சமுனாமரத்தூர்

ஆள்கூறுகள்: 12°35′39″N 78°53′18″E / 12.5941995°N 78.8884047°E / 12.5941995; 78.8884047
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமுனாமரத்தூர்
JAMUNAMARATHUR
ஜவ்வாது மலை
தேர்வு நிலை பேரூராட்சி
அடைபெயர்(கள்): ஜமுனாமரத்தூர், ஜவ்வாது மலையிலுள்ள மலை நகரம்
சமுனாமரத்தூர் is located in தமிழ் நாடு
சமுனாமரத்தூர்
சமுனாமரத்தூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
சமுனாமரத்தூர் is located in இந்தியா
சமுனாமரத்தூர்
சமுனாமரத்தூர்
சமுனாமரத்தூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°35′39″N 78°53′18″E / 12.5941995°N 78.8884047°E / 12.5941995; 78.8884047
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தொண்டை மண்டலம்
வருவாய் கோட்டம்ஆரணி
சட்டமன்றத் தொகுதிகலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதி
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைதேர்வு நிலை பேரூராட்சி
 • நிர்வாகம்ஜமுனாமரத்தூர் பேரூராட்சி
 • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்ஆரணி
 • மக்களவை உறுப்பினர்சி.அண்ணாதுரை
 • சட்டமன்ற உறுப்பினர்பன்னீர் செல்வம்
 • மாவட்ட ஆட்சியர்கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப.
பரப்பளவு தரவரிசை7200 மீட்டர்கள்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்6,900
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு635 703
இந்தியாவில் தொலைபேசி எண்கள்91 -4181
வாகனப் பதிவுTN 97 & TN 25
ஊராட்சி ஒன்றியம்ஜவ்வாது மலை
சென்னையிலிருந்து தொலைவு217 கி.மீ.
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு76 கி.மீ.
வேலூரிலிருந்து தொலைவு83 கி.மீ.
ஆரணியிலிருந்து தொலைவு68 கி.மீ.
போளூரிலிருந்து தொலைவு44 கி.மீ.
கலசப்பாக்கத்திலிருந்து தொலைவு52 கி.மீ.
திருப்பத்தூரிலிருந்து தொலைவு53 கி.மீ.
இணையதளம்ஜமுனாமரத்தூர் பேரூராட்சி

சமுனாமரத்தூர் (அ) ஜமுனாமரத்தூர் திருவண்ணாமலை மாவட்டத்தில் , புதிதாக அமைக்கப்பெற்ற ஜமுனாமரத்தூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம், பேரூராட்சி மற்றும் ஜவ்வாது மலை வாசத்தலம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இது சவ்வாது மலையில் இருக்கும் புகழ் பெற்ற நகராகும். மேலும் ஜவ்வாது மலையின் முக்கிய சந்தை பகுதியும், மக்கள் கூடும் இடமும் ஆகும். அதுமட்டுமில்லாமல் மாவட்ட தலைமையிடமான திருவண்ணாமலையிலிருந்து 76 கிமீ தொலைவிலும், போளூரிலிருந்து 44 கிமீ தொலைவிலும், ஆரணியிலிருந்து 68 கிமீ தொலைவிலும், செங்கத்திலிருந்து 48 கிமீ தொலைவிலும், கலசப்பாக்கத்திலிருந்து 52 கிமீ தொலைவிலும், வேலூரிலிருந்து 83 கிமீ தொலைவிலும், திருப்பத்தூரிலிருந்து 53 கிமீ தொலைவிலும், வாணியம்பாடியிலிருந்து 40 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

நிர்வாகம் மற்றும் அரசியல்[தொகு]

சமுனாமரத்தூர் நகரம் கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிகற்கும் உட்பட்டதாகும். இந்த நகரத்தை சமுனாமரத்தூர் பேரூராட்சியின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

வருவாய் வட்டம்[தொகு]

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் சமுனாமரத்தூர் வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டத்தை 2016 ஆம் ஆண்டு போளூர் வட்டத்தின் மேற்கு பகுதிகளையும் மற்றும் செங்கம் வட்டத்தின் வடக்கு பகுதிகளையும் கொண்டு இந்த வட்டம் உருவாக்கப்பட்டது. இந்த வட்டத்தில் 42 வருவாய் கிராமங்களையும், 47,271 மக்கள்தொகையும் கொண்டது. இந்த வட்டத்தில் சமுனாமரத்தூர் பேரூராட்சி மற்றும் சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்துள்ளது. இந்த வட்டம் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள வருவாய் வட்டமாகும்.

சாலை வசதிகள்[தொகு]

சமுனாமரத்தூரில் சாலை வசதிகள் பொறுத்த வரை மலைகளின் நடுவே வலை பின்னலாக அமைந்துள்ளது.

ஆகிய முக்கிய சாலைகள் சமுனாமரத்தூர் நகரை இணைக்கிறது.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

சமுனாமரத்தூர் நகரில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, திருப்பத்தூர், போளூர், ஆம்பூர், வாணியம்பாடி, செங்கம், கலசப்பாக்கம் ஆகிய நகரங்களில் இருந்து நேரடியாக பேருந்து சேவைகள் உள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 6,000 மக்கள் வாழ்கிறார்கள். மேலும் இது சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையகம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமுனாமரத்தூர்&oldid=3867422" இலிருந்து மீள்விக்கப்பட்டது