உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்- தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆவார். மாநிலத் தேர்தல் ஆணைய அமைப்பு திருத்தச் செயல் சட்டத்தின் கீழ் மாநிலம் மாற்றும் ஆட்சிப் பிரதேசங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்த அதிகாரங்கள் பெற்றது. அவ்வாணையத்தின் தலைவரான தலைமைத் தேர்தல் ஆணையர்

  • மாநகராட்சி,
  • மாவட்ட ஊராட்சி,
  • ஊராட்சி ஒன்றியம் மற்றும்
  • கிராம ஊராட்சி

இவைகளின் தேர்தல்களை நடத்தக்கூடியவர் ஆவார்.

மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரின் படி நிலை உயர் நீதி மன்ற நீதிபதிக்கு இணையாகக் கொண்டது.

தமிழ் நாடு மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரை தமிழக ஆளுநரே நியமனம் செய்கின்றார். மாவட்ட அளவில் மாவட்டத் தேர்தல் அலுவலர், மற்றும் மாவட்ட ஆட்சியரால் தேர்தல் நடத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. உள் அமைப்புத் தேர்தல்களை தேர்தல் அலுவலர் (ரிட்டனிங் ஆபிசர்) நடத்துகின்றார்.

இதன் தற்போதைய தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக திரு. Malik feroskan இ ஆ ப பதவி வகிக்கின்றார்.

உள்ளாட்சித் தொகுதிகள்

[தொகு]

தமிழகத்தின் உள்ளாட்சித் தொகுதிகள் மற்றும் பதவிகள்[1]

எண் அலுவலகம் இருக்கைகள் / அலுவலகம்
1 மாநகராட்சி மேயர் 21
2 மாநகராட்சி உறுப்பினர்கள் (கவுன்சிலர்-நகாரட்சி உறுப்பினர்) 474
3 நகராட்சித் தலைவர்கள் 132
4 நகராட்சி உறுப்பினர்கள் 3,392
5 மூன்றாம் படி நகராட்சித் தலைவர்கள் 50
6 மூன்றாம் படி நகராட்சி உறுப்பினர்கள் 969
7 மாவட்ட ஊராட்சி வட்ட (வார்டு) உறுப்பினர்கள் 656
8 ஊராட்சி ஒன்றிய வட்ட உறுப்பினர்கள் 6,570
9 பேரூராட்சித் தலைவர்கள் (டவுன் பஞ்சாயத்) 561
10 பேரூராட்சி வட்ட உறுப்பினர்கள் 6,825
11 கிராம ஊராட்சித் தலைவர்கள் (பிரசிடன்ட்) 12,618
12 கிராம ஊராட்சி வட்ட உறுப்பினர்கள் 97,458

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்-அதிகமாக கேட்கப்படும் கேள்விகள்". Archived from the original on 2009-02-27. Retrieved 2009-03-17.

வெளியிணைப்புகள்

[தொகு]