கடற்பன்றி
Porpoises புதைப்படிவ காலம்: Miocene-இக்காலம் | |
---|---|
Phocoena phocoena, டென்மார்க் | |
கடற்பன்றி குதிக்கும் அரிய காட்சி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
பெருங்குடும்பம்: | |
குடும்பம்: | மழுங்குமூக்கிகள் |
பேரினம்: | . (எண்ணிக்கை)
|
இனம்: | . (எண்ணிக்கை)
|
பேரினங்கள் | |
கட்டுரையில் கொடுக்கப் பட்டுள்ளன. |
கடற்பன்றி(கடல்+பன்றி) (ⓘ) ( Porpoises, mereswine) என்ற கடல்விலங்கு, திமிங்கிலத்திற்கும், டால்ஃபினுக்கும் உயிரியில் வகைப்பாட்டுத் தொடர்புடைய விலங்கு ஆகும். கடல் வழி பயணம் செய்பவர்களாலும், மீனவர்களாலும் சிறிய டால்ஃபின் என்றும், இவ்விலங்கு அழைக்கப்படுகிறது.பன்றித் திமிங்கிலம் என்ற பெயரும் இதற்குண்டு.
வேறுபாடுகள்
[தொகு]கடற்பன்றியும், ஓங்கில் எனப்படும் ஒவாய் கடற்பன்றியும் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரே பேரினம் போலத் தெரியும். ஆய்வின் அடிப்படையிலும், நன்கு கவனிக்கும் போதும், அவை இரண்டும் வேறுபட்ட பேரினங்கள் என்பது தெளிவாகும்.
- கடற்பன்றியின் வாயின் அளவு, ஒவாய் கடற்பன்றியின் வாயினை விட அளவில் சிறியது ஆகும்.
- ஒப்பிட்டளவில் கடற்பன்றியின் வாய் தட்டையாக இருக்கும். ஒவாய் கடற்பன்றியின் வாய் நீண்டு குவிந்து அமைந்திருக்கும்.
- மெலோன் என்ற கண்களுக்கு முன்னுள்ள தலைப்பகுதி கடற்பகுதியில் இல்லை. தெளிவாக அமைந்து புலப்படுகிறது.
- கடற்பன்றியின் பற்களின் அமைப்பு தட்டையாக இருக்கும். ஒவாய் கடற்பன்றியின் பற்கள் கூர்மையாக கூம்பு வடிவத்தில் இருக்கும்.
- கடற்பன்றியின் உடலானது, ஒவாய் கடற்பன்றியின் உடல் உருவத்தினை விட அளவில் பெரியதாக/குண்டாக இருக்கும்.
- கடற்பன்றியின் முதுகுப்புற துடுப்பு, நன்றாக முக்கோண வடிவத்தில் இருக்கும். ஒவாய் பன்றியின் முதுகுத்துடுப்பு வளைந்தேக் காணப்படுகிறது.
- கடற்பன்றியின் இனப்பெருக்கத்திறன் அதிகம். ஒப்பிட்டளவில்(r-selected) ஓங்கில்களை விட எளிதில் கருவுறுகிறது.
- கடற்பன்றியின் சராசரி வாழ்நாள் 8-10ஆண்டுகள் ஆகும்.ஒவாய் கடற்பன்றிகள் சராசரியாக 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
- கடற்பன்றியின்(Phocoenoides dalli) அதிக அளவு எடை, ஏறத்தாழ 200 கிலோ கிராம்கள் ஆகும்.ஓங்கிலின்(Orcinus orca) அதிக அளவு எடை, ஏறத்தாழ 10டன் ஆகும்.
- கடற்பன்றியானது ஒப்பிட்டளவில், டால்ஃபினை விட சற்று குட்டையானது ஆகும்.
- பெரும்பான்மையான கடற்பன்றிகள் கடலில் மட்டுமே வாழ்கின்றன. நன்னீர் சூழலில் வாழ்வதில்லை.
- இருப்பினும், முதுகுத்துடுப்பிலா கடற்பன்றி (Neophocaena phocaenoides) மட்டும் உப்புநீரில் வாழாமல், நன்னீரில் வாழ்கின்றது.
பேரினங்கள்
[தொகு]காற்குளம்புகள் உள்ள நிலவாழ் உயிரினங்களின் வழித்தோன்றலான இவை, 5 கோடி ஆண்டுகளுக்கு முன் கடல்வாழ் உயிரினங்களாக வாழத்துவங்கின. 15கோடி ஆண்டுகளுக்கு முன் புதைப்படிவக்காலத்தில் கடற்பன்றிகள், ஒவாய் கடற்பன்றிகளிடமிருந்து வேறுபட்டன.வடபசிபிக் பெருங்கடலின் கடற்கரைகளில், இதற்குரிய புதைப்படிமங்கள் கிடைத்துள்ளன.
- துணைவரிசை: பற்பாலூட்டிகள்
- பெருங்குடும்பம்: கடல்டால்ஃபின்கள்
- குடும்பம் மழுங்குமூக்கிகள்
- பேரினம் †Haborophocoena[1]
- H. toyoshimai
- பேரினம் Neophocaena
- N. phocaeniodes - Finless porpoise
- பேரினம் †Numataphocoena[2]
- N. yamashitai
- பேரினம் Phocoena
- P. phocoena - harbour porpoise
- P. sinus - vaquita
- P. dioptrica - spectacled porpoise
- P. spinipinnis - Burmeister's Porpoise
- பேரினம் Phocoenoides
- P. dalli - Dall's porpoise
- பேரினம் †Septemriocetus[3]
- S. bosselaersii
- பேரினம் Piscolithax
- P. aenigmaticus
- P. longirostris
- P. boreios
- P. tedfordi
- பேரினம் †Haborophocoena[1]
- குடும்பம் மழுங்குமூக்கிகள்
- பெருங்குடும்பம்: கடல்டால்ஃபின்கள்
சமீபத்தில்ஆண் துறைமுகக் கடற்பன்றி யும்(Phocoena phocoena), பெண் டாலின் கடற்பன்றி யும் (Phocoenoides dalli) இணைந்த கலப்பினம் ஒன்றை, ஒரே பேரினத்தில் கண்டறியப் பட்டுள்ளது.
காட்சியகம்
[தொகு]-
Phocoena spinipinnis
-
Phocoena spinipinnis
-
Phocoenoides dalli
-
Phocoena sinus
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ichishima, H. & Kimura, M.. 2005. "Harborophocoena toyoshimai, a new early Pliocene porpoise (Cetacea, Phocoenidae) from Hokkaido, Japan". Journal of Vertebrate Paleontology 25(3):655-664
- ↑ Ichishima, H. & Kimura, M.. 2000. "A new fossil porpoise (Cetacea; Delphinoidea; Phocoenidae) from the early Pliocene Horokaoshirarika Formation, Hokkaido, Japan". Journal of Vertebrate Paleontology 20(3):561-576
- ↑ Lambert, O.. 2008. "A new porpoise (Cetacea, Odontoceti, Phocoenidae) from the Pliocene of the North Sea". Journal of Vertebrate Paleontology 28(3):863-872