நூர்சியாவின் பெனடிக்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: vi:Biển Đức thành Norcia
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: lv:Nursijas Benedikts
வரிசை 115: வரிசை 115:
[[la:Benedictus de Nursia]]
[[la:Benedictus de Nursia]]
[[lij:San Beneito]]
[[lij:San Beneito]]
[[lv:Nursijas Benedikts]]
[[mk:Свети Бенедикт]]
[[mk:Свети Бенедикт]]
[[ml:നർസിയായിലെ ബെനഡിക്ട്]]
[[ml:നർസിയായിലെ ബെനഡിക്ട്]]

01:44, 6 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

நூர்சியா நகரின் புனித பெனடிக்ட்
புனித பெனடிக்ட்
ஓவியர்: ஃபிரா ஆன்ஜெலிக்கோ
துறவி, ஆதீனத் தலைவர்
பிறப்புசுமார் 480
நூர்சியா, இத்தாலி
இறப்பு543 (அகவை 63)
மோன்தே கசினோ
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
ஆங்கிலிக்க ஒன்றியம்
கிழக்கு மரபுவழி திருச்சபை
லூதரனியம்
புனிதர் பட்டம்1220, உரோமை நகரம் by மூன்றாம் ஹோனோரியஸ்
முக்கிய திருத்தலங்கள்இவரின் கல்லரையின் அமைவிடமான மோன்தே கசினோவில் உள்ள ஆலயம்
திருவிழாஜூலை 11
சித்தரிக்கப்படும் வகை-மணி
-உடைந்த தட்டு
-உடைந்த கோப்பை மற்றும் நஞ்சினைக்குறிக்க பாம்பு
-உடைந்த பாத்திரம்
-தூரிகை
பாதுகாவல்-நஞ்சினால் பாதிக்கப்பட்டோர்
-பில்லி சூனியத்திலிருந்து தப்ப
-உழவர்
-பொற் கொல்லர்
-மரண படுக்கையில் இருப்போர் -ஐரோப்பா
-காய்ச்சல்
-துறவற சபையினர்
-பிள்ளை
-தன் தலைவரின் உடமைகளை உடைத்த வேலைக்காரர்கள்
-பாவ சோதனை

நூர்சியாவின் புனித பெனடிக்ட் (இத்தாலியம்: San Benedetto da Norcia) (சுமார்.480–543) ஒரு கிறித்தவப் புனிதரும், கத்தோலிக்க திருச்சபையினால் ஐரோப்பா மற்றும் மாணவர்களுக்கு பாதுகாவலராகக் கருதப்படுபவர் ஆவார்.

இத்தாலியில், உரோமைக்கு 40 மைல்கள் (64 km) கிழக்கே உள்ள சிபாய்கோ என்னும் இதத்தில் இவர் 12 மடங்களைத் தோற்றுவித்தார். இதன்பின் இவர் தெற்கு இத்தாலியில் ஊள்ள மோன்தே கசினோவில் உள்ள மலைப்பகுதியில் தன் வாழ்வின் மீதியைக் கழித்தார்.

பெனடிக்டின் முக்கிய சாதனையாகக் கருதப்படுவது, இவர் தனது துறவிகளுக்கான கட்டளைகளைக் கொண்ட சட்ட நூல் ஒன்றைத் தொகுத்ததாகும். இதில் ஜான் சாசியானின் எழுத்துகளின் தாக்கம் பெரிதும் உள்ளது. இது நவீனத்துவம் மற்றும் நேரியத் தனித்துவம் பெற்றிருப்பதனால் இதனால் இடைக்காலத்தில் நிறுவப்பட்ட மடங்கள் அனைத்தும் இச்சட்டங்களையே ஏற்று பின்பற்றின. இந்த காரணத்தால், பெனடிக்ட் மேற்கு கிறித்தவ துறவறமடங்களின் நிறுவனர் என்று அழைக்கப்படுகிறார்.

இறப்பு

இவர் மோன்தே கசினோவில் நின்றுகொண்டு இறைவேண்டல் புரியும் போது இறந்தார். பாரம்பரியக் கூற்றின் படி இது நிகழ்ந்தது மார்ச் 21, 547.

1964இல் இவரை ஐரோப்பாவின் பாதுகாவலராக திருத்தந்தை ஆறாம் பவுல் அறிவித்தார்.[1]

இவரின் நினைவுநாளான மார்ச் 21, பெரும்பாலும் தவக்காலத்தில் வருவதால், இவரின் விழா நாள், இவரின் மீப்பொருட்கள் பிரான்சுக்கு கொன்டுவரப்பட்ட நாளான ஜூலை 11இல் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் விருப்ப நினைவாக இடம் பெருகின்றது.

கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவரின் விழாநாள் மார்ச் 14 ஆகும்.[2] ஆங்கிலிக்க ஒன்றியம் இவரை ஜூலை 11இல் நினைவு கூர்கின்றது.

பெனடிக்டின் சட்டங்கள்

இவை இவரால் இயற்றப்பட்ட எழுபத்தி மூன்று குறுகிய அதிகாரங்களை உடைய சட்ட தொகுப்பு ஆகும். இச்சட்டங்கள் ஒரு மடத்தை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் மற்றும் ஒரு மடத்தில் எவ்வாறு வாழ்வது என்பது குறித்து விளக்குகின்றது. மடத்தின் தலைவருக்கு எவ்வாறு கீழ்ப்படிய வேண்டும் எனவும், அவ்வாறு கீழ்படியாதோருக்கான தண்டனை மற்றும் மடத்தின் தலைவருக்கான கடமைகள் முதலியன இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் காண்க

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Benedict of Nursia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதாரங்கள்

  1. "St. Benedict of Nursia". Catholic Online. பார்க்கப்பட்ட நாள் 2008-07-31.
  2. Orthodox Church in America: The Lives of the Saints, March 14th

 இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது:  "St. Benedict of Nursia". Catholic Encyclopedia. (1913). நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன். 

புனித பெனடிக்ட் குறித்தான படக்காட்சியகம்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூர்சியாவின்_பெனடிக்ட்&oldid=1339649" இலிருந்து மீள்விக்கப்பட்டது