உள்ளடக்கத்துக்குச் செல்

ஆழ்வார்குறிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆழ்வார்குறிச்சி
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

10,043 (2011)

715/km2 (1,852/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 14.05 சதுர கிலோமீட்டர்கள் (5.42 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/alwarkurichi

ஆழ்வார்குறிச்சி (ஆங்கிலம்:Alwarkurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் தென்காசி வட்டத்தில்இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள சிவசைசலத்தில் உள்ள சிவசைலம் கோயிலில் பங்குனி மாதம் கடைசி நாள் அன்று பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதருக்குத் தேர் திருவிழா நடைபெறுகிறது மேலும் தை பூசத்தன்று தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது.[3]

அமைவிடம்

[தொகு]

இது திருநெல்வேலிக்கு மேற்கில் 58 கிமீ தொலைவிலும், தென்காசிக்கு தெற்கில் 23 கிமீ தொலைவிலும், வடக்கில் அம்பாசமுத்திரம் 12 கிமீ தொலைவிலும், கிழக்கில் விக்கிரமசிங்கபுரம் 10 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் அமைந்த தொடருந்து நிலையம் 2 கிமீ தொலைவில் உள்ள ஆழ்வார்குறிச்சி ஆகும்.[4]

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

14.05 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 77 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி 2793 வீடுகளும், 10,043 மக்கள்தொகையும் கொண்டது.[6][7]

கல்வி நிறுவனங்கள்

[தொகு]
  • ஸ்ரீ பரமகல்யாணி கலைக் கல்லூரி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. ஆழ்வார்குறிச்சி கோயிலில் தைப்பூசத் தெப்பத் திருவிழா. தினமணி இதழ். 20-செப்டம்பர் -2012. {{cite book}}: Check date values in: |year= (help)
  4. AZK/Azhwarkurichi ஆழ்வார்குறிச்சி தொடருந்து நிலையம்
  5. "ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-17.
  6. "ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2020-11-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-17.
  7. Alwarkurichi Population Census


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழ்வார்குறிச்சி&oldid=3406971" இலிருந்து மீள்விக்கப்பட்டது