பேச்சு:பேய்க்கணவாய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கணவாய், பேய்க்கணவாய் என்ற சொற்கள் தமிழ்நாட்டில் வழக்கில் உள்ளது. பொதுவாக cuttlefish வகையான கடல்வாழ் உயிரினங்களுக்கு இப்பெயர் வழங்கும். Squid, cuttlefish, octopus ஆகிய சொற்களுக்கு இன்று வழங்கும் சொற்களை யாரேனும் பரிந்துரைத்தால், கட்டுரையின் தலைப்பை "பேய்க்கணவாய்" அல்லது "கணவாய்" என்று மாற்றலாம். Octopus என்பதற்குப் பேய்க்கணவாய் என்றும் Squid என்பதற்குக் கணவாய் என்றும் எங்கோ படித்தேன் (தொலைந்து போன என் பி. எல். சாமி அவர்களின் சங்க இலக்கியத்தில் நீரின விளக்கம் என்னும் நூலிலா என்று நினைவில்லை). சாக்குக்கணவாய் அல்லது சாக்குச்சுருளி என்னும் பெயர்களும் Octopus க்கு உண்டு.--செல்வா 19:54, 22 மே 2008 (UTC)[பதிலளி]

ஒருமுறை கொச்சியில் கடற்கறை மீன் உணவு அங்காடி ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கு ஒருவர் இது வேண்டுமா அது வேண்டுமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். மலையாளத்தில் ஒரு பெயர் சொல்லி எனக்குப் புரியாதபோது சார், தமிழோ? என்றார். ஆம் என்றதும், இது கணவாய் என்றார். அதுவும் புரியாமல் நான் தலைகுணிந்தேன். அவர் ஆங்கிலத்தில் squid என்று விளக்கினார்.
சாக்குக்களவாய் - Octopus vulgaris, கணவாய், வின்சுலோ முதலியவற்றையும் பார்க்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 03:24, 4 ஜூன் 2008 (UTC)
சாக்குக்கணவாய். பாசாங்கு செய்வதால் சாக்குக்கணவாய் என்று பெயராம். squid என்பது பேய்க்கணவாய் என்று நினைக்கிறேன்.அறுசுவை டாட் காம் என்னும் வலைப்பதிவில் கணவாய்க் குழம்பு செய்வது பற்றி குறிப்பிடுகிறார்கள் பார்க்கவும். நான் இலைக்கறி உண்பவன், எனவே எனக்கு இது பற்றி அதிகம் தெரியாது. Squid க்கு எண்கைகளுடன் இரு "கொடுக்குகளும்" உண்டு. பார்த்தால் 10 கைகள் இருப்பது போல தோன்றும்.--செல்வா 04:02, 4 ஜூன் 2008 (UTC)
அந்த இணைப்பில் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அதே தளத்தில் இருந்த இந்த இணைப்பின்படி கணவாய், கூந்தள் இரண்டுமே squid-ஐ குறிப்பதாகத் தெரிகிறது. மொத்தத்தில் என்னைச் சப்புக்கொட்ட வைத்து விட்டீர்கள். -- சுந்தர் \பேச்சு 04:21, 4 ஜூன் 2008 (UTC)
இங்கு சாக்குக்கணவாய் என்று குறிப்பிடுவோம். -- சுந்தர் \பேச்சு 04:30, 4 ஜூன் 2008 (UTC)

மலையாளத்தில் ஆக்டோபசை நீராளி என்றும் சுகுவிடை கூந்தள் என்றும் குறிப்பிட்டிருப்பதை ஒப்பு நோக்கலாம். -- சுந்தர் \பேச்சு 04:38, 4 ஜூன் 2008 (UTC)

சுந்தர், ஏனோ அந்த அறுசுவை 'டாட் காம் இணைப்பு இயங்கவில்லை. இதோ அதன் இணைப்பு http://www.arusuvai.com/tamil/ இந்த இணைப்புக்குச் சென்று அங்கே /node/2632 என்று இட்டுப்பாருங்கள். --செல்வா 13:48, 4 ஜூன் 2008 (UTC)

