விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் விக்கியாக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படைப்புகள்

பணிகள்

  • நன்றி செலுத்தல்
  • உரிமத்தை உறுதி செய்தல்
  • Attribution/மீதரவுகளை உருவாக்கல்
  • விக்கி மூலத்தில் கட்டுரைகள் பதிவேற்றம்
  • தட்டச்சு
  • மெய்ப்புப் பார்த்தல்
  • விக்கிப்பீடியாவில் பதிவேற்றம்
  • நகர்த்தல்
  • இற்றை செய்தல்
  • படங்களைப் பிரித்தெடுத்தல் (இச் செயற்பாடு கட்டுரைகள் பதிவேற்ற செயற்பாடோடு சமார்ந்தரமாக முன்னெடுக்கப்படக் கூடியது)
  • விக்கிப் பொதுமத்தில் பதிவேற்றல்
  • விக்கிநூல்களி, விக்கிப்பீடியாவில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படங்களைச் சேர்த்தல்

--Natkeeran (பேச்சு) 17:32, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]


தமிழ்க் கலைக்களஞ்சியம் கட்டுரைப் பதிவேற்றும் திட்ட மாதிரி
தலைப்பு பதிவேற்றல் (வி.மூ) மெய்ப்புப் பார்த்தல் (வி.மூ) நகர்த்தல்/ இணைத்தல் (வி.பீ) இற்றை செய்தல் (வி.பீ) படங்கள் இணைத்தல் (வி.மூ & வி.பீ) பங்களிப்பாளர் மெய்ப்புப் பார்ப்பாளர் இலக்குத் திகதி
அக்கதீபிகை

பகுப்பிடல் குறித்த ஐயம்[தொகு]

நான் ஏற்கனவே பல கட்டுரைகளை இதிலிருந்து எடுத்து, மேம்படுத்தி இங்கு அமைத்துள்ளேன். காண்க: எருமை நாக்கு, பசையெடுப்பான் குருவி அவற்றில் எத்தகைய பகுப்பினை இணைக்கலாம். சிலவற்றை மேம்படுத்தாமல், அப்படியே பதிவேற்றம் செய்துள்ளேன். பகுப்பு: தமிழ் வளர்ச்சிக் கழகம் என்பதைத் தாய் பகுப்பாகவும், அதில் பகுப்பு: தமிழ் வளர்ச்சிக் கழகம்-மேம்படுத்தியவை என்ற துணைபகுப்பினையும் அமைத்துக் கொள்ளலாமா?--≈ உழவன் ( கூறுக ) 17:46, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இதை நாம் முறைபடி செய்யவேண்டும். இல்லை, அப்படி வராது. முதலில் விக்கிப் மூலத்தில் இணைந்து, இங்கு மேம்படுத்தப்பட்டவை இணைக்கப்படவேண்டும். எப்படி attribute செய்வது என்று விரிந்து அலசி முடிவு எடுக்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 17:58, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
சரி. அலசுவோம்.--≈ உழவன் ( கூறுக ) 18:02, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நிறைவேற்றுவற்கான வழிகள்[தொகு]

நற்கீரன் பரிந்துரை[தொகு]

தமிழ்க் கலைக்களஞ்சிய உள்ளடக்கத்தை பதிவேற்ற நாம் பின்வரும் பணிகள் செய்ய வேண்டும்:

  • கட்டுரைகளைத் தட்டச்சு செய்தல்
  • விக்கி மூலத்தில் பதிவேற்றல், விக்கியாக்கம் செய்தல்
  • மெய்ப்புப்பார்த்தல்
  • விக்கிப்பீடியாவிற்கு நகர்த்தல்/இணைத்தல்
  • விக்கிப்பீடியாவில் கட்டுரையை இற்றை செய்தல்
  • தொடர்புடையை படங்களை விக்கிமூலத்திலும் விக்கிப்பீடியாவிலும் சேர்த்தல்

பயனர்கள் நிறைவேற்றுவது

கட்டுரைப் போட்டி போன்று அடுத்த ஆண்டு முழுக்க பதிவேற்றலை ஒரு போட்டியாக முன்னெடுக்கலாம். புதிய கட்டுரைகள் எழுதப் பயப்படும் பயனர்களுக்கு இது ஒரு நல்ல பணியாக அமையும். பள்ளி மாணவர்களையும் இச் செயற்பாட்டில் ஈடுபடுத்தலாம். இது வழி, முற்றிலும் தன்னார்வலர்களைக் கொண்டு முன்நகர்த்தப்படும். இதனூடாக விக்கிச் சமூக ஊடாட்டம் அதிகரிக்கலாம். ஆனால் இந்த வழியின் ஒரு பெரிய சிக்கல், இது நெடுங்காலம் எடுக்கலாம் என்பது. மேலும் இச் செயற்திட்டம் ஊக்கமான தொடக்கத்தின் பின் தொய்வுநிலைக்கு சென்று செயலிழந்து போய்விடும் இடர் (risk) உண்டு.

