பயனர் பேச்சு:அப்துல் றஸ்ஸாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், அப்துல் றஸ்ஸாக், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:55, 2 ஏப்ரல் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், அப்துல் றஸ்ஸாக்!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 04:27, 7 ஏப்ரல் 2013 (UTC)

வணக்கம் ஐயா, தங்களை விக்கிப்பீடியாவுக்கு வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்துங்கள். உங்கள் ஊர்களைப் பற்றி, அறிஞர்கள் பற்றி அல்லது உங்கள் விருப்பத்துறைகளில் கட்டுரைகள் எழுதுங்கள். உதவி தேவைப்படின் தயங்காது கேளுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 23:07, 17 மே 2013 (UTC)

சித்தர்கள்[தொகு]

சித்தர்கள் கட்டுரையில் தங்களின் தொகுப்புக் குறித்து சில கருத்துகள்: பொதுவாக விக்கிக் கட்டுரைகளில் முழுமையான பாடல்கள் தரப்படுவதில்லை. ஆனாலும் சில கட்டுரைகளின் முக்கியத்துவம் கருதி எடுத்துக்காட்டுக்கு ஓரிரு பாடல்களைத் தரலாம். சித்தர்கள் கட்டுரையில் நீங்கள் சேர்த்த பாடல் அக்கட்டுரைக்குப் பொருந்தவில்லை. அதனால் அதனை நீக்கியிருக்கிறேன். வேண்டுமானால் அப்பாடலை குணங்குடி மஸ்தான் சாகிபு கட்டுரையில் அவரது பாடல் ஒன்றுக்கான எடுத்துக்காட்டாக சேர்க்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 03:49, 1 சூன் 2013 (UTC)

தமிழ்த் தட்டச்சு[தொகு]

தமிழ்த் தட்டச்சுக் கருவிக்கான இடத்தை மாற்றியுள்ளார்கள். புதிய முறையை அறிய விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு பாருங்கள்.--இரவி (பேச்சு) 17:32, 15 சூன் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவின் தற்போதைய வடிவம், மாற்றம் குறித்து தங்கள் கருத்துக்களை இங்கு தாருங்கள். மேலும், உரையாடல் பக்கங்களில் உங்கள் கையெழுத்தைப் பதிக்க ~~~~ எனத் தச்சிடுங்கள். உங்கள் பயனர் பெயர், நேரம் ஆகியன பதியப்படும்.--Kanags \உரையாடுக 00:38, 16 சூன் 2013 (UTC)

படிமங்கள்[தொகு]

வணக்கம் ரசாக், நீங்கள் தரவேற்றும் படிமங்களை உரிய பொருத்தமான பெயர்களுடன் தரவேற்றுங்கள். எடுத்துக்காட்டாக, SC03988.JPG என்ற படிமத்திற்கு கல்முனைக்குடி பிரதான வீதி.JPG அல்லது Kalmunaikudi Main Street.JPG என்பது போலப் பெயரிடலாம். அதன் பின்னர் நீங்கள் விக்கிப்பீடியாவுக்குத் தரவேற்ரலாம். கட்டுரைகளில் உங்கள் படிமத்தை இணைப்பதற்கு பொருத்தமான இடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து [[படிமம்:கல்முனைக்குடி பிரதான வீதி.JPG|right|thumb|300px|கல்முனைக்குடி பிரதான வீதி]] என்றவாறு எழுதிச் சேமியுங்கள். நீங்கள் தரவேற்றும் படங்கள் உங்கள் சொந்தப் படங்களா? அவ்வாறெனின், படிமத்தைத் தரவேற்றும் போது {{PD-self}} என எழுதித் தரவேற்றுங்கள். மேலும், இப்படிமங்களை விக்கியின் பொதுவகத்தில் தரவேற்றுவது வரவேற்கத்தக்கது. உங்கள் படிமங்களை விக்கியின் வேறு திட்டங்களிலும் (உ+ம்: ஆங்கில விக்கிக் கட்டுரைகளில்) பயன்படுத்த முடியும்.--Kanags \உரையாடுக 03:25, 23 சூன் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:13, 27 அக்டோபர் 2013 (UTC)

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், அப்துல் றஸ்ஸாக்!

நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--║▌│█│║▌║││█║▌║✍♏ϴ♓ѦℳℰРッ ЇⒿѦℤẐ ☪© (பேச்சு) 05:59, 26 மார்ச் 2014 (UTC)

பதிப்புரிமை மீறல் - படிமம்[தொகு]

Anti-copyright.svg

வணக்கம், அப்துல் றஸ்ஸாக்!

தமிழ் விக்கிப்பீடியாவில் படிமங்களைப் பதிவேற்ற முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் பதிவேற்றிய படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற இயலாது. நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntonTalk 16:39, 1 நவம்பர் 2014 (UTC)

விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]

அனைவரும் வருக

வணக்கம் அப்துல் றஸ்ஸாக்!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--Mohamed ijazz (பேச்சு) 10:22, 30 திசம்பர் 2014 (UTC)

பதிப்புரிமை மீறல்[தொகு]

Anti-copyright.svg

வணக்கம், அப்துல் றஸ்ஸாக்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 18:46, 25 செப்டம்பர் 2015 (UTC)

பதிப்புரிமை மீறல் - படிமம்[தொகு]

Anti-copyright.svg

வணக்கம், அப்துல் றஸ்ஸாக்!

தமிழ் விக்கிப்பீடியாவில் படிமங்களைப் பதிவேற்ற முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் பதிவேற்றிய படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற இயலாது. நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 12:52, 10 நவம்பர் 2015 (UTC)

தயவு செய்து இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற வேண்டாம். இவ்வாறு செய்வவது பதிப்புரிமை மீறலாகும். பல படிமங்கள் பொதுவகத்தில் உள்ளன. விளங்காவிட்டால் விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் மூலம் உதவி பெறலாம். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம். நன்றி! --AntanO 18:17, 10 நவம்பர் 2015 (UTC)


2015.11.11 அன்பின் அன்டன்,

விக்கிப்பீடியா தளத்திலுள்ள படிமங்களைப் பதிவேற்றலாம்தானே. விக்கிப்பீடியா தளத்திலுள்ள படிமங்களை எப்படிப் பார்வையிடுவது என்பதைச் சொல்லித் தாருங்கள்.

அன்புடன், அப்துல் றஸ்ஸாக்

'விக்கிமீடியா பொதுவகத்தில் [1] உள்ள படிமங்களை மீண்டும் இங்கு விக்கிப்பீடியாவில் தரவேற்றத் தேவையில்லை. இணைப்பை மட்டும் கொடுத்தால் போதும். உ+ம்: அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு கட்டுரையில் அம்பாறை மாவட்ட வரைபடம் அவ்வாறே இணைக்கப்பட்டுள்ளது. அது போன்று இணைப்பைக் கொடுங்கள். உங்களது சொந்தப் படிமங்களைத் தரவேற்றுவதற்கு விக்கிமீடியா தளத்தைப் பயன்படுத்துங்கள். பின்னர் இங்குள்ள கட்டுரையில் இணையுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 20:54, 10 நவம்பர் 2015 (UTC)

உங்களைப் பற்றியவை[தொகு]

உங்களைப் பற்றிய குறிப்புகளை உங்கள் பயனர் பக்கத்தில் தான் தர வேண்டும். தனி கட்டுரையாக அல்ல. பொது விதியின் கீழ் நீக்கப்பட்டிருக்கிறது. அக்குறிப்புகளை உங்கள் பெயரிலுள்ள பயனர் பக்கத்திற்கு மாற்றியுள்ளேன்.--உழவன் (உரை) 16:41, 23 நவம்பர் 2015 (UTC)


அப்துல் றஸ்ஸாக், 2015.12.09

வணக்கம் சிறிதரன்,

தமிழ் விக்கிபீடியாவில் பதிவேற்றம் செய்யப்பட்ட படிமங்களை இலகுவாகப் பார்வையிடுவது எப்படி? இது என்னால் ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விதான் என்றாலும் பொறுமையுடன் சொல்லித் தாருங்கள். Please.

அன்புடன்,

அப்துல் றஸ்ஸாக் உங்களுக்குத் தேவைப்படும் போது, கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்.