மலையாளத்தில் நீராளி (ஆக்டோபசு), கூந்தள் (சுகுவி'ட்) என்னும் சொல்லாட்சிகள் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. நாமும் அதனை அப்படியே ஆளலாம். அவை பழைய சொற்களாக இருந்தால், கட்டாயம் சேரநாட்டுத் தமிழாகத்தான் இருக்கவேண்டும். நீராளம் என்று தமிழில் ஒரு சொல் உண்டு, ஆனால் அதன் பொருள் நீர்வளம், நீர்மிகுதி, நீர்த்தன்மை என்பதாகும். கனடா நீராளம் மிகுந்த நாடு. நீராளம் என்பதற்கு இரண்டாவது பொருள் நீருணவு. பழச்சாறு, நீரில் கரைத்த (போதை தராத) இனிப்புப் பொருள் போன்றவை. பொதுவாக நீர்மப் பொருள் உணவு. நீராகாரம் என்றும், பானம் எனும் கூறுவர். பானம், ஆறு என்பதை நீரதி ( = சாறு) என்றும் தமிழில் கூறலாம் (நீரதி என்றால் கடல் என்றும் ஒரு பொருள் உண்டு). ஆனால் தமிழில் நீராளி என்று ஒரு சொல் இருப்பதாகத் தெரியவில்லை. நீரகம், நீரதி என்னும் சொற்கள் கடல் என்று பொருள் படுவதால், நீராளி என்னும் சொல் கடலில் வாழும் ஆக்டோபசுக்குப் பொருந்தும். கூந்தள் என்னும் பெயர் கூந்தற்பனை என்று சொல்வது போல 10 கைகள் = 8 கைகள்/கால்கள் + இரண்டு கொடுக்குகள் உள்ள தலைக்காலிகளை அழைக்கப் பொருத்தமான சொல்தான்.--செல்வா 13:07, 4 ஜூன் 2008 (UTC)

கூந்தள் உறுதியாகத் தமிழிலும் உண்டு. நான் இட்ட அறுசுவை இணைப்பிலும் குறிப்பிட்டுள்ளார்கள். (உங்கள் இணைப்பையும் பார்த்து சப்புக் கொட்டினேன்.) நீராளி தமிழ் ஒலிப்புக்கும் சொல் அமைப்புக்கும் பொருந்தி வருவதால் அதுவும் தமிழில் உண்டு என்றே நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 16:47, 4 ஜூன் 2008 (UTC)

நீராளி என்பது நீர் + ஆளி (நீர்ச் சிங்கம் அல்லது கடற் சிங்கம்) என்னும் பொருள் கொண்டதாக இருக்குமோ? மயூரநாதன் 02:16, 5 ஜூன் 2008 (UTC)

