சிவசைலம்

ஆள்கூறுகள்: 8°55′N 77°24′E / 8.92°N 77.4°E / 8.92; 77.4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவசைலம்
சிவசைலம்
இருப்பிடம்: சிவசைலம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°55′N 77°24′E / 8.92°N 77.4°E / 8.92; 77.4
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன், இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


95 மீட்டர்கள் (312 அடி)

குறியீடுகள்


சிவசைலம் (Sivasailam) என்பது தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கருணை ஆற்றுக் (கடனாநதி) கரையில் அமைந்துள்ள ஒரு ஊராட்சி ஆகும்.இவ்வூர் தென்காசிக்கு தெற்கே 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.சிவசைலம் துணை கிராமங்கள், பெத்தான்பிள்ளை குடியிருப்பு, இராமநாதபுரம், அதிரியானூர் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகும்.

மணிமண்டபம்

புவியியல் தகவல்[தொகு]

கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 95 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. இக்கிராமத்தை பூவன்குறிச்சி, சம்பங்குளம், ஆழ்வார்குறிச்சி மற்றும் செட்டிகுளம் மற்றும் பெத்தன்பிள்ளை குடியிருப்பு, இராமநாதபுரம், அதிரியானூர் மற்றும் புதுக்குடியிருப்பு குக்கிராமங்கள் சூழ்கின்றன. திருநெல்வேலி நகரத்தில் இருந்து 50கி. மீ மேற்கில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.[3]

கல்வெட்டு[தொகு]

பூவன்குறிச்சி ஏரியில் ஆண்டு 1916 போது ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அது சிவசைலம் கோயில் கல்வெட்டு எண்.519 உள்ளது. கல்வெட்டு ஆம்பூர் , ஆழ்வார்குறிச்சி, பூவன்குறிச்சி, கடயம், கிருஷ்ணாபுரம் போன்ற இடங்களில் மக்களிடம் கடவுளுக்கு வரி சேகரிக்கப்பட்டது என்று சொல்கிறது . 1916 ல் மற்றொரு கல்வெட்டு ஆம்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்வெட்டு எண் 518 ராஜா ரவிவர்மன் பற்றி சொல்கிறது. இந்த கோவிலின் இணையதளம்[1]

போக்குவரத்து தகவல்[தொகு]

சிவசைலத்திற்கு அருகில் உள்ள தொடருந்து நிலையம் ஆழ்வார்குறிச்சி.

பேருந்து போக்குவரத்து[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. Sivasailam Map

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சிவசைலம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவசைலம்&oldid=3678696" இலிருந்து மீள்விக்கப்பட்டது