  1. ஒருவருக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்பினால், முதலில் அவரின் பயனர் பெயரை நகலெடுக்க வேண்டும். பிறகு, {{ping|பயனர்பெயர்}} என அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, எனக்குக் கூற வேண்டுமென்றால், இப்படி இருக்க வேண்டும். @Info-farmer:
  2. விக்கிப்பீடியாவில் உள்ள ஒரு படத்தை மட்டும் பார்க்க, முதலில் அதனைச்சொடுக்கவும். இப்பொழுது படம் மட்டும் வரும். அப்படித்தின் கீழே, வலப்பக்கம் மேலதிக விபரங்கள் என்று நீல நிறத்தில் இருக்கும். மேலதிக விபரங்கள் என்ற நீலநிற அறிவிப்புக்கு முன் பொதுவகத்தின் இலச்சினைப் படம் இருப்பதைக் கவனிக்கவும். அவ்வாறு இருந்தால், அதனை அழுத்துங்கள். இப்பொழுது அக்கோப்பு பொதுவகத்தின் பகுதிக்குச் செல்லும். அப்படி சென்றால், அக்கோப்பின் பெயரை எடுத்து, விக்கிமீடியத் திட்டங்கள் எல்லா மொழிகளிலும் பயன்படுத்தலாம். பொதுவகத்தில் ஒரு கோப்பு இல்லையென்றால், அப்பொதுவக இலச்சினைத் தோன்றாது. இவ்வாறு ஆங்கில விக்கிக்கட்டுரையில் இருக்கும் படங்களை இங்கு தெரிய வைக்கலாம். எடுத்துக்காட்டாக, ஆங்கில விக்கிப்பீடியாவின் கட்டுரை ஒன்றின் படத்தின் மீது சொடுக்கவும். இப்பொழுது படம் மட்டும் வந்திருக்கும். அப்படத்தில் பொதுவக இலச்சினை உள்ளதா என கவனிக்கவும். இருந்தால், அப்படத்தின் கோப்புப் பெயரை நகலெடுக்கவும். பிறகு தமிழ் கட்டுரைக்கு வந்து, படம் இட வேண்டிய இடத்தில் சுட்டியைச் சொடுக்கி, கீழுள்ள விக்கிநிரல்கள் என்பதில் [[|240px|{{PAGENAME}}|thumb|right]]என்ற குறியீடுகளைச் சொடுக்கவும். அது தற்போது கட்டுரையில் வந்திருக்கும். இறுதியாக, உங்கள் விசைப்பலகையின் கன்ட்ரோல் என்பதையும் வி என்பதையும் அழுத்துங்கள். இப்பொழுது படநிரலுக்குள், படகோப்பின் பெயர் வந்திருக்கும். இப்பொழுது முன்தோற்றம் காணுங்கள் படம் கட்டுரையில் வந்திருக்கும். தேவையெனில், அப்படமுள்ள பக்கத்தைச் சேமிக்கவும்.--உழவன் (உரை) 03:17, 9 திசம்பர் 2015 (UTC)


@Info-farmer: அவர்களுக்கு,

நன்றிகள் ஆயிரம்.

அப்துல் றஸ்ஸாக்

01.30, 2015.12.10

01.20, 2015.12.29

வணக்கம், சிறிதரன்.

விக்கிகோப்பை போட்டியில் பங்குபற்றுவதற்காக எனது பெயரை இன்று பதிவு செய்தேன். ஆனால் எனது கணக்கு இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்று உரையாடல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை எவ்வாறு பதிவு செய்வது என்பதை எனக்கு அறிவித்தால் நன்றாக இருக்கும்.

அன்புடன்,

அப்துல் றஸ்ஸாக்.

