கேமரன் மலை மக்களவை தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேமரன் மலை (P078)
மலேசிய மக்களவை தொகுதி
பகாங்
Cameron Highlands (P078)
Federal Constituency in Pahang
கேமரன் மலை மக்களவை தொகுதி
மாவட்டம் கேமரன் மலை மாவட்டம்
லிப்பிஸ் மாவட்டம்
பகாங்
வாக்காளர் தொகுதிகேமரன் மலை தொகுதி
முக்கிய நகரங்கள்ரிங்லெட்; பிரிஞ்சாங்; திரிங்காப் தானா ராத்தா
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2003
கட்சி பாரிசான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
2022
மக்களவை உறுப்பினர்ரம்லி முகமட் நோர்
(Ramli Mohd Nor)
வாக்காளர்கள் எண்ணிக்கை46,020[1]
தொகுதி பரப்பளவு3,114 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022
2022-இல் கேமரன் மலை மக்களவை தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (36.6%)
  சீனர் (27.8%)
  இதர இனத்தவர் (16.2%)

கேமரன் மலை மக்களவை தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Cameron Highlands; ஆங்கிலம்: Cameron Highlands Federal Constituency; சீனம்: 金马伦高原联邦选区) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், கேமரன் மலை மாவட்டத்தில் (Cameron Highlands District); அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி ((P078)) ஆகும்.[3]

கேமரன் மலை மக்களவை தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அத்துடன் அதே 2004-ஆம் ஆண்டில் இருந்து கேமரன் மலை மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.

பொது[தொகு]

கேமரன் மலை மாவட்டம்[தொகு]

முன்பு கேமரன் மலை என்பது அண்மையில் கேமரன்மலை மாவட்டம் என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கேமரன் மலை மாவட்டத்தின் தலை நகரம் தானா ராத்தா. பகாங் மாநிலத்தில் வட மேற்கில் அமைந்து உள்ளது. இந்த மாவட்டம் மலேசியாவிலேயே அதிகமான மலை ஊர்களைக் கொண்ட ஒரு மலைப்பகுதியாகும்.

கேமரன் மலை மாவட்டம் சிங்கப்பூர் அளவிற்கு 712 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. தித்திவாங்சா மலைத்தொடர் எனும் தீபகற்ப மலேசியாவின் மத்திய மலைத் தொடரில் கேமரன் மலைப் பிரதேசம் அமைந்துள்ளது. வடக்கே கிளாந்தான் மாநிலமும், மேற்கே பேராக் மாநிலமும் இதன் எல்லைப் பகுதிகளாக உள்ளன.

சுகமான சுற்றுலாத் தளம்[தொகு]

பகாங் மாநிலத்தின் மிகச் சிறிய மாவட்டமாக, அதன் மேற்கு எல்லையில் கேமரன் மலை உள்ளது. இது ஒரு சுகமான சுற்றுலாத் தளம் ஆகும். வருடம் முழுமையும் குளிராகவே இருக்கும்.

இங்கே நிறைய தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான காய்கறித் தோட்டங்களும் உள்ளன. தமிழர்களும் கணிசமான அளவிற்கு விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளனர்.

கேமரன் மலை வரலாறு[தொகு]

கேமரன் மலைப்பகுதி 1200 - 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வில்லியம் கேமரன் (ஆங்கிலம்: Sir William Cameron) எனும் பிரித்தானிய நில ஆய்வாளரின் நினைவாக கேமரன் மலை அல்லது கேமரன் ஆய்லண்ட்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டது.[4]

1885-ஆம் ஆண்டு பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில், அவர்களின் ஓய்வுத்தளமாக விளங்கிய இந்த கேமரன் மலை, 1925-ஆம் ஆண்டுக்குப் பிறகு விவசாயத் துறையில் பிரசித்திப் பெறத் தொடங்கியது.[5]

கேமரன் மலை வாக்குச் சாவடிகள்[தொகு]

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), கேமரன் மலை மக்களவை தொகுதி 29 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[6]