ஊழியர்களைக் கொண்டு நிறைவேற்றுவது

இந்திய விக்கிக் கிளை, விக்கிமீடிய நிறுவனம் அல்லது நாமாகவோ நிதி திரட்டி இந்த உள்ளடக்கத்தை தட்டச்சு செய்தல், பதிவேற்றல் பணியினை நிறைவேற்றலாம். பதிவேற்றல் பணி இந்த வழியில் மிக விரைவாக நிறைவேறும். ஆனால் ஊழியர்களைப் பயன்படுத்திச் செய்வது விக்கிச் சமூகத்திற்கு இது ஓர் தவறான முன் எடுத்துக்காட்டாக அமைவதோடு, தற்போது பங்களிக்கும் பயனர்களின் ஊக்கத்தையும் குறைக்கக் கூடும்.

பணிகள், நிறைவேற்றுவது தொடர்பான வழிகள் தொடர்பான உங்கள் கருத்துக்களைக் பகிருங்கள். --Natkeeran (பேச்சு) 23:42, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நற்கீரன், மேலே நீங்கள் குறிப்பிட்ட வழிகளிலேயே செய்யலாம் என்றே நினைக்கின்றேன். விக்கிமீடியா நிறுவனத்தில் நிதியுதவி பெற்றோ, தனியார்களிடம் நிதி திரட்டியோ, தட்டச்சு செய்வதற்கு மட்டும் தக்கவர்களைக் கொண்டு விக்கி மூலத்தில் ஏற்றலாம். மெய்ப்புப் பார்ப்பதை நாம் செய்யலாம். இதில் மொழிபெயர்ப்பு போன்ற அறிவு உழைப்பு ஏதும் இராது, ஆகவே சிக்கல் ஏதும் இராது என்று நினைக்கின்றேன். இவற்றில் இருந்து விக்கிப்பீடியாவுக்குக் கட்டுரைகள் எடுத்துப் பயன்படுத்தும்பொழுது (சுருக்கியோ விரித்தோ இற்றைப்படுத்திப் பயன்படுத்தும் பொழுது), நம் தொகுப்புப்பணி, விக்கியாக்கப் பணி ஆகியவை இருக்கும். படங்களைத் தக்கவாறு அழகூட்டியோ விரிவுபடுத்தியோ பயன்படுத்தலாம். எப்படியாயினும், திட்டமிட்டு கூடிய விரைவில் முடிக்கவும், முன்னேற்றத்தை அளந்து ஒழுங்குபடுத்திக்கொண்டு செல்லுதலும் வேண்டும். சிறப்பாக செய்தலும் வேண்டும். தட்டச்சு செய்வதற்கு இந்தியாவிலும் இலங்கையிலும், பிற நாடுகளிலும் இருந்து தன்னார்வலர்களாகவோ, பணியமர்தியவர்களாகவோ பலரை ஈடுபடுத்தி விரைவாக முடிக்க வேண்டும். ஆனால் தக்க ஒருங்கிணைப்பாளர்கள் தேவைப்படும். மொத்தம் 20 தொகுதிகள் உள்ளன. கலைக்களஞ்சித்தின் 10 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியும் ஏறத்தாழ 1000 பக்கங்கள் கொண்டவை. குழந்தைக் கலைக்களஞ்சியம் சற்று குறைவு. 10 பேர் ஒரு நாளைக்கு ஒரு பக்கம் எனும் வீதம் தட்டசு செய்தால் 100 நாள்கள் ஆகும் ஒரு தொகுதி முடிக்க. இதைச் செயற்படுத்த சில வழிகள் உள்ளன என்றாலும், பயனர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தால், அதனையும் உள்வாங்கி செயற்படுத்தலாம். இதனைச் சிறப்பாகச் செய்தால், இன்னும் பல ஆக்கங்கள் நமக்கு (உலகத்தாருக்கு)க் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. --செல்வா (பேச்சு) 03:54, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

எழுத்துணரி பயன்பாடு[தொகு]

