கடல் ஓங்கில்
Appearance
கடல் ஓங்கில் | |
---|---|
பசிபிக் ஓங்கில்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
பெருங்குடும்பம்: | ஓங்கில் வகையி
|
குடும்பம்: | கடல் ஓங்கில்
|
Genera | |
See text |
கடல் ஓங்கில் (Delphinidae) என்பது கடலில் வாழும் ஓங்கில் குடும்பம் ஆகும். இதில் மொத்தம் 20 வாழும் இனங்கள் உள்ளன. இவை சராசரியாக 1.7 மீட்டர் நீளமும் 50 கிலோ எடையும் கொண்டவை. இக்குடும்பத்தைச் சேர்ந்த கொலைகாரத் திமிங்கிலம் என்ற இனம் இதுவரை அறியபட்ட ஓங்கில்களிலேயே மிகப் பெரியது ஆகும்.
கடல் ஓங்கில்கள் பொதுவாக மீன் மற்றும் கணவாய் போன்ற உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. எனினும் கொலைகாரத் திமிங்கிலம் போன்ற மிகப்பெரிய கடல் ஓங்கில்களானது கடல் நாய் போன்ற கடற்பாலூட்டிகளையும் உண்டு வாழ்கின்றன. பெரும்பாலும் பெண் ஓங்கில்களை விட ஆண் ஓங்கில்களே உருவில் பெரியதாக இருக்கும். எனவே அவை பால் ஈருருமை பண்பை வெளிப்படுத்துகின்றன.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Reidenberg, Joy S. (2007). "Anatomical adaptations of aquatic mammals". The Anatomical Record 290 (6): 507–513. doi:10.1002/ar.20541. பப்மெட்:17516440.
- ↑ Ralls, Katherine; Mesnick, Sarah (2009-02-26). "Sexual Dimorphism". Encyclopedia of Marine Mammals (2nd ed.). San Diego: Academic Press. pp. 1005–1011. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-091993-5. Archived from the original (PDF) on 2019-07-25. பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.