சட்டமன்ற தொகுதி தேர்தல் வட்டாரம் குறியீடு வாக்குச் சாவடி
தானா ராத்தா
(Tanah Rata)
(N01)
Pos Terisu 078/01/01 SK Terisu
Pos Telanuk 078/01/02 SK Telanuk
Pos Lemoi 078/01/03 SK Lemoi
Pos Mensun 078/01/04 SK Menson
Lembah Bertam 078/01/05 SJK (C) Bertam Valley
Bandar Ringlet 078/01/06 SJK (T) Ringlet
Habu 078/01/07 SMK Ringlet
Ladang Boh 1 078/01/08 SJK (T) Ladang Boh 1
Ladang Boh 2 078/01/09 SJK (T) Ladang Boh 2
Kea Farm 078/01/10 SJK (C) Kea Farm
Tanah Rata 078/01/11 SMK Sultan Ahmad Shah
Berinchang 078/01/12 SJK (C) Brinchang
Ladang Sungai Palas 078/01/13 SJK (T) Ladang Sungai Palas
Ladang Blue Valley 078/01/14 SJK (T) Ladang Blue Valley
Kampung Raja 078/01/15 SK Kampung Raja
Kuala Terla 078/01/16 SJK (C) Kuala Terla
Teringkap 078/01/17 SJK (C) Tringkap
ஜெலாய்
(Jelai)
(N02)
Pos Lanai 078/02/01 SK Lanai
Kuala Medang 078/02/02 SK Kuala Medang
Tanjung Gahai 078/02/03 SK Tanjung Gahai
Bukit Kota 078/02/04 SK Batu Yon
Kampung Keledek 078/02/05 SK Kampung Keledek
Lubuk Kulit 078/02/06 SK Lubok Kulit
FELDA Sungai Koyan Satu 078/02/07 SK LKTP Sungai Koyan
FELDA Sungai Koyan Dua & Tiga 078/02/08 SMK Sungai Koyan
Pos Betau 078/02/09 SK Betau
Pos Sinderut 078/02/10 SK Senderut
Pos Lenjang 078/02/11 SK Lenjang
Pos Titum 078/02/12 SK Titom

கேமரன் மலை மக்களவை தொகுதி[தொகு]

கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2004 - 2023)
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
லிப்பிஸ் (Lipis Federal Constituency) தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
11-ஆவது 2004–2008 எஸ். கே. தேவமணி
(Devamany S. Krishnasamy)
பாரிசான் (மஇகா)
12-ஆவது 2008–2013
13-ஆவது 2013–2014 கோவிந்தசாமி பழனிவேல்
(Palanivel Govindasamy)
2014–2018 சுயேச்சை
14-ஆவது 2018 சிவராஜ் சந்திரன்
(Sivarraajh Chandran)
பாரிசான் (மஇகா)[7]
2019 ராம்லி முகமட் நோர்
(Ramli Mohd Nor)
பாரிசான் (நேரடி)[8]
2019–2022 பாரிசான் (அம்னோ)
15-ஆவது 2022–தற்போது

கேமரன் மலை தேர்தல் முடிவுகள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (கேமரன் மலை தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
46,020 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
34,190 -
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
33,265 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
'75 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
850 -
பெரும்பான்மை
(Majority)
4,544 13.66%
வெற்றி பெற்ற கட்சி பாரிசான்
Source: Parliament Seat or Candidate in Pahang 15th GE

கேமரன் மலை வேட்பாளர் விவரங்கள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (சிகாமட் தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
ராம்லி முகமட் நோர்
(Ramli Mohd Nor)
பாரிசான் 16,120 48.46% -7.72
சியோங் யோக் கோங்
(Chiong Yoke Kong)
பாக்காத்தான் 11,576 34.80% -6.27
அப்துல் ரசீட் முகமட் அலி
(Abdul Rasid Mohamed Ali)
பெரிக்காத்தான் 5,569 16.74% +16.74

கேமரன் மலை சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

நாடாளுமன்ற
தொகுதி
சட்டமன்ற தொகுதிகள்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
P078
கேமரன் மலை
(Cameron Highlands)
ஜெலாய்
(Jelai)
தானா ராத்தா
(Tanah Rata)

கேமரன் மலை சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)[தொகு]

# சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N1 தானா ராத்தா
(Tanah Rata)
ஓ சி யாங்
(Ho Chi Yang)
பாக்காத்தான் (ஜசெக)
N2 ஜெலாய்
(Jelai)
வான் ரொசிடி வான் இசுமாயில்
(Wan Rosdy Wan Ismail)
பாரிசான் (அம்னோ)

உள்ளாட்சி மன்றங்கள்[தொகு]

எண் சட்டமன்ற தொகுதி உள்ளாட்சி மன்றம்
N1 தானா ராத்தா
(Tanah Rata)
கேமரன் மலை மாவட்ட ஊராட்சி
(Cameron Highlands Municipal Council)
N2 ஜெலாய்
(Jelai)
லிப்பிஸ் மாவட்டம்
(Lipis District Council)

மலேசியாவில் தற்போது நான்கு வகையான உள்ளாட்சி மன்றங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 33. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. Moore, Wendy Khadijah (2004). Malaysia: A Pictorial History 1400–2004. Archipelago Press. பக். 182. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:981-4068-77-2. 
  5. Barr, Pat (1977). TAMING THE JUNGLE. Martin Secker & Warburg Limited. பக். 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-436-03365-8. 
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11 (5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. Hamdan, Nurbaiti (2018-11-30). "Court nullifies BN's GE14 victory for Cameron Highlands seat (Updated)". The Star (Malaysia). https://www.thestar.com.my/news/nation/2018/11/30/court-nullifies-bns-ge14-victory-for-cameron-highlands-seat/. 
  8. "BN retains Cameron Highlands parliamentary seat". Bernama (The Sun (Malaysia)). 26 January 2019. https://www.thesundaily.my/local/bn-retains-cameron-highlands-parliamentary-seat-AN438741. 

மேலும் காண்க[தொகு]