அக்களஞ்சியத்தின் அச்சு நகல் வைத்திருந்தால் PONVIZHI TAMIL OCR மென்பொருள் மூலம் ஒருங்குறியாக மாற்ற முடியுமா என்று முயன்று பார்க்கலாம். இந்த மென்பொருளுக்குத் தோதான விதத்தில் அச்சுப் பக்கங்களை வருடிக் கொள்ள முடிந்தால் தட்டச்சுப் பணியைக் குறைக்கலாம்.--நீச்சல்காரன் (பேச்சு) 06:34, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
சில வருடங்களுக்கு முன், பழையபதிப்பு 'பொன்விழி எழுத்துணரி' மூலம் முயன்றேன். பலனில்லை. கணினி வழியே ஒரு நூலைப் பதிப்பு செய்திருந்தால் மட்டுமே கைகொடுக்கும். புதிய பதிப்பும் அப்படிதான் இருக்கும் என எண்ணுகிறேன். நமக்குத் தரப்படவுள்ள கலைக்களஞ்சிய படக்கோப்பானது, அச்சு இயந்திர பதிப்பு. --≈ உழவன் ( கூறுக ) 07:29, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

பவுலின் பரிந்துரைகள்[தொகு]

ஒருசில நூல்களின் தொகுப்பாசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் கீழ்வரும் சிந்தனைகளையும் பரிந்துரைகளையும் முன்வைக்கின்றேன்.

  1. "கலைக்களஞ்சியத் திட்டம்" என்பது ஒரு மிகப் பெரிய பணி. அதைச் செயலாக்கிட பலரின் ஒத்துழைப்பு தேவை. ஒரு பொருத்தமான அமைப்பு முறையும் தேவை.
  2. இந்த அளவிலான பணி நிகழும்போது, இப்போது நடைபெற்றுவருகின்ற இடுகை, துப்புரவு, விக்கியாக்கம் போன்ற பல்வேறு பணிகள் முடங்கிவிடாமலும் இருக்க வேண்டும்.
  3. இரு கலைக்களஞ்சியங்களும் ஏற்கெனவே இணையத்தளத்தில் "தமிழ் இணையக் கல்விக்கழக" (TVA) இணைப்பில் உள்ளது தட்டச்சு செய்வோருக்கு மிகப் பெரிய உதவி.
  4. நிதி உதவி தேவைப்படும். விக்கி வழியாகவோ, புரவலர்கள் வழியாகவோ அந்த உதவி பெறப்பட வேண்டும்.
  5. விக்கியின் பயனர்களைக் கொண்டு மட்டுமே இப்பணியை விரைவாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றல் கடினம் என்பதால் உழைப்பாளர்களைப் பணியமர்த்தும் தேவை எழும். இது ஒரு மோசமான முன்னுதாரணமாக அமையும் என்று நாம் அஞ்ச வேண்டியதில்லை. பிற்காலத்தில் இதுபோன்ற பிறிதொரு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றால் கலைக்களஞ்சியத் திட்டத்திலிருந்து பெற்ற பட்டறிவின் அடிப்படையில் அத்திட்டத்தை முன்னெடுக்கலாம்.
  6. க.தி. ("கலைக்களஞ்சியத் திட்டம்") யின் அமைப்புமுறை இவ்வாறு உருவாக்கப்படலாம். க.தி.யை நடைமுறைப்படுத்தும் இறுதிப்பொறுப்பாளர் "பொதுப் பதிப்பாளர்" (General Editor). அவரோடு இணைந்து செயல்படுவோர் "சிறப்புப் பதிப்பாளர்கள்" (Special Editors) இருவர். இவர்கள் முறையே கலைக்களஞ்சியம் மற்றும் சிறுவர் கலைக்களஞ்சியம் ஆகியவற்றைப் பதிப்பதற்குப் பொறுப்பேற்பர். மேற்கூறிய மூவரும் இணைந்து செயலாற்றுவர். இதுவே "பதிப்பாளர் குழு" (Editorial Board). இக்குழுவில் தேவைக்கு ஏற்ப வேறு சிலரையும் உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
  7. க.தி.யைச் செயல்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பக் கூறுகளையும் அடையாளம் காண வேண்டும். அதற்கென ஒருவரோ பலரோ பொறுப்பேற்கலாம். இவர்கள் படிமங்களைத் தரவேற்றும் பணியையும் கவனிக்க வேண்டும்.
  8. க.தி.யைத் தட்டச்சு செய்து இடுகை செய்வதற்கு உழைப்பாளர் தேவை. களஞ்சியங்களின் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 1000 பக்கங்கள் என்றால் தொகுதி ஒவ்வொன்றிற்கும், பக்கத்துக்கு ரூ. 10 என்று கொண்டு ஊதியம் வழங்கப்படலாம் (இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே!!). இடுகை செய்வோர் மிகக் கவனமாக அவ்வேலையைச் செய்யவேண்டும் என்பது யாவரும் அறிந்ததே. எனவே, முதல் 10 பக்கங்கள் எவ்வாறு இடுகை செய்யப்படுகின்றன என்பதை கவனித்து, அதன் பிறகு படிப்படியாக அவருடைய பணியை ஏற்கலாம். மிகவும் மோசமாக இடுகை செய்யப்பட்டால் அப்பணியை வேறொருவரிடம் ஒப்படைக்கலாம்.
  9. மெய்ப்புப் பார்க்கும் பணி மிக, மிக முக்கியமானது. இங்கே விக்கி பயனர்களின் இலவச உதவியை நாடலாம்.
  10. க.தி. செயலாக்குவதை எங்கிருந்து தொடங்கலாம் என்னும் கேள்விக்கு, "பதிப்பாளர் குழுவை" அமைப்பதிலிருந்து தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.
  11. மேலே கூறிய கருத்துகளில் சிலவோ பலவோ நடைமுறைக்கு ஒவ்வாதனவாக இருக்கலாம். எனவே விரிவான கலந்துரையாடல் நிகழும் என்று எதிர்பார்க்கிறேன்.
  12. க.தி. தமிழ் விக்கியின் வளர்ச்சியில் ஒரு முக்கிய கட்டம். வாழ்த்துகள்!--பவுல்-Paul (பேச்சு) 14:29, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--இரவி (பேச்சு) 15:52, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]


