வெலொனிய வென்டிரிகோசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெலொனிய வென்டிரிகோசா
Valonia ventricosa
Ventricaria ventricosa.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: Viridiplantae
தொகுதி: Chlorophyta
வகுப்பு: Ulvophyceae
வரிசை: Cladophorales
குடும்பம்: Valoniaceae
பேரினம்: Valonia
இனம்: V. ventricosa
இருசொற் பெயரீடு
Valonia ventricosa
J.Agardh 1887[1]
வேறு பெயர்கள்

Ventricaria ventricosa

வெலொனியா வென்டிரிகோசா (Valonia ventricosa) "குமிழி பாசி" எனவும் "மாலுமிகளின் கருவிழிகள்" என்றும் அழைக்கப்படுகிறது,[2] வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் உலகெங்கிலும் உள்ள கடல்களில் காணப்படும் ஒரு பாசி வகைத் தாவரமாகும். இது மிகப்பெரிய ஒற்றை-உயிரணு உயிரினங்களில் ஒன்றாகும்.[2][3]

பண்புகள்[தொகு]

வெலொனிய வென்ட்ரிகோசா பொதுவாக தனித்தனியாக வளர்கிறது, ஆனால் அரிதான நிகழ்வுகளில் அவை குழுக்களில் வளரலாம்.

சுற்றுச்சூழல்[தொகு]

இவை கரீபியன், வடக்கில் புளோரிடா, தெற்கே பிரேசில் மற்றும் இந்தோ-பசிபிக் போன்ற வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பிரதேசங்களின் அலைமண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன.[4] மொத்தத்தில் உலகெங்கிலும் கிட்டத்தட்ட ஒவ்வொரு கடலிலும் வாழ்கின்றன.[5] பெரும்பாலும் பவளப்பாறைகளில் வாழ்கின்றன.[6] மிக ஆழமான பகுதிகளில் வளரக்கூடியவையாகும் (சுமார் 80 மீட்டர் 260 அடி).

உடலியக்கவியல் மற்றும் இனப்பெருக்கம்[தொகு]

ஒற்றை-செல் உயிரினம் கோளவடிவிலிருந்து முட்டைவடிவம் வரையிலான வடிவங்களைக் கொண்டிருக்கிறது. நீரில் நீலம் அல்லது கருப்பு நிறமாகத் தோன்றினாலும் லேசான பச்சை நிறத்தில் இருந்து இருண்ட பச்சை நிறம் வரை வேறுபடுகிறது.[4] நிறமானது இதன் குளோரோபிளாஸ்டின் அளவால் தீர்மானிக்கப்படுகிறது.[6] செல் மேற்பரப்பு கண்ணாடியைப் போன்று ஒளிர்கிறது. இதன் உடலம் அல்லது தலசு (thallus), மெல்லிய சுவருடன், கடினமான, பல உட்கருகொண்ட, 1 முதல் 4 சென்டிமீட்டர் (0.4 முதல் 1.6 அங்குலம் வரை) வரையான விட்டமுடைய செல்லைக் கொண்டுள்ளது. ஆனால் அரிதான சந்தர்ப்பங்களில் 5.1 சென்டிமீட்டர் (2.0 அங்குலம்) வரையான விட்டமும் கொண்டிருக்கலாம். "குமிழி" ஆல்கா நார்த்திசுக்களுக்கு ரைசாய்ட்ஸ் மூலம் இணைக்கப்படுகிறது.[4]

இனப்பெருக்கம்[தொகு]

உயிரணுப் பிரிவினால் இனப்பெருக்கம் நிகழ்கிறது, அங்கு பலகருக்களை உடைய தாய்செல்கள் சேய் உயிரணுக்களை உருவாக்குகிறது, மேலும் தனித்தனியான ரைசாயிடுகள் புதிய குமிழ்களை உருவாக்குகின்றன, இது தாயின் செல்லிருந்து தனித்தனியாக பிரிகின்றன.

ஆய்வுகள்[தொகு]

வெலொனிய வென்டிரிகோசாவின் செல்கள் மிகவும் அசாதாரணமாக பெரிதாக இருப்பதால் அவை உயிரியல் சவ்வுகள் முழுவதும் நீர் மற்றும் நீரில் கரையக்கூடிய மூலக்கூறுகளின் பரிமாற்றத்தைப் படிப்பதற்கான வசதியான பொருளாக இருக்கின்றது.

ஆஸ்மாசிஸ் மற்றும் சவ்வுடு பரவல் ஆகிய வகைகளில் உள்ள ஊடுருவலின் பண்புகள் ஒரே மாதிரியாக இருப்பதாகவும், யூரியா மற்றும் ஃபார்மால்டிஹைட்டு மூலக்கூறுகளுக்கு எந்த விதமான தேவையற்ற நீர் நிரப்பப்பட்ட துளைகளும் சவ்வு வழியாக செல்ல தேவைப்படவில்லை.[4][7][8] செல்லுலோசின் கட்டமைப்பைப் பற்றி படிப்பதற்கும், உயிரிய கட்டமைப்புகளில் அதன் நோக்குநிலையை ஆராயவும் லொனிய வென்டிரிகோசா விரிவான X- கதிர் பகுப்பாய்வு முறைகளுக்கு உட்பட்டுள்ளது.[9] சுற்றியுள்ள கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில் அதன் அசாதாரணமான உயர் மின் அழுத்தம் காரணமாக, அதன் மின்சார பண்புகளுக்காக இது ஆய்வு செய்யப்பட்டுள்ளது.[10]

சான்றுகள்[தொகு]

  1. "Valonia ventricosa J. Agardh". ITIS. பார்த்த நாள் 27-08-2010.
  2. 2.0 2.1 Bauer, Becky (October 2008). "Gazing Balls in the Sea". All at Sea. Retrieved 26 September 2013.
  3. John Wesley Tunnell; Ernesto A. Chávez; Kim Withers (2007). Coral reefs of the southern Gulf of Mexico. Texas A&M University Press. p. 91. ISBN 1-58544-617-3.
  4. 4.0 4.1 4.2 4.3 Bauer, Becky (October 2008). "Gazing Balls in the Sea". All at Sea. Retrieved 26 September 201
  5. "Valonia ventricosa J.Agardh", Algaebase, http://www.algaebase.org/search/species/detail/?species_id=a97ca4948a80ef374, பார்த்த நாள்: 4 September 2015 
  6. 6.0 6.1 Lee, Robert Edward (2008). "Siphonoclades". Phycology. Cambridge University Press. பக். 189. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-68277-0. https://books.google.com/books?id=gfoIAFHgusgC&pg=PA189. பார்த்த நாள்: 27 August 2010. 
  7. Thellier, M. (1977). Échanges ioniques transmembranaires chez les végétaux. Publication Univ Rouen Havre. p. 341. ISBN 978-2-222-02021-9. Jump up ^
  8. Gutknecht, John (1967). "Membranes of Valonia ventricosa: Apparent Absence of Water-Filled Pores". Science Magazine. pp. 787–788. Retrieved 10 September 2014.
  9. Astbury, W.T; Marwick, T. C.; Bernal, J. D. (1932). "X-Ray Analysis of the Structure of the Wall of Valonia ventricosa.--I". Proceedings of the Royal Society of London. Series B. 109 (764): 443. doi:10.1098/rspb.1932.0005.
  10. Thellier, M. (1977). Échanges ioniques transmembranaires chez les végétaux. Publication Univ Rouen Havre. p. 341. ISBN 978-2-222-02021-9.