கருப்பு மோலி மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மோலி
Black molly1.JPG
பெண் மோலி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: கதிர்முள் துடுப்பி
வரிசை: பற்கெண்டைவடிவி
குடும்பம்: மோலிவகையி
பேரினம்: மோலி
இருசொற் பெயரீடு
Poecilia sphenops
ஆரஞ்சு நிற மோலி மீன்

கருப்பு மோலி என்பது மோலி என்ற பேரினத்தைச் சேர்ந்த மீனினம் ஆகும். இது கருப்பு நிறத்தில் இருப்பதால் கருப்பு மோலி அல்லது கருமோலி என்று பெயர் பெற்றது. எனினும் தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் காரணமாக இது பல்வேறு நிறங்களில் காணப்படுகின்றது. இது புழுபூச்சிகள், கணுக்காலிகள், தாவர உணவுகள், உலர் உணவுகள் ஆகியவற்றை உண்ணுகின்ற ஓர் அனைத்துண்ணி வகை மீனாகும்.

இவை 10 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. இம்மீன்கள் இனப்பெருக்கம் குட்டி ஈனும் முறையில் நடை பெறுகிறது. ஒவ்வொரு இனப்பெருக்கத்தின்போதும் 20 முதல் 60 மீன் குஞ்சுகளைப் பெற்றெடுக்கின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ரெங்கராஜன், இரா, (2008), மீனின உயிரியல் மற்றும் நீரின வளர்ப்பு, சாரதா பதிப்பகம், சென்னை, ப. 202.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_மோலி_மீன்&oldid=2666192" இருந்து மீள்விக்கப்பட்டது