முதலில் பொதுக் களஞ்சியத்தையும் பின்னர் குழந்தைகள் களஞ்சியத்தையும் பதிவேற்றுவதே சாத்தியம். அந்த வகையில் எமக்கு ஒர் ஒருங்கிணைப்பாளரே தேவைப்படுகிறார். பதிப்பாளர் என்னும் போது அவருக்கு உள்ளடக்கத்தகைப் பற்றி அறிவு தேவை. இங்கு தட்டச்சு, மெய்ப்புப் பார்ப்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் project management role இருப்பதாகவே கருதுகிறேன். பிறரின் கருத்துக்களையும் அறியலாம். --Natkeeran (பேச்சு) 20:39, 4 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இரவியின் பரிந்துரை[தொகு]

தமிழ் இணைய கல்விக்கழகம் ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நிறுவன ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது. எனவே, அவர்களது வளாகத்தையே களமாக கொண்டு இப்பணியை நிறைவேற்றலாம். அவர்களின் கணினி, வருடி, அலுவலகம் முதலிய வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இது தொடர்பாக ஏற்கனவே அவர்களுக்கு உள்ள தொழில்நுட்ப அறிவையும் பெற்றுக் கொள்ள முடியும். இப்பணியைக் காசு கொடுத்துச் செய்வதால் பங்களிப்பாளர் சமூகத்தின் ஊக்கம் குன்றுமா என்று அஞ்சத் தேவை இல்லை. இப்பணியை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

  • முதல் பகுதி - தட்டச்சு, மெய்ப்புப் பார்த்தல், படிமங்களை மீண்டும் தற்காலத்துக்கு ஏற்ப கணினியில் வரைதல், scanner மூலம் மூல ஆக்கத்தைப் படியெடுத்தல் - இதனை முற்று முழுதாக பணிக்கமர்த்திய ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை வரவேற்றுத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைத் தமிழ் விக்கிப்பீடியா தனியாகவோ தமிழ் இணைய கல்விக் கழகத்துடன் இணைந்தோ மேற்கொள்ளலாம். இந்ந நிலை முடியும் தருவாயில் அனைத்து ஆக்கங்களும் வலையேற்றுவதற்குத் தயாராக ஒரு DVDயில் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
  • இரண்டாம் பகுதி - மேற்கண்டவாறு DVDயில் உள்ள ஆக்கத்தை விக்கிமூலத்திலும் விக்கிப்பீடியாவிலும் ஏற்றும் பணி. இதனை நாம் தன்னார்வமாக சிறுகச் சிறுகச் செய்யலாம். எனவே, நேரடியாக விக்கிமீடியா திட்டங்களில் செய்யும் பணி தன்னார்வமாக இருக்கும் செயற்பாடு உறுதிப்படுத்தப்படும்.