உங்கள் பெயர் பதிவாகியுள்ளது. விக்கியில் உங்கள் பயனர் பெயர்: அப்துல் றஸ்ஸாக். Abdul Razaak அல்ல.--Kanags \உரையாடுக 08:44, 29 திசம்பர் 2015 (UTC)

நல்லூர் இராசதானி[தொகு]

நல்லூர் இராசதானி பற்றிய கட்டுரைக்கு நன்றி. முதற்கண் இக்கட்டுரை விக்கிநடையில் எழுதப்படவில்லை. பொலன்னறுவை இராச்சியம் என்ற கட்டுரையைப் பாருங்கள். இது போன்றே விக்கி கட்டுரை ஒன்று எழுதப்பட வேண்டும். வரலாற்றுக் கட்டுரைகள் எழுதப்படும் போது தரப்படும் ஒவ்வொரு தகவலுக்கும் மேற்கோள்கள் சுட்டிக் காட்டப்பட வேண்டும். வலைப்பதிவு போன்று எழுதக் கூடாது. அத்துடன், கட்டுரையின் பல பகுதிகள் சில வலைப்பதிவுகளில் இருந்து பிரதி பண்ணப்பட்டுள்ளது. உ+ம்: இப்பதிவு. இக்கட்டுரை நீக்கப்பட வேண்டி வரலாம்.--Kanags \உரையாடுக 03:42, 2 சனவரி 2016 (UTC)

யாழ்ப்பாண அரசுக்கும் நல்லூர் இராசதானிக்கும் என்ன வேறுபாடு. யாழ்ப்பாண இராசதானி என்ற வழிமாற்றும் உள்ளது. அவ்வாறே கோட்டை, கண்டி ஆகிய அரசுகளுக்கு இராசதாணிகள் என்ற வழிமற்றுகள் உள்ளன. இதனை வழிமாற்றாகக் கொள்ளலாம். --AntanO 03:58, 2 சனவரி 2016 (UTC)

உஹத் யுத்தம்[தொகு]

வணக்கம், கட்டுரையின் தொடக்கத்தில் == உஹத் யுத்தம் == என்றவாறு தலைப்பை இடவேண்டிய தேவையில்லை. உஹத் யுத்தம் பற்றி ஆங்கில அல்லது அரபு விக்கியில் கட்டுரை இருந்தால், விக்கித்தரவுகளில் இணைப்பை ஏற்படுத்தி உதவும்படி வேண்டுகின்றேன். நன்றி. --மதனாகரன் (பேச்சு) 15:07, 2 சனவரி 2016 (UTC)

Yes check.svgY ஆயிற்று.--Kanags \உரையாடுக 22:34, 2 சனவரி 2016 (UTC)
கட்டுரையில் நீங்கள் தந்துள்ள முகம்மது - மார்டின் லிங்ஸ் என்ற மேற்கோள் பற்றி மேலும் தகவல்களைத் தாருங்கள். நூலின் பெயர் (ஆங்கில நூல் என்றால் ஆங்கிலத்தில் பெயர் இருக்க வேண்டும்), நூலாசிரியரின் பெயர், வெளியிடப்பட்ட ஆண்டு, வெளியீட்டாளர், நாடு போன்ற தகவல்களையும் தாருங்கள்.--Kanags \உரையாடுக 22:58, 2 சனவரி 2016 (UTC)

பதக்கம்[தொகு]

Wiki Lei Barnstar Hires.png அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தங்களின் சிறந்த விக்கியார்வம் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள். -- மாதவன்  ( பேச்சு  ) 16:08, 6 சனவரி 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 17:53, 6 சனவரி 2016 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 14:42, 12 சனவரி 2016 (UTC)
Nandri (நன்றி).png நன்றி
{{{1}}}


பயனர்:அப்துல் றஸ்ஸாக் 14.02.2016

வரலேறு[தொகு]

திருகோணமலை மாவட்ட தொல்லியல் வரலாறு என்ற கட்டுரையில் முடிந்த அளவு மேற்கோள்களைக் கொடுத்து உதவுங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 13:08, 12 சனவரி 2016 (UTC)

விக்கிக்கோப்பை[தொகு]

விக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன்  ( பேச்சு ) 07:42, 3 ஏப்ரல் 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்[தொகு]

2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இந்தியா பாலாஜீ, இலங்கை மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்[தொகு]

விக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016

MediaWiki message delivery (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016[தொகு]

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு[தொகு]

Ta-Wiki-Marathon-2016.png

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்[தொகு]

2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இலங்கை மாதவன், இந்தியா உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2017[தொகு]

2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!...


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:35, 9 திசம்பர் 2016 (UTC)