கடற்பன்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Porpoises
புதைப்படிவ காலம்:15.970–0 Ma
Miocene-இக்காலம்
Phocoena phocoena, டென்மார்க்
கடற்பன்றி குதிக்கும் அரிய காட்சி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
பெருங்குடும்பம்:
குடும்பம்:
மழுங்குமூக்கிகள்

பேரினம்:
. (எண்ணிக்கை)
இனம்:
. (எண்ணிக்கை)
பேரினங்கள்

கட்டுரையில் கொடுக்கப் பட்டுள்ளன.

கடற்பன்றி(கடல்+பன்றி) (ஒலிப்பு) ( Porpoises, mereswine) என்ற கடல்விலங்கு, திமிங்கிலத்திற்கும், டால்ஃபினுக்கும் உயிரியில் வகைப்பாட்டுத் தொடர்புடைய விலங்கு ஆகும். கடல் வழி பயணம் செய்பவர்களாலும், மீனவர்களாலும் சிறிய டால்ஃபின் என்றும், இவ்விலங்கு அழைக்கப்படுகிறது.பன்றித் திமிங்கிலம் என்ற பெயரும் இதற்குண்டு.

வேறுபாடுகள்[தொகு]

கடற்பன்றியும், ஓங்கில் எனப்படும் ஒவாய் கடற்பன்றியும் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரே பேரினம் போலத் தெரியும். ஆய்வின் அடிப்படையிலும், நன்கு கவனிக்கும் போதும், அவை இரண்டும் வேறுபட்ட பேரினங்கள் என்பது தெளிவாகும்.

ஒவாய் கடற்பன்றி=
டால்ஃபின் (நீளவாய்)
கடற்பன்றி (குட்டையானவாய்)
  1. கடற்பன்றியின் வாயின் அளவு, ஒவாய் கடற்பன்றியின் வாயினை விட அளவில் சிறியது ஆகும்.
  2. ஒப்பிட்டளவில் கடற்பன்றியின் வாய் தட்டையாக இருக்கும். ஒவாய் கடற்பன்றியின் வாய் நீண்டு குவிந்து அமைந்திருக்கும்.
  3. மெலோன் என்ற கண்களுக்கு முன்னுள்ள தலைப்பகுதி கடற்பகுதியில் இல்லை. தெளிவாக அமைந்து புலப்படுகிறது.
  4. கடற்பன்றியின் பற்களின் அமைப்பு தட்டையாக இருக்கும். ஒவாய் கடற்பன்றியின் பற்கள் கூர்மையாக கூம்பு வடிவத்தில் இருக்கும்.
  5. கடற்பன்றியின் உடலானது, ஒவாய் கடற்பன்றியின் உடல் உருவத்தினை விட அளவில் பெரியதாக/குண்டாக இருக்கும்.
  6. கடற்பன்றியின் முதுகுப்புற துடுப்பு, நன்றாக முக்கோண வடிவத்தில் இருக்கும். ஒவாய் பன்றியின் முதுகுத்துடுப்பு வளைந்தேக் காணப்படுகிறது.
  7. கடற்பன்றியின் இனப்பெருக்கத்திறன் அதிகம். ஒப்பிட்டளவில்(r-selected) ஓங்கில்களை விட எளிதில் கருவுறுகிறது.
  8. கடற்பன்றியின் சராசரி வாழ்நாள் 8-10ஆண்டுகள் ஆகும்.ஒவாய் கடற்பன்றிகள் சராசரியாக 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
  9. கடற்பன்றியின்(Phocoenoides dalli) அதிக அளவு எடை, ஏறத்தாழ 200 கிலோ கிராம்கள் ஆகும்.ஓங்கிலின்(Orcinus orca) அதிக அளவு எடை, ஏறத்தாழ 10டன் ஆகும்.
  10. கடற்பன்றியானது ஒப்பிட்டளவில், டால்ஃபினை விட சற்று குட்டையானது ஆகும்.
  11. பெரும்பான்மையான கடற்பன்றிகள் கடலில் மட்டுமே வாழ்கின்றன. நன்னீர் சூழலில் வாழ்வதில்லை.
  12. இருப்பினும், முதுகுத்துடுப்பிலா கடற்பன்றி (Neophocaena phocaenoides) மட்டும் உப்புநீரில் வாழாமல், நன்னீரில் வாழ்கின்றது.

பேரினங்கள்[தொகு]

காற்குளம்புகள் உள்ள நிலவாழ் உயிரினங்களின் வழித்தோன்றலான இவை, 5 கோடி ஆண்டுகளுக்கு முன் கடல்வாழ் உயிரினங்களாக வாழத்துவங்கின. 15கோடி ஆண்டுகளுக்கு முன் புதைப்படிவக்காலத்தில் கடற்பன்றிகள், ஒவாய் கடற்பன்றிகளிடமிருந்து வேறுபட்டன.வடபசிபிக் பெருங்கடலின் கடற்கரைகளில், இதற்குரிய புதைப்படிமங்கள் கிடைத்துள்ளன.

சமீபத்தில்ஆண் துறைமுகக் கடற்பன்றி யும்(Phocoena phocoena), பெண் டாலின் கடற்பன்றி யும் (Phocoenoides dalli) இணைந்த கலப்பினம் ஒன்றை, ஒரே பேரினத்தில் கண்டறியப் பட்டுள்ளது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ichishima, H. & Kimura, M.. 2005. "Harborophocoena toyoshimai, a new early Pliocene porpoise (Cetacea, Phocoenidae) from Hokkaido, Japan". Journal of Vertebrate Paleontology 25(3):655-664
  2. Ichishima, H. & Kimura, M.. 2000. "A new fossil porpoise (Cetacea; Delphinoidea; Phocoenidae) from the early Pliocene Horokaoshirarika Formation, Hokkaido, Japan". Journal of Vertebrate Paleontology 20(3):561-576
  3. Lambert, O.. 2008. "A new porpoise (Cetacea, Odontoceti, Phocoenidae) from the Pliocene of the North Sea". Journal of Vertebrate Paleontology 28(3):863-872
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடற்பன்றி&oldid=3131235" இலிருந்து மீள்விக்கப்பட்டது