முற்று முழுதாக அனைத்துப் பணிகளையும் தன்னார்வமாகத் தான் செய்வோம் என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது மட்டுமன்று அதே நேரத்தில் வேறு பல்வேறு ஆக்கப்பணிகளைச் செய்யக்கூடியோரின் திறன்களை வீணாக்குவதும் ஆகும். இது தொடர்பாக மதுரைத் திட்டம், நூலகம் திட்டம், மலையாள விக்கிமூலக் குழு, கொங்கனி விக்கிமூலக் குழு ஆகியோரின் கருத்தைக்களைக் கோரலாம். --இரவி (பேச்சு) 15:52, 3 நவம்பர் 2013 (UTC) 👍 விருப்பம்--பழ.இராஜ்குமார் (பேச்சு) 18:12, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இது ஏற்கனவே மின்வருடப்பட்டுள்ளதுத்தானே. ஏன் மீண்டும் மின்வருட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துவீர்களா? --Natkeeran (பேச்சு) 21:57, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
குழந்தைகள் கலைக்களஞ்சியம் இணையத்தில் இருப்பதை மட்டுமே முன்பு கண்டிருந்தேன். பொதுவான கலைக்களஞ்சியமும் அவ்வாறு கிடைப்பதை இப்பொழுதே கண்டேன். இவ்விரண்டு நூல்களின் அண்மைய பதிப்புகள் தாம் இணையத்தில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வருடிய படிமங்களின் மூலக் கோப்பினைப் பெற்று அவை சீர்தரமாக உள்ளனவா என்று பார்க்க வேண்டும். இது தொடர்பாக நூலகம் திட்டநுட்பக் குழு, மலையாள விக்கிமூலத்தில் பணியாற்றி சிச்சு ஆகியோரின் கருத்துகளைக் கோரலாம். போதிய தரத்தில் இல்லையென்றால் மீண்டும் ஒரு முறை வருடுவதில் தவறில்லை.--இரவி (பேச்சு) 04:26, 4 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஆமாம். அவை அண்மைய பதிப்பா என்று உறுதிப்படுத்த வேண்டும். மூலக் கோப்பினைப் பெற்று அவை சீர்தரமாக உள்ளனவா என்றும் உறுதிசெய்யலாம். தற்போது இணையத்தில் உள்ள பதிப்பு இவ்வாறே என்று கருதுகிறேன். --Natkeeran (பேச்சு) 14:11, 4 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

மயூரநாதனின் கருத்து[தொகு]

  • கலைக்களஞ்சியத் தொகுதிகள் முழுவதையும் தன்னார்வலர்களைக் கொண்டு தட்டச்சுச் செய்வது நடைமுறைச் சாத்தியமாக இருக்காது. இது பல ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்டிருப்பதனால் தன்னார்வலர்களைக் கொண்டு குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிக்க முடியாது என்பது ஒரு புறம் இருக்கத் தன்னார்வலர்களைக் கொண்டு செய்யும்போது பிழைகள் கூடுதலாக ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. இது மெய்ப்புப் பார்த்தல் போன்ற வேலைகளையும் அதிகப்படுத்தும். இதனால், அனுபவமுள்ள, தொழில்முறைத் தட்டச்சாளர்களைக் கொண்டு தட்டச்சிடுவதே நல்லது. நற்கீரன் குறிப்பிட்ட ஏனைய பணிகளைத் தன்னார்வலர்கள் செய்யலாம். ஆயிரக்கணக்கான பக்கங்களை மெய்ப்புப்பார்த்தல் போன்றவையும் இலகுவான விடயங்கள் அல்ல. எனவே என்னென்ன வேலைகளைத் தன்னார்வலர்கள் செய்யலாம் என்பதை தீர ஆலோசித்துத்தான் செய்யவேண்டும். சில வேலைகளைத் துரிதப்படுத்துவதற்கு நமது நுட்பக் குழுவினரால் ஏதாவது செய்ய முடியுமா என்றும் பார்க்கலாம்.
  • இந்தப் பணிகள் நிறைவு பெறப் பல மாதங்கள் ஆகலாம். எனவே, பவுல் குறிப்பிட்டதுபோல அக்காலத்தில் வழமையான விக்கிப்பணிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமலும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
  • இந்தக் கலைக்களஞ்சியத் தொகுதிகளை விக்கிப்பீடியாவுக்குள் கொண்டுவருவதற்கு இப்போது அவசரப்படக்கூடாது. கட்டுரைகளை இற்றைப்படுத்துதல் சுலபமான வேலை அல்ல. இதை இரண்டாம் கட்டமாக வைத்துக்கொள்வது நல்லது. இதைப் படிப்படியாக நீண்ட காலம் எடுத்தும் செய்யலாம். பேராசைப்பட்டு அளவுக்குமேல் கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் பதிவேற்றிவிட்டுப் பின்னர் இற்றைப்படுத்தலாம் என்று எண்ணுவது உசிதமானது அல்ல.
  • உடனடியாக இவற்றை விக்கிமூலத்தில் ஏற்றுவதையே இலக்காகக் கொண்டு செயற்படுவது நல்லது. விக்கிமூலத்தில் பதிவேற்றும்போது பெரிய அளவில் விக்கியாக்கம் எதுவும் செய்யவேண்டியது இல்லை. விக்கிமூலத்தில் பதிவேற்றுவதற்கு படங்களை மீண்டும் வரையவேண்டியதும் இல்லை. அப்படியே இருக்கும் படங்களை வருடிச் சேர்ப்பதே முறை.
  • விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமான கட்டுரைகளைக் கொண்டுவரும்போது மீள வரையவேண்டிய வரைபடங்களைப் புதிதாக வரைந்து கொள்ளலாம். இதைத் தன்னார்வலர்களே செய்யலாம்.
  • முக்கியமாக இது தொடர்பான எல்லாச் செயற்பாடுகளையும் விக்கியில் கலந்துரையாடிச் செய்வதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம். அத்துடன். எல்லோரும் பணிகளைப் பகிர்ந்து கொண்டு செய்யவேண்டும். ஒரு இடத்திலேயே முழு வேலைகளையும் செய்யவேண்டும் என்பதில்லை. சென்னை, கோயம்புத்தூர், சேலம், இலங்கை, .... என எங்கெங்கே அக்கறை எடுத்து இயங்கக்கூடிய விக்கிப்பீடியர் குழுக்களை ஏற்படுத்த முடியுமோ அந்தந்த இடங்களிலேயே வேலையைப் பிரித்துக்கொண்டு செய்யலாம்.
  • ஓரிருவரில் பெருமளவு சுமையைச் சுமத்தக்கூடாது. இது மேற்படி சுமையைச் சுமப்பவர்களுக்கு மட்டுமன்றி, நீண்டகால நோக்கில் தமிழ் விக்கிக்கும் பாதகமானது.

---மயூரநாதன் (பேச்சு) 18:17, 4 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இற்றைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள், இற்றைப்படுத்த தேவை இல்லாத கட்டுரைகள் என்ற இரு தொகுதிகள் இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். --Natkeeran (பேச்சு) 19:52, 4 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
இற்றைப்படுத்தத் தேவையில்லாத கட்டுரைகள் இல்லை என்று சொல்லவில்லை. இருக்கின்றன. ஆனால், எல்லாக் கட்டுரைகளையும் கவனமாகப் பார்த்துத்தான் இது பற்றி முடிவு எடுக்கலாம். ஏனென்றால், இற்றைப்படுத்தல் என்று பொதுவாகச் சொன்னாலும், காலங்கடந்த தகவல்கள் உள்ள கட்டுரைகளைவிட, விக்கிக்குப் பொருந்தாத நடையில் அமைந்த பகுதிகளைக் கொண்ட கட்டுரைகளும் பல உள்ளன (இசை தொடர்பான கட்டுரையைப் பார்க்கவும்).
கட்டுரைகளில் உள்ள சில படங்கள் வேறிடங்களில் இருந்து எடுக்கப்பட்டனவாகத் தெரிகிறது. இவற்றில் காப்புரிமை நிலை குறித்தும் அறிய வேண்டும். காப்புரிமைப் பிரச்சினை இல்லாத படங்களை வருடியோ அல்லது வேறு வழிகளிலோ வேறாக்கிப் "பொது"வில் ஏற்றுவதையும் தனியான ஒரு பணியாகச் செய்யலாம். இதற்கெனத் தனியாக ஒரு குழு இயங்கலாம்.
---மயூரநாதன் (பேச்சு) 18:15, 5 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஆமாம். நடையில் கணிசமான வேறுபாடு உண்டு. படங்கள் ஏற்றுவதை வேறு பணியாகச் செய்யலாம் என்பது சரியே. "சில படங்கள் வேறிடங்களில் இருந்து எடுக்கப்பட்டனவாகத் தெரிகிறது." அவர்கள் குறிப்பிட்டால் தவிர இதைப் பிரித்து அறிவிஅது சிரமான பணி. --Natkeeran (பேச்சு) 18:24, 5 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
படங்களைப் பொதுவகம் ஏற்றும் பணிகளைத் தானியங்கி கொண்டு செய்யலாம். விவரமும், படமும் தவிர மற்றவைகள் எல்லாம் இப்படங்களில் பொதுவானவை அதனால் படங்களை எல்லாம் மொத்தமாக கூகிள் டிரைவ் போன்ற பொதுத்தளத்தில் இட்டு அல்லது தானியங்கி இயக்குபவரின் கணினியில் இட்டு அங்கிருந்து ஒரே சொடுக்கில் வேவ்வேறு படங்களாக பொதுவத்தில் ஏற்றிவிடலாம். --நீச்சல்காரன் (பேச்சு) 05:56, 7 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
மயூரநாதனின் கருத்துகளில் உடன்பாடு. தொகுதிக்கு ஒன்றோ இரண்டோ குழுக்களை அமைக்கலாம். அவற்றைப் பல ஊர்/நாடுகளில் இருக்கும்படி செய்யலாம். தொழில்முறைத் தட்டச்சர்களின் உதவியையும் நாடலாம். ஆனால் தட்டச்சிகளின் வழியே வந்தவர்களைக் கணினித் தட்டச்சுக்கு மாற்றுவதில் சிக்கல் இருக்கலாம். சில கல்லூரி மாணாக்கர் போன்றோருக்குப் பகுதிநேர வேலையாகக் கொடுத்துச் செய்யலாம். --இரா. செல்வராசு (பேச்சு) 12:03, 7 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள்[தொகு]

இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்வதில் சில முக்கியமான விடயங்களைக் கவனத்துக்கு எடுத்துக்கொள்வது பயனுள்ளது. இந்தப் பணியைப் பொறுத்தவரை நமது நேரடி நோக்கம் குறிப்பிட்ட இரண்டு கலைக்களஞ்சியங்களையும் விக்கித் திட்டங்களில் பதிவேற்றுவது ஆகும். இது தமிழ் மொழி மூலமான கல்வி சார்ந்த வளங்களை பரந்து பட்ட தமிழர் சமுதாயம் இலகுவாகப் பயன் கொள்ளத்தக்க வகையில் வழங்குவது என்ற அடிப்படையான நோக்கத்துக்கு உட்பட்டது. இந்த அடிப்படையான நோக்கத்தை அடைவதற்கு விக்கித் திட்டங்கள் உதவ முடியும் என்ற வகையிலேயே நம் எல்லோரும் இதில் உழைத்துவருகிறோம். எனவே, நேரடி நோக்கத்தை அடைவது என்பதற்கும் அப்பால், விக்கித் திட்டங்களுக்கு வலுவூட்டித் தாங்குவளர்ச்சி அடிப்படையில் அவற்றை முன்னோக்கி நகர்த்திச் செல்வதற்கு, இப்பணியின் ஊடாக வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதும் முக்கியமானது. தமிழ் விக்கித் திட்டங்களைப் பொறுத்தவரை பின்வரும் இலக்குகள் முக்கியமானவை.

  • தமிழ் விக்கித் திட்டங்களின் உள்ளடக்கங்களைக் கூட்டுதல்.
இது ஒரு வெளிப்படையான விடயம். தமிழ் விக்கிமூலம், தமிழ் விக்கிப்பீடியா, பொதுவகம் போன்ற விக்கித் திட்டங்களின் உள்ளடக்கங்களின் அளவில் ஒரு பாய்ச்சலை இது ஏற்படுத்தும். எனினும், இதற்கான செயற்பாடுகள், இத்திட்டங்களின் தரத்தைக் குறைக்காத வகையிலும், தமிழ் விக்கிச் சமூகத்தின் செயலூக்கத்தைக் கெடுக்காத வகையிலும் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.
  • குறித்த கலைக்களஞ்சியங்களை விக்கித் திட்டங்களில் பயன்படுத்த மேற்கொள்ளும் செயற்பாடுகளின்போது அவற்றினூடாகக் கிடைக்கக்கூடிய அறிவையும் அனுபவத்தையும் பரந்த அளவில் பயனர்கள் பெற்றுக்கொள்வதற்கு வழி வகுத்தல்.
இப்பணியில் ஈடுபடும்போது பல விடயங்களை அறிந்து கொள்வதற்கும், பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கும் வாய்ப்புக்கள் உண்டு. குறிப்பாக, பல்வேறு விக்கித் திட்டங்களிடையேயான வேறுபாடுகள், நாம் பதிவேற்ற விழையும் கலைக் களஞ்சியங்களுக்கும் விக்கி நடைக்கும் இடையிலான வேறுபாடுகள் குறித்த பிரச்சினைகள், காப்புறுதி தொடர்பான சிக்கல்கள், பல்வேறு நுட்ப நடைமுறைச் சிக்கல்கள் என்பவை இவற்றுட் சில. இவற்றைக் கூடிய அளவுக்குக் கலந்துரையாடிச் செய்வதன் மூலம் இவ்வாறான முயற்சிகளில் பயனர்கள் தமது அறிவையும் அனுபவத்தையும் கூட்டிக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனால், இத்தகைய விடயங்களைக் கவனிக்காமல் ஒதுக்கிவிடுவதையும் வேறு குறுக்கு வழிகளை நாடுவதையும் கூடியவரை தவிர்த்தல் நல்லது.
நான் முன்னரே கூறியபடி இப்பணியோடு தொடர்புடைய வேலைகளைப் பரவலாக்கிப் பல்வேறு குழுக்களின் மூலமாகச் செய்தல் இந்த இலக்கை அடைய உதவும். ஆனாலும், ஒவ்வொரு குழுவும் தாம் எதிர் நோக்கும் பிரச்சினைகளையும், பெறும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுதல் அவசியம்.
  • இந்தப் பணியில் கூடிய அளவு பயனர்கள் பங்குபெற இடமளிப்பதன் மூலம் இதன் சமூகத் தாக்கங்களில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு என்ற பெருமித உணர்வை எல்லாப் பயனர்களும் பெற உதவுதல்.
ஏதோ நான்கு ஐந்து பயனர்கள் செய்தார்கள் மற்றவர்கள் எல்லோரும் அவர்களுக்குப் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்தோம் என்று இல்லாமல், நம் ஒவ்வொருவரும் இப்பணியில் நமது பங்கைச் செலுத்தியுள்ளோம் என்ற பெருமிதம் ஒவ்வொரு பயனருக்கும் ஏற்படும் நிலையை உருவாக்கும் வகையில் இப்பணியைத் திட்டமிடுதல் அவசியம். இதனாலேயே, வெளியே கொடுத்துச் செய்விக்கும் வேலைகள், தானியங்கிகள் மூலம் செய்யும் வேலைகள், பயனர்கள் தன்னார்வலர்களாகத் தாமே செய்யும் வேலைகள் என்பவற்றுக்கிடையே ஒரு சமநிலை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். எல்லா வேலைகளையுமே வெளியாரைக் கொண்டு செய்வித்தல், அளவுக்கதிகமாகத் தானியங்கிகளைப் பயன்படுத்துதல் போன்றவை பெரும்பாலான பயனர்களின் ஈடுபாட்டைக் குறைத்துவிடக் கூடும்.
இவ்வாறு எல்லோரும் தமது பங்கு இருந்தது என்னும் உணர்வைப் பெற வழி செய்வதன் மூலம் தமிழ் விக்கித் திட்டங்களில் அவர்களது பங்களிக்கும் ஊக்கமும் குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

---மயூரநாதன் (பேச்சு) 07:45, 8 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நிலவரம் இற்றை[தொகு]

செல்வா, இத்திட்டம் குறித்த நிலவரத்தை இற்றைப்படுத்த இயலுமா? தமிழ் வளர்ச்சிக் கழகத்திடம் இருந்து முறையான கடிதம் பெறுவதற்கு நினைவூட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். கொங்கணி மொழி விக்கிமூலத்தில் இது போன்ற கலைக்களஞ்சியத்தைப் பதிவேற்றும் திட்டம் ஒன்று மாணவர்களுக்கு நிதி அளித்துச் செய்யப்படுகிறது. குசராத்தி விக்கிமூலத்தில் இது போன்ற ஒரு திட்டத்துக்கான முன்மொழிவு இருக்கிறது. ஏற்கனவே பொதுக்களத்தில் உள்ள ஆக்கங்களை ஆட்களைப் பணிக்கமர்த்தி விக்கிமூலத்தில் ஏற்றுவதை விக்கிமீடியா நிறுவனம் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்கிறது. எனவே, நாம் இத்திட்டத்தை எப்படி முன்னெடுக்கப் போகிறோம் என்று கலந்தாலோசித்து விரைந்து செயற்படுவது நன்றாக இருக்கும். பத்தாண்டு கொண்டாட்டம் குறித்து விக்கிமீடியாவுக்கு அளிக்க வேண்டிய அறிக்கையிலும் இத்தகவலைக் குறிப்பிட முடிந்தால் சிறப்பாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 08:22, 8 சூன் 2014 (UTC)[பதிலளி]

இரவி இது பற்றி இரண்டு மூன்று நாள்களில் தெரிவிக்கின்றேன். இரண்டு நாள்களுக்கு முன்னர் இதைப்பற்றி பேராசிரியர் பொன்னவைக்கோ (தமிழ் வளர்ச்சிக் கழக துணைத்தலைவர்) அவர்களும் தொ.பேசியில் அழைத்து இருந்தார். சில நாள்களில் இது பற்றிய நடவடிக்கைகள் முடுக்கம் பெறும். இங்கும் பகிர்கின்றேன். --செல்வா (பேச்சு) 14:15, 11 சூன் 2014 (UTC)[பதிலளி]
தகவலுக்கு நன்றி, செல்வா.--இரவி (பேச்சு) 13:47, 14 சூன் 2014 (UTC)[பதிலளி]