இருக்கலாம், மயூரநாதன். கணவாய் என்னும் சொல் முன்னொட்டு ஏதும் இல்லாமல் வருமென்றால், அது Squid (˘ச்குவி'ட்) என்பதனைக் குறிக்கும் என்று நினைக்கிறேன். ஆக்டோப்பசுவைக் குறிக்க சாக்குக்கணவாய் என்பது சரியாக இருக்கலாம். 1960களில் வெளிவந்த தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் 9 ஆம் தொகுதியில் விலங்கியல் என்னும் கட்டுரையில், 364 ஆம் பக்கத்துக்கு அடுத்த பக்கத்தில் தந்துள்ள பன்னிறப் படத்தில் (வண்ணப்படத்தில்) ஆக்டோப்பசுவை பேய்க்கடம்பான் என்றும், ˘ச்குவி'ட்டை கணவாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். தன் உடலில் எலும்புகள் ஏதும் இல்லாததால், மிகவும் சிறிய இடுக்கான வழிகளிலும், நுழைந்து வெளிவர இயலும் ஆதலால் இவைகளுக்கு கணவாய் (கணவாய் என்றால் இடுக்கான மலையிடைப் பாதை) என்று பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 'டேவி'ட் அட்டன்பரோ அவர்களின் இயற்கை ஆவணப்படத்திலோ வேறு ஒரு படத்திலோ, வியப்பூட்டும் வகையில் இப்படி மிக இடுக்கான சந்தில் நுழைந்து வெளிவரும் பெரிய கணவாயைப் பார்த்திருக்கிறேன். பி'பிஎ˘ச (PBS) தளம் ஒன்றில், கைப்பந்தாட்ட (வாலிபால்) தளம் அளவுடைய ஆக்டோப்பசு நீருணவு உருளி (can, கோக்கக்கோலா, பெப்சி போன்றவை விற்பனையாகும் அலுமினிய ஆழாக்கு போன்ற உருளி)யின் வழியாக புகுந்து வெளிவரும் என்று கூறுகின்றது. கேள்வி 9 ஐப் பார்க்கவும். எனவே என் பரிந்துரை. ஆக்டோப்பசு = பேய்க்கடம்பான், சாக்குக்கணவாய், சாக்குச்சுருளி, நீராளி; ˘ச்குவி'ட் = Squid = கணவாய், கூந்தள். இவற்றை இன்னும் விரித்து எழுத வேண்டும். கணவாய் என்னும் சொல்லும், சாக்குக்கணவாய் என்னும் சொல்லும் வியப்பூட்டும் பொருத்தம் கொண்டவை. இக் கடல்வாழ் விலங்குகளில் நிறமிகள் கொண்ட, ஒளி எதிரொளிக்கும், செல்கள் (கண்ணறைகள்) இருப்பதால் சூழலுக்கு ஏற்றார்போல உடல்நிறத்தை மாற்றவல்லவை. இப்படிப் பாசாங்கு செய்வதில் மிக வல்லவை இவை (இது இவற்றின் தனிச்சிறபான பண்பாகும், ஆங்கிலத்தில் mimic octopus என்று ஒரு சொல்லாட்சியும் உண்டு). இப்படிப் பாசாங்கு செய்து ஒரு சுறாமீனையே பிடித்துண்ணும் பேய்க்கடம்பான் (சாக்குக்கணவாய்) ஒன்றின் படத்தை இங்கே பாருங்கள். --செல்வா 12:48, 5 ஜூன் 2008 (UTC)

முற்றிலும் மாற்றி எழுதப்பட்டுள்ளது[தொகு]

இக் கட்டுரை முற்றிலுமாக மாற்றி எழுதப்பட்டுள்ளது. முன்னர் இருந்த கருத்துக்களில் சில சரியானவையா என்று தெரியவில்லை. இப்பொழுதுள்ள கருத்துக்கள் யாவும் ஆங்கில விக்கியில் இருந்து மொழி பெயர்த்தது. பின்னர் பிற தரவுகளைக் கண்டு உறுதி செய்த பின் முன்பிருந்த கருத்துக்கள் சரியாக இருப்பின் சேர்த்து விடுகிறேன்.--செல்வா 02:44, 4 ஜூன் 2008 (UTC)

கணவாய் என்பது வேறு இனம்[தொகு]

கணவாய் என்பது Squid என்ற குடும்பத்தைக் குறிக்கிறது. ஆனால் ஆக்டோபசிற்கும் கணவாய்க்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. எனவே எண்காலி என்ற தலைப்பே பொருத்தமாக இருக்கும். மேலும் இது Octopus என்பதன் நேரடி தமிழ் மொழிப்பெயர்ப்பு ஆகும். Varunkumar19 (பேச்சு) 05:26, 26 பெப்ரவரி 2019 (UTC)

கணவாய் மற்றும் ஆக்டோபஸ் ஆகிய இரண்டும் தலைக்காலிகள் என்ற வகுப்பைச் சேர்ந்தது. எனினும் இரண்டும் வேறுபட்ட வரிசைகள் ஆகும்.Varunkumar19 (பேச்சு) 07:53, 26 பெப்ரவரி 2019 (UTC)

இந்த உயிரினத்தின் பெயரை பேய்க்கணவாய் என மாற்ற பரிந்திரைக்கிறேன்--அருளரசன் (பேச்சு) 15:17, 26 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பேய்க்கணவாய்&oldid=3313711" இலிருந்து மீள்விக்கப்பட்டது