கடற்பாலூட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கடற்பாலூட்டிகள்[1]
புதைப்படிவ காலம்:55–0 Ma
Early Eocene - Present
Humpback stellwagen edit.jpg
Humpback திமிங்கிலம்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
உள்வகுப்பு: யூத்தேரியா
பெருவரிசை: லாரேசியாத்தேரியா
(unranked) Cetartiodactyla
(unranked) Whippomorpha
வரிசை: சீட்டேசியே
பிரிசன், 1762
துணைவரிசைகள்

மிஸ்டிசீட்டி
ஓடொண்டோசீட்டி
ஆர்க்கியோசீட்டி (அழிந்துபோயின)
(see text for families)

உயிரியற் பல்வகைமை
[[கடற்பாலூட்டிகள் பட்டியல்|சுமார் 88 இனங்கள்; கடற்பாலூட்டிகள் பட்டியல் அல்லது கீழே பார்க்கவும்.]]

கடற்பாலூட்டி (Cetacea) என்பது, திமிங்கிலங்கள், கடற்பசுக்கள், கடற்பன்றிகள் போன்ற பாலூட்டி வகையைச் சேர்ந்த கடல்வாழ் உயிரின வகையைச் சேர்ந்த ஒரு விலங்கைக் குறிக்கும். தொடக்கத்தில் திமிங்கிலத்தைக் குறித்ததும், பின்னர் பெரிய கடல்வாழ் விலங்குகளைப் பொதுவாகக் குறிப்பதுமான சீட்டேசியே என்னும் இலத்தீன் சொல் இவற்றில் அறிவியல் பெயர்களில் பயன்படுகின்றது.

கடற்பாலூட்டிகள், நீர் வாழ்வுக்கு இசைவாக்கம் பெற்ற பாலூட்டிகள் ஆகும். இவை இருமுனையும் கூம்பிய உடலமைப்புக் கொண்டவை. முன் கால்கள் நீந்துவதற்கு ஏற்ற வகையில் துடுப்புக்கள் போல் மாற்றம் பெற்றுள்ளன. பின்னங் கால்கள் குறுகி உறுப்பெச்சங்களாகக் காணப்படும். இக் கால்கள் முதுகெலும்புடன் இணைக்கப்படாமல் உடலுக்குள்ளேயே காணப்படுகின்றன. இவற்றில் உடலில் பெரும்பாலும் உரோமங்கள் இருப்பதில்லை. ஆனால், இவற்றில் உடல் தடிப்பான தோலயற்கொழுப்புப் படையினால் காக்கப்படுகின்றது. இவ்விலங்குகள் பொதுவாகப் புத்திக்கூர்மை கொண்டவை எனக் கருதப்படுகின்றன.

சீட்டேசியே (Cetacea) வரிசையில் 90 இனங்கள் உள்ளன. இவற்றுள் நான்கு நன்னீர்க் கடற்பசு இனங்கள் தவிர ஏனையவை கடல் வாழ்வன. இவை, சிறிய கடற்பசுக்கள் முதல் எக்காலத்தும் உலகில் வாழ்ந்த விலங்குகளுள் மிகப் பெரியனவாகக் கருதப்படும் நீலத் திமிங்கிலங்கள் வரை வேறுபட்ட அளவுகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. வார்ப்புரு:MSW3 Cetacea
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடற்பாலூட்டி&oldid=2191000" இருந்து மீள்விக்கப்பட்டது