உள்ளடக்கத்துக்குச் செல்

முதலாம் உபதிச்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உபதிச்சன் (பொ.பி. 370 - 410) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர்களுள் இருபத்து இரண்டாமானவன். இவனும் இவன் தந்தையான புத்ததாச லம்பகர்ணன் போல் மருத்துவ உதவிகளைச் செய்தவன். இராணியும் அண்ணன் உபதிச்சன் மனைவியுமானவள் இவனுடைய தம்பியான மகாநாமன் என்பவனிடம் கூடாவொழுக்கம் கொண்டிருந்தாள். அதன் காரணமாக மகாநாமன் பௌத்தப் பிக்குவாக மாறி மடத்திற்குச் சென்றான். இராணி சில நாட்களுக்குப் பின் உபதிச்சனைக் கொன்றாள். இதை அறிந்த மகாநாமன் அரண்மனைக்கு வந்து அரசாட்சியைக் கைப்பற்றினான்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சூல வம்சம், 37ஆம் பரிச்சேதம், 179-210

மூலநூல்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_உபதிச்சன்&oldid=1723542" இலிருந்து மீள்விக்கப்பட்டது