சிலந்தி சங்கு
சிலந்தி சங்கு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | மெல்லுடலி |
வகுப்பு: | ஓரோட்டு உடலி (Gastropoda) |
பெருங்குடும்பம்: | Stromboidea |
தரப்படுத்தப்படாத: | clade Caenogastropoda clade Hypsogastropoda clade Littorinimorpha |
குடும்பம்: | ஸ்ட்ரோம்பிடியே |
பேரினம்: | லாம்பிஸ் |
இனம்: | L. lambis |
இருசொற் பெயரீடு | |
Lambis lambis (L., 1758) | |
வேறு பெயர்கள் | |
Pterocera lambis (L., 1758)[1] |
சிலந்தி சங்கு (Spider conch) ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரையுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் அதிகமாக வாழும் வித்தியாசமான உடல் அமைப்பைக் கொண்ட சங்கு வகையாகும். இது பார்ப்பதற்கு சிலந்தியைப் போல் இருப்பதாலும் ஐந்து வரல்களைக்கொண்டு இருப்பதாலும் இதனை சிலந்தி சங்கு என்றும் ஐவிரல் சங்கு என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர். ஸ்ட்ரோம்பிடே எனப்படும் குடும்பத்தைச் சேர்ந்த இந்தச் சிலந்திச் சங்குகளின் விலங்கியல் பெயர் லேம்பிஸ்.(Lambis lambis)
உடல் அமைப்பு[தொகு]
ஆண் சிலந்தி சங்கின் சிறு விரல்கள் கீழ் நோக்கி வளைந்தும், பெண் சிலந்தி சங்கின் சிறு விரல்கள் மேல்நோக்கி வளைந்தும் காணப்படும். ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறத்தில் இவை கானப்படுகின்றன. சிலந்திச் சங்குகள் அவை நகரும் இடத்தின் நிறத்திற்கேற்ப அதன் மேற்புற ஓட்டின் நிறத்தையும் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பதால் இவை எளிதில் கண்களுக்குத் தெரிவதில்லை.இந்த வசதியையே தன்னைப் பாதுகாக்கவும் பயன்படுத்திக் கொள்கிறது.இச்சங்கிலுள்ள திடமான கால் பாதத்தின் உதவியால் கனமான அந்த ஓட்டைத் தூக்கிக் கொண்டு இடம் விட்டு இடம் பெயர்ந்து இரை தேடிக் கொள்கின்றன.
வாழிடம்[தொகு]
மாங்குரோஸ் எனப்படும் சதுப்பு நில காடுகளிலும்,பவளப்பாறைகள் அதிகமாகவுள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டலக் கடல்களில் அதிகமாக வாழ்ந்தாலும் தீவுப்பகுதிகளின் கரையோரங்களில் சுமார் 5 மீட்டர் ஆழத்திலும் கூட இவை வசிக்கின்றன. கடலில் உள்ள பாசி வகைகளில் ஒரு வகையான சிவப்பு நிற பாசிகளைத் தின்று உயிர் வாழும் இவ்வினங்கள் ஆழம் குறைவான இடங்களில் வசிக்கின்றன.குறைந்தபட்சம் 18 செ.மீ.முதல் 29 செ.மீ.நீளம் வரை இது வளரும். அதிக கனமுடையதாகவும் அளவில் பெரியதாகவும் இருக்கும் இந்தச் சங்கின் பின்புறம் இயற்கையாகவே மிகவும் பளபளப்பாக இருக்கும்.இச்சங்கின் மேற்புற ஓடு வெள்ளை நிறத்திலும் பழுப்பு நிற புள்ளிகளை உடையதாகவும் இருக்கும். இச்சங்கிலுள்ள திடமான கால் பாதத்தின் உதவியால் கனமான அந்த ஓட்டைத் தூக்கிக் கொண்டு இடம் விட்டு இடம் பெயர்ந்து இரை தேடிக் கொள்கின்றன.
பயன்பாடு[தொகு]
இதனுள்ளே இருக்கும் பூச்சி போன்ற உயிரினம் சுவை மிகுந்த இறைச்சியாகவும் மீனவ மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இதன் இறைச்சியை எடுத்த பிறகு சுத்தப்படுத்தப்பட்டு மேலும் பளபளப்பாக்கி அலங்காரப் பொருளாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வினம் பெரும்பாலும் கடற்கரையோரங்களில் அதிக எண்ணிக்கையில் வாழ்வதால் வேகமாக அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "World Register of Marine Species". Lambis lambis (Linnaeus, 1758). 2009. 26 January 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Poutiers
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை