விக்கிப்பீடியா:உறைவிட விக்கிமீடியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஆதரவு: # {{ஆதரவு}}--
வரிசை 59: வரிசை 59:
#{{ஆதரவு}}--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 17:39, 2 திசம்பர் 2015 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 17:39, 2 திசம்பர் 2015 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Balurbala|இரா.பாலா]] ([[பயனர் பேச்சு:Balurbala|பேச்சு]]) 13:15, 3 திசம்பர் 2015 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Balurbala|இரா.பாலா]] ([[பயனர் பேச்சு:Balurbala|பேச்சு]]) 13:15, 3 திசம்பர் 2015 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Meykandan|Meykandan]] ([[பயனர் பேச்சு:Meykandan|பேச்சு]]) 16:25, 4 திசம்பர் 2015 (UTC)


=== நடுநிலை ===
=== நடுநிலை ===

16:25, 4 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

குறுக்கு வழி:
WIR

உறைவிட விக்கிமீடியர்கள் (அல்லது விக்கிப்பீடியர்கள்) என்போர் ஒரு நிறுவனத்துடன் இணைந்து விக்கிப் பணியாற்ற நேரம் ஒதுக்கும் விக்கிமீடியர்கள் ஆவர். இக்குறிப்பிட்ட காலத்துக்கான ஊக்கத்தொகையினைப் பொதுவாக அந்நிறுவனத்தின் மூலமாகவோ விக்கிமீடியா அறக்கட்டளை அல்லது கிளைகள் மூலமாகவோ பெற்றுக் கொள்வர். முழுக்கத் தன்னார்வமாகச் செயல்படுவோரும் உளர். இவர்கள் வெறுமனே அந்நிறுவனத்துக்குள் இருந்து விக்கிமீடியா திட்டங்களுக்குப் பங்களிப்பவர்கள் அல்ல. மாறாக, தங்கள் உறைவிடப் பணி முடிந்த பிறகும் கூட அந்நிறுவனமும் அதன் பணியாளர்களும் தொடர்ந்து விக்கிமீடியா திட்டங்களுக்குப் பங்களிக்கும் வகையில் விக்கிமீடியா இயக்கம், அதன் கொள்கைகள் பற்றிய அறிமுகத்தையும் பயிற்சியையும் வழங்குவர். தொடக்கக் காலத்தில், காட்சிக்கூடங்கள், நூலகங்கள், பெட்டகங்கள், அருங்காட்சியகங்கள் (GLAM) போன்ற நிறுவனங்களிலேயே உறைவிட விக்கிமீடியர்கள் பணியாற்றினார்கள். தற்போது, பல்வேறு வகையான நிறுவனங்களும் உறைவிட விக்கிமீடியர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு, Wikipedian in Residence - Wikimedia Outreach பக்கத்தைக் காணுங்கள்.

தகவல் உழவன்

தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாகத் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான பல்வேறு வளர்ச்சி வாய்ப்புகளை நிறைவேற்றும் பொருட்டு ஒருவர் முழுநேரமாக அந்நிறுவனத்தோடு இணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது. இதன் பொருட்டு, தகவல் உழவன் இப்பொறுப்பை ஏற்க முன்வந்து அக்டோபர் 1, 2015 முதல் செயற்பட்டு வருகிறார். இப்பொறுப்பு முதற்கட்டமாக மார்ச்சு 31, 2016 வரை ஆறு மாத காலத்துக்கு இருக்கும். அதன் பிறகு, கூட்டு முயற்சியின் விளைவுகளில் உறைவிட விக்கிமீடியரின் பங்கு, தொடர் பணிக்கான தேவையைப் பொருத்து இப்பொறுப்பு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. அவ்வாறு நீட்டிக்கப்படும் போது மீண்டும் இங்கு தெரிவித்து சமூக ஒப்புதலைப் பெற்றுத் தொடர்வோம். இதற்காக மாதம் இந்திய உரூபாய் 30,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதற்கான பகுதி நிதி ஆதரவை விக்கிமீடியா இந்தியா அளிக்கும். எஞ்சிய நிதியை விக்கிமீடியா அறக்கட்டளையிடம் நல்கை வேண்டலாக கோரிப் பெற வேண்டும். இந்நல்கை வேண்டலில் இவருடைய பணியை இன்னும் சிறப்பாகவும் திறமாகவும் செயற்படுத்துவதற்கான இதர செலவுகளும் அடங்கும். எடுத்துக்காட்டுக்கு, தட்டச்சு உதவியாளர்கள் அல்லது குறைந்த விலை ஒளிவருடிக் கருவிகள் இச்செலவில் அடங்கலாம். இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இனங்கண்டுள்ளபடி, பின்வரும் புலங்களில் தகவல் உழவனின் பணி அமையும்:

  • பொது நிறுவனங்கள் கட்டற்ற ஆக்க உரிமங்களை ஏற்பதற்கான கொள்கை முனைவுகள்
  • காட்சிக்கூடங்கள், நூலகங்கள், பெட்டகங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றில் மின்னாவணமாக்கல் (GLAM)
  • பரப்புரை

கடந்த இரு மாதங்களாக அவர் முன்னெடுத்துள்ள முயற்சிகளின் விளைவாகப் பல்வேறு நூல்களைப் பொதுக்கள உரிமம் அல்லது தக்க கட்டற்ற படைப்பாக்க பொதும உரிமத்தில் எதிர்பார்த்துள்ளோம். அதேவேளை, முதற்கட்டப் பணியாக நாம் இரு ஆண்டுகள் முன்பு கொடையாகப் பெற்ற 20 தொகுதிகள் கலைக்களஞ்சியங்களையும் விக்கிமூலத்தில் பதிவேற்றும் பணியில் முனைந்துள்ளார்.

மிகத் தாமதமாகவே இதனைச் சமூகத்தின் கவனத்துக்கும் ஒப்புதலுக்கும் வைப்பதற்கான முழுப் பொறுப்பினை நான் ஏற்றுக் கொள்கிறேன். கள நிலவரங்களைப் புரிந்து கொண்டு நடைமுறைச் சாத்தியங்களுக்கு உட்பட்டு இப்பொறுப்பு மூலம் என்னென்ன பணிகளைச் செய்து முடிக்க முடியும் என்று அறிந்து கொள்ள இந்த இரு மாத காலம் தேவைப்பட்டது. எனவே, தகவல் உழவனின் இப்பொறுப்பினை வழிமொழிந்து ஆதரவு அளிக்குமாறு தமிழ் விக்கிச் சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறேன். அருள்கூர்ந்து உங்கள் கேள்விகள், ஐயங்களைக் கருத்துகள் பகுதியில் தெரிவிக்க வேண்டுகிறேன். இவ்வாக்கெடுப்பு நவம்பர் திசம்பர் 6 2015 11:59 UTC க்கு முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 11:34, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

என்னை முன்மொழிந்தமைக்கு நன்றி. இப்பொறுப்பை ஏற்கிறேன். நம் தமிழ் விக்கிப்பீடியர்களின் எண்ணங்களை உள்வாங்கி, அப்புரிந்துணர்வு ஒப்பந்தபடியும், முடிந்தவரை கட்டற்ற மென்பொருட்களின் திறனோடும் செயற்படுவேன்.--உழவன் (உரை) 12:57, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1.  ஆதரவு--ThIyAGU 06:56, 1 திசம்பர் 2015 (UTC)
  2. --நந்தகுமார் (பேச்சு) 11:41, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  3.  ஆதரவு--Kanags \உரையாடுக 11:53, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  4. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:28, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  5. --ஸ்ரீதர் (பேச்சு) 13:19, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  6. --மதனாகரன் (பேச்சு) 14:01, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  7. --மயூரநாதன் (பேச்சு) 17:38, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  8. --உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 05:55, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  9. --Rtssathishkumar (பேச்சு) 07:08, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  10. சண்முகம்ப7 (பேச்சு) 07:12, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  11.  ஆதரவு--Commons sibi (பேச்சு) 07:13, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  12.  ஆதரவு--Semmal50 (பேச்சு) 08:06, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  13.  ஆதரவு --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:58, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  14.  ஆதரவு-- இந்த பணிக்கு இவர் சரியானவராகவே கருதுகிறேன். --பாலாஜி (பேச்சு) 09:09, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  15.  ஆதரவு-- சில ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டியது. இப்பொழுதாவது நடைபெறுவதையிட்டு மகிழ்ச்சி. கோபி (பேச்சு) 09:29, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  16.  ஆதரவு -- சுந்தர் \பேச்சு 10:33, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  17.  ஆதரவு --Chandravathanaa (பேச்சு) 10:53, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  18. -- மாதவன்  ( பேச்சு  ) 11:14, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  19.  ஆதரவு--MTSudar (பேச்சு) 12:42, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  20.  ஆதரவு--Booradleyp1 (பேச்சு) 12:51, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  21. -நீச்சல்காரன் (பேச்சு) 14:38, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  22. --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:47, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  23.  ஆதரவு----Jambolik (பேச்சு) 15:15, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  24.  ஆதரவு--பயனர்:கி.மூர்த்தி --கி.மூர்த்தி 15:34, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  25.  ஆதரவு--Kottalam (பேச்சு) 16:41, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  26.  ஆதரவு --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:02, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  27.  ஆதரவு --செல்வா (பேச்சு) 18:08, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  28.  ஆதரவு Pazha.kandasamy (பேச்சு) 18:47, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  29.  ஆதரவு --த.சீனிவாசன் (பேச்சு) 20:52, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  30.  ஆதரவு ----கலை (பேச்சு) 21:06, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  31.  ஆதரவு --Natkeeran (பேச்சு) 22:27, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  32.  ஆதரவு --அருளரசன் (பேச்சு)Arulghsr (பேச்சு) 04:04, 1 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
  33.  ஆதரவு --சிவகோசரன் (பேச்சு) 05:43, 1 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
  34.  ஆதரவு--ஹிபாயத்துல்லா (பேச்சு) 08:47, 1 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
  35.  ஆதரவு--அன்புமுனுசாமி (பேச்சு) 15:33, 01 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
  36.  ஆதரவு--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 15:45. 1 டிசம்பர் 2015 (UTC)
  37.  ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:58, 2 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
  38.  ஆதரவு--பயனர்:அப்துல் றஸ்ஸாக் (பேச்சு) 12ː40, 2 டிசம்பர் 2015 (UTC)
  39.  ஆதரவு-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:39, 2 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
  40.  ஆதரவு--இரா.பாலா (பேச்சு) 13:15, 3 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
  41.  ஆதரவு--Meykandan (பேச்சு) 16:25, 4 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

நடுநிலை

எதிர்ப்பு

கருத்துகள்

இரு விடயங்கள் தெளிவில்லாமல் உள்ளன:

  • ஏன் வாக்கெடுப்பு? தமிழ் இணையக் கல்விக்கழகம் விரும்பிய பணியாளரை நியமிக்கலாம் அல்லவா?
  • வேறு யாருக்கும் இவ்வாய்ப்பு கொடுக்கப்படவில்லையா?

--AntanO 14:50, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

Antan, உறைவிட விக்கிமீடியர் தொடர்பான நல்கை வேண்டலுக்கான ஓர் எடுத்துக்காட்டை இங்கு காணலாம். நாம் இவ்வாறான நல்கை வேண்டலுக்குச் செல்லும் போது, உறைவிட விக்கிமீடியருக்கான விக்கிச்சமூக ஆதரவை முறைப்படி தெரிவிப்பதற்கு இந்த வாக்கெடுப்பு உதவும். இவ்வாக்கெடுப்பின் அடுத்த கட்டமாக விரிவான நல்கை வேண்டல் எழுதி அதற்கும் சமூக ஒப்புதல் பெற்ற பிறகே முன்னகர முடியும்.

இது ஒரே ஒருவருக்கான வாய்ப்பு மட்டும் அன்று. முதலில் ஒருவர் செயற்பட்டு அதிலுள்ள வாய்ப்புகள், இடர்கள், விளைவுகளை ஆய்ந்து இன்னும் பலர் அடுத்தடுத்து ஈடுபட முடியும். செகதீசுவரனிடம் இப்பணியில் ஈடுபட விருப்பமா என்று ஏற்கனவே கேட்டுள்ளேன். தனிப்பட்ட காரணங்களால் அவரால் இயலவில்லை. வேறு யாருக்கும் ஆர்வம் இருக்கிறது என்றால் மற்ற வழமையான அணுக்கங்களுக்கு விண்ணப்பிப்பது போல் இங்கேயே விண்ணப்பிக்கலாம். அது வேறு எந்த நிறுவனத்திலும் நாட்டிலும் உள்ள வாய்ப்பாகக் கூட இருக்கலாம்.

தமிழ் இணையக் கல்விக்கழகத்துடனான நமது கூட்டு முயற்சி என்பது அவர்களைப் புரவலர்களாக எதிர்நோக்கியது அன்று.

  • நமது கட்டற்ற ஆக்கக் கொள்கை முனைவுகளுக்கான அரசு ஆதரவு
  • நமது நிகழ்வுகள், செயற்பாடுகளுக்கு அவர்களது வளாக வசதிகளையும் அலுவல் முறைத் தொடர்புகளையும் பகிர்வது

போன்றவை இந்தக் கூட்டு முயற்சியில் அடங்கும். தமிழ் இணையக் கல்விக்கழகம் விக்கிப்பீடியா வளர்ச்சிப் பணிகளுக்காகப் பல்வேறு வகையிலும் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது என்றாலும், தகுந்த நிதி ஆதாரங்களும் உறைவிட விக்கிமீடியர்கள் போன்ற திட்டங்களும் கொண்டுள்ள இயக்கமாகிய நாம், நமது சார்பாக ஒருவரை இப்பொறுப்பில் அமர்த்துவது விக்கிப்பீடியா வழமைகளைக் காப்பதுடன் நமது பணிகளுக்கு முன்னுரிமை அளித்து குறுகிய காலத்தில் செயற்றிட்டங்களை முடிக்க உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 06:38, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

பதிலுக்கு நன்றி இரவி. --AntanO 06:45, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]