 2006-10-05 at the வந்தவழி இயந்திரம் at the National Park Service. Accessed 20 August 2005.
  8. "superlative trees". Archived from the original on 2007-03-29. பார்க்கப்பட்ட நாள் 2009-04-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகப்பெரிய_உயிரினங்கள்&oldid=3567558" இலிருந்து மீள்விக்கப்பட்டது