கடல்சார் தாவரவியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கடல்சார் தாவரவியல் (Marine botany) என்பது பெருங்கடல்களின் கடலோர மேலீடான ஒளிநுழைவு நீர்மண்டலம், ஓத இடைப் பகுதிகள், கடற்கரையோர சதுப்புநிலங்கள், கழிமுகங்களில் உள்ள உப்புத்தன்மையுள்ள நீரில் வளரும் தாவரங்கள், பாசிகளைப் பற்றி அறிய உதவும் அறிவியலாகும். இது கடல்சார் உயிரியல், தாவரவியலின் ஒரு பிரிவாகும்.
கடல் தாவர வகைப்பாடு[தொகு]
உயிரிக் குழுக்கள் ஐந்து உலகங்களாகப் பகுக்கப்படுகின்றன: ஒருகல உயிரிகள், முகிழுயிரிகள், தாவரங்கள், பூஞ்சைகள், விலங்குகள்.
கடல்சார் சூழலியல்[தொகு]
கடல்சார் சூழலியல், கடல்சார் தாவரவியல் கீழ்வரும் புலங்களை உள்ளடக்கியுள்ளது:
- கடலாழ மண்டலம்
- பவளப் பாறைகள்
- அலையாத்தித் தாவரங்கள்
- உவர்ச் சதுப்புநிலம்
- கடற்பாசிக் காடுகள்
- கடல் புற்கள்
- கடல் களைச்செடிகள்
- தாவர மிதவை உயிரிகள்