முல்சி அணை

ஆள்கூறுகள்: 18°32′39″N 73°27′54″E / 18.5440654°N 73.4649509°E / 18.5440654; 73.4649509
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முல்சி அணை
Mulshi Dam
முல்சி அணை புனே அருகில்
முல்சி அணை is located in மகாராட்டிரம்
முல்சி அணை
Location of முல்சி அணை
Mulshi Dam in மகாராட்டிரம்
அதிகாரபூர்வ பெயர்முல்சி அணை
அமைவிடம்புனே மாவட்டம், மகராட்டிரம்
இந்தியா
புவியியல் ஆள்கூற்று18°32′39″N 73°27′54″E / 18.5440654°N 73.4649509°E / 18.5440654; 73.4649509
திறந்தது1927
உரிமையாளர்(கள்)டாட்டா
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுமுல்லா ஆறு
உயரம்48.8 m
நீளம்1533.38 m
வழிகால் அளவு1892 m3/s
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்முல்சி
மொத்தம் கொள் அளவு0.0523 km3 (0.0125 cu mi)
மின் நிலையம்
சுழலிகள்6 x 25, 1 x 150
நிறுவப்பட்ட திறன்300 மெகாவாற்


முல்சி அணை (Mulshi Dam) என்பது இந்தியாவின் முளா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு பெரிய அணை ஆகும்.[1] இந்த அணை மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தின் முல்சி வட்ட நிர்வாகப் பிரிவில் அமைந்துள்ளது.

அணையிலிருந்து வரும் நீர்ப் பாசனத்திற்கும், டாடா பவர் நிறுவனத்தால் இயக்கப்படும் பீரா நீர்மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையம் 1927-ல் நிறுவப்பட்ட ஆறு 25 மெகாவாற் பெல்டன் விசையாழிகளையும் ஒரு 150 மெகாவாட் எக்கி சேமிப்பு அலகினையும் இயக்குகிறது. கிருஷ்ணா ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள இந்த நீர்த்தேக்கத்திலிருந்து நீர் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக பீரா மின் நிலையத்திற்குத் திருப்பி விடப்படுகிறது.

1920–21ஆம் ஆண்டுகளில் அணைக்கட்டப்பட்ட போது பாண்டுரங் மகாதேவ பாப்பட் இந்த அணைக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தினை முன்னெடுத்து முல்சி சத்தியாகிரகப் போராட்டம் மேற்கொண்டார். இந்த முன்னெடுப்பிற்காக இவர் சேனாபதி என்று அழைக்கப்படுகிறார்..[2][3]

சுற்றுலா[தொகு]

சமீப ஆண்டுகளில் முல்சி மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் சுற்றுலாத் தலமாக உருவாக்கப்பட்டு, ஓய்வுநேர விருந்தினர்களுக்கான தங்குமிடங்களும் கட்டப்பட்டுள்ளன. புனேவிலிருந்து சுமார் 2 மணிநேர பயண தூரத்தில் இருக்கும் இந்த இடம் வார இறுதி நாட்களில் சுற்றுலா ஈர்ப்பு தலமாக உள்ளது. முல்சிக்கு வருகை தருவதற்கு ஆகத்து முதல் அக்டோபர் வரை சிறந்த நேரம்.

முல்சி அணை

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mulshi_Dam_D03170". Archived from the original on 14 July 2018. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.
  2. Gadgil, Madhav; Guha, Ramachandra (2013). Ecology and Equity: The Use and Abuse of Nature in Contemporary India. Routledge. பக். 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781135634889. https://books.google.com/books?id=eOiBes9QSJ0C&pg=PA69. 
  3. Cashman, Richard I. (1975). The Myth of the Lokamanya: Tilak and mass politics in Maharashtra. University of California. பக். 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780520024076. https://archive.org/details/mythoflokamanya00rich. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்சி_அணை&oldid=3783271" இலிருந்து மீள்விக்கப